Posts

Showing posts from April, 2010

மேதினச் செய்தியில் ஜனாதிபதி

Image
தேசிய அபிவிருதியினூடாக இந்த நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றியமைக்க இன்றைய தொழிலாளா தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த மாதம் இந்தியா விஜயம்!

Image
இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா கல்முனை நியூஸ் இணையதளத்திற்கு தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தின் பல்வேறு உயர் மட்ட பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்கவிருப்பதாகவும் தற்போது கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அண்மையில் இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை வந்திருந்த வேளை சந்திரகாந்தனை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 வயது பாடசாலை மாணவியை கற்பழித்த சீனப் பிரஜை

Image
புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் சம்பவம் புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலைப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜையொருவர் புத்தளம் விசேட பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதுச் சிறுமியான பாடசாலை மாணவியை கற்பழித்த குற்றத்திற்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த சிறுமையை நாசுக்காக பேசி மூடிய லாரி ஒன்றினுள் ஏற்றி கற்பழித்தாக தெரிவிக்க படுகின்றது 32 வயதான இந்த சீனப் பிரஜை மின்சார தொழில் பிரிவில் வேலை செய்பவர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் கோபமுற்றுள்ள அந்த பகுதி மக்கள் சீனர்களைத் தாக்கலாம் என்ற அச்சத்தில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மூதூர் போக்குவரத்தில் பாதிப்பு.

Image
மூதூர் இற்கும்   கிண்ணியாவிற்குமிடையில் பிரதான வீதியின்    உள்ள   கங்கைப்படகுப்பாதையில் துவாரம் ஏற்பட்டு பாதையினுள் நீர் புகுந்ததனால்   போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் பொது மக்கள் பெரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.   இதன்காரணமாக போக்குவரத்துதடைப்பட்டு காணப்படுவதுடன் இப்பிரதேசமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அமைச்சர் அதாவுல்லா பதவி ஏற்பு

Image
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா வியாழக்கிழமை கொழும்பு யூனியன் பிளசில் உள்ள உள்ளூராட்சி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்    இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள் உட்பட கிழக்கின் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கு பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி!

Image
பொலிஸ் மா அதிபர் தகவல் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன் மூலம் மக்களுக்குத் தேவையான சேவைகளை சிறந்த முறையில் வழங்க முடியும் என்று எதிர் பார்பதாகவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

G-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு

Image
எதிர்வரும் மே மாதம் 17ம் திகதி ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் G-15 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது 989ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.இதன் முதல் மகாநாடு 1990 இல் மலேசியாவில் நடைபெற்றது இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது ஜனாதிபதி தனது கடந்த பதவிகாலத்தில் ஈரானுக்கு இரண்டு தடவைகள் விஜயம் செய்துள்ளார் என்பது குறிபிடதக்கது இந்த முறை விஜயத்தின் போது ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். G-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. என்பதுடன் இரண்டு நாள் நடைபெறவுள்ள மாநாட்டின் போது தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. ஈரான் பல வழிகளிலும் இலங்கை பொருளாதரத்துக்கு உதவி வரும் நாடு என்பது இலங்கையின் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு என்பதும் குறிபிட தக்கது

30 வருடங்களின் பின் நாடெங்கும் சனத்தொகைக் கணக்கெடுப்பு

Image
முப்பது வருடங்களுக்குப் பின்னர், நாடுமுழுவதிலும் சனத் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2011ஆம் ஆண்டு இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள இயக்குநர் நாயகம் டி.பி.பி.எஸ். விஜயரத்ன தெரிவித்தார். 1981ஆம் ஆண்டு நாடு முழுவதும் சனத்தொகை கணக்கெடுப்பு முதல்முதலில் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் கணக்கெடுக்கப்பட்டன. எனினும் அது நாடு முழுவதும் நடத்தப்படவில்லை. அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்த பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனதையிட்டே நாடு முழுவதிலும் இந்தக் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது என்றும் அவர் கூறினார். அந்த வகையில் 30வருடங்களுக்குப் பின்னர் நாடு முழுவதும் நடத்தப்படும் முதலாவது கணக்கெடுப்பு இதுவாகும். இந்நிலையில் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை என்பவற்றைச் சேகரிப்பதுடன் தொடர்புடையதான ஆரம்பப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனத்தொகை கணக்கெடுப்புக்கென திணைக்களம் தற்போது தேவை...

அம்பாறை மாவட்டத்தில் அதிசிறப்பு சித்தி பெற்ற மாணவிக்கு பாராட்டு

Image
அண்மையில் வெளியான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு இராமகிருஷ்ண மிசன் பெண்கள் பாடசாலை மாணவி தேவேந்திரன் சுகன்னியா அனைத்துப் பாடங்களிலும் அதிசிறப்பு சித்தி பெற்றுள்ளார். இப்பாடசாலையின் வரலாற்றில் இம்மாணவியே முதற்தடவையாக அனைத்து பாடங்களிலும் அதிசிறப்பு சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவியை பாராட்டும் வைபவம் காரைதீவு இராமகிருஷ்ண மிசன் பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் கே.யோகராசா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்திற்கு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ்வைபவத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர் சமுகநேயன் பொ.பியசேன அதிபர் கே.யோகராசாவால் மாலை சூட்டப்பட்டி வரவேற்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அதிசிறப்பு சித்தி பெற்ற சுகன்னியாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுக் கிண்ணத்தை வழங்கி கௌரவித்தார்.

மயோன் முஸ்தபாவிற்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்.

Image
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் பொன்சேகாவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சரான மயோன் முஸ்தபா, ஜாதிக்க நிதாகஸ் பெரமுன வின் முன்நிலை உறுப்பினரும் முன்னாள் பாராளுன்ற உறுப்பினருமான முஸம்மிலுக்கு 43 லட்சம் ரூபா லஞ்சம் வழங்க முற்பட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மயோன் முஸ்தபாவின் இச்செயற்பாடானது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் ஆதாரங்களாக தொலைபேசி உரையாடல்களுக்கான ஒலிப்பதிவுகள் மற்றும் சந்திப்புக்களுக்கான வீடியோ பதிவுகள் என்பன நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன் சாட்சிகளாக 21 பேரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கு

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹர் ஸாலி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கல்முனை நியூஸ் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார் தற்போது , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனைத்துப் பொறுப்புக்களும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பொறுப்பில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது . இதேவேளை , கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மாட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை ஜவாஹர் ஸாலி பெற்றார் .

அரசியலிலும் ,மக்களோடும் தொடர்ந்து இருக்க பேரியல் அஸ்ரப் முடிவு

Image
கடந்தநாடளுமன்றத் தேர்தலில் தன்னால் வெற்றியடைய முடியாத நிலை ஏற்பட்ட போதும்,அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடவிருப்பதாக முன்னாள் அமைச்சர்பேரியல் அஷ்ரப் கல்முனை நியூஸ் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் வெளிநாட்டு உயர்ஸ்தானிகராகநியமிக்கப்படவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுசம்பந்தமாக கல்முனை நியூஸ் இணையத்தளம் அவரிடம் வினவியது. இதற்குப் பதிலளித்த அவர்,வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் பதவி எதனையும் தான் அரசிடம் கோரவில்லையென்றும் இது சம்பந்தமாக தனக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கடந்த பொதுதேர்தலில் மக்கள் தன்னை தெரிவு செய்யாத போதிலும் கூட அவர்களைவிட்டு ஒதுங்கியிருக்க தான் தயாரில்லை என்றும், தொடர்ந்து மக்களுக்குசேவையாற்றவிருப்பதாகவும் பேரியல் அஷ்ரப் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் மேலும் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன

Image
இந்த ஆண்டில் இன்னும் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வட மாகாணசபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பகுதி பகுதியாக இந்த ஆண்டின் எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதிலும் நடைபெறவுள்ளது. குறித்த இரண்டு தேர்தல்களும் பூர்த்தியடைந்தால் சில காலங்களுக்கு எந்தவொரு தேர்தலும் நடைபெறாது என அரசாங்கத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.  

பாண்டிருப்பு அரசடி அம்பாள் ஆலய வருடாந்த கொடியேற்றம்.

Image
பாண்டிருப்பு அரசடி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான கொடியேற்றம் அண்மையில் நடை பெற்றது

ஹிஸ்புல்லாவுக்கு காத்தான்குடியில் வரவேற்பு.

Image
கிஸ்புல்லாவுக்கு காத்தான்குடியில் வரவேற்பு. பிரதியமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாவுக்கு இன்று காத்தான்குடிக்கு வருகைதந்நபோது திறந்த வாகனத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. காத்தான்குடியில் உள்ள சகல வீதிகளுக்கும் வாகனத்தில் சென்று மக்களுக்கு கைகளை அசைத்துச்சென்றார்.அத்துடன் காத்தான்குடிகடற்கரையில் மக்களுடன் விருந்துண்டு மகிழவுள்ளதுடன் ,இன்று மாலை குட்வின் சந்தியில் பிரமாண்டமான போதுக்கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கிழக்குமாகாணசபை, உள்ளுராட்சிமன்றங்களில் முறைகேடுகள்

Image
சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி நடத்தி வரும் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மற்றும் நிர்வாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடுகள், அரச வாகன துஸ்பிரயோகம், நியமனங்களில் முறைகேடு என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடாது தனித்து போட்டியிடத் தீர்மானித்தன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணசபையிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள் ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கணனிக் கொள்வனவு, தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியை கலைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்...

ஆறுமுகன் இன்று அல்லது நாளையோ அமைச்சுப் பதவி ஏற்பார்

Image
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பி இன்று அல்லது நாளை அமைச்சுப்பதவி பொறுப்பு எடுக்கவுள்ளார்.. எனினும் இது தொடர்பில் இன்னமும் முடிவுகள் எட்டப்படவில்லையெனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது . .

விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய உடையை தவிர்க்க தயாரா ?

Image
பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்திற்கு விரிவுரையாளர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வில் பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்திற்கு விரிவுரையாளர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வில் இஸ்லாமிய உடையான ஹிஜாப் பற்றியும் அந்த இஸ்லாமிய உடையை தவிக்க முடியுமா என்பது பற்றியும் தேர்வில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண்களிடம் வினவபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்திற்கு தற்காலிக ஆங்கில , தமிழ் மொழி விரிவுரையாளர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வில் இரு முஸ்லிம் பெண்களும் ஒரு தமிழ் பெண்ணும் அழைக்கபட்டனர் நேர்முக தேர்வில் முடிவில் மேலதிக தகமையாக நிபந்தனை ஒன்றை முன்வைத்து அதற்கு தனிப்பட்ட முறையில் தீர்வுக்கு வரமுடியாவிட்டால் பெற்றோரின் சம்மதத்துடன் தெரிவித்துள்ளனர் - அந்த கேள்வி இவ்வாறு அமைந்துள்ளது 'விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய உடையை தவிர்க்க தயாரா' ? என்பதாகும் இந்த தேர்வில் மேலதிக தகமையாக விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய உடையை தவிர்க்க தயாரா என்பதுடன் இஸ்லாமிய உடை பற்றி விளக்கம் ஒன்றும் முன்வைக்கப்ப...

சாய்ந்தமருதுக்கு தனி பிரதேச சபை

Image
கடந்த பொதுத் தேர்தலின் போது சாய்ந்தமருதுக்கான தனி பிரதேச சபை கோரிக்கை முன் வைத்து அமைச்சர் அதாவுல்லாவுக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழுக்களும் , பொது அமைப்புக்களும் ஆதரவு வழங்கி மகஜரும் கையளித்திருந்தனர் . தேர்தலில் வெற்றி பெற்ற அதாவுல்லா மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் . புதிய பிர தேச சபை உருவாக்கம் என்பது உள்ளூராட்சி அமைச்சின் பொறுப்பில் உள்ளது . மிக விரைவாக சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்தெடுக்கப் படுமா ?

சாய்ந்தமருது பகுதியில் மீண்டும் சோதனைச் சாவடி

Image
அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் மீண்டும் சோதனைச் சாவடியொன்று முளைத்திருப்பதால் அப்பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த காலங்களிலும் சாய்ந்தமருது கல்முனைக்குடி பிரதான வீதிகளில் பல்வேறு இடங்களில் பொலீஸ் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு அவை மக்களின் எதிர்ப்பினால் அகற்றப்பட்டன. ஆனால், மீண்டும் இப்பிரதேசங்களில் பொலீஸ் சோதனைச் சாவடி நிறுவப்பட்டிருப்பதால் வேதாளம் முருங்கை மரமேறிய கதையாய் பிரதேச மக்கள் பல்வேறு இடைஞ்சல்களுக்கு உள்ளாகிவருகின்றனர். எனவே குறித்த சோதனைச் சாவடியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனர்.

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவிருப்பதாக தகவல்

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவிருப்பதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன . ஏற்கனவே 37 அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மேலதிகமாக ஐந்து அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. கண்டி மாவட்டத்திற்கு மூன்று அமைச்சுப் பதவிகளும், ஏனைய பகுதிகளுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெஹலிய ரம்புக்வெலவுக்கு ஊடக அமைச்சுப் பொறுப்பு

Image
விரைவில் கெஹலிய ரம்புகவெல்லவிற்கு ஊடக அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் என தெரியவருகிறது. எவ்வாறெனினும், அமைச்சுப் பொறுப்பொன்றை வழங்குவது குறித்து இதுவரையில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என கெஹலிய தெரிவித்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை நடத்தி வருகின்ற காரணத்தினால் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் வழங்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தில் கெஹலிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

சமைத்த உணவு நச்சுத் தன்மை14 பேர் வைத்தியசாலையில்

Image
சாப்பிட்ட உணவு நச்சுத் தன்மையடைந்ததனால் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஏறாவூர்சதாம் ஹுசைன் ஸைன் மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் ஏறாவூர் மாவட்டவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மாவட்ட வைத்தியதிகாரிஏ.சீ.எம்.பழில் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சிறுவர்களும் 7 பெண்களும் அடங்குவர். குடும்ப உறவினர்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் சமைத்து சாப்பிட்டுள்ளனர் இவர்களுக்குசற்று நேரத்தில் வயிற்று நோவும், வாந்தி, தலைசுற்று மயக்கம் ஏற்பட்டதாகதெரிவிக்கபட்டுள்ளதாகவும் இதையடுத்து இவர்கள் அயலவர்களினால்வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் சமைத்தஉணவு நச்சுத் தன்மையடைந்ததனால் இப்பாதிப்பு ஏற்றபடடுள்ளதாக வைத்தியதிகாரிகுறிப்பிட்டார்

கல்முனை சம்பத் வங்கி 365 நாள் சேவை

Image
கல்முனை சம்பத் வங்கி கிளை 365 நாள் சேவையை வடக்கு கிழக்கில் முதல் தடவையாக ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களை அறிவுறுத்தும் சந்திப்பு நேற்று வங்கி முகாமையாளர் நிதர்சன் டேவிட் தலமையில் நடை பெற்றது.

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற பதவி சுழற்சி முறையில் பகிரப்படும்?

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ள இரண்டு ஆசனங்களில் ஒன்று கிழக்கிலும் மற்றையது மேல் மாகாணத்திலும் சுழற்சி அடிப்படையில் பகிரப்படும் என தெரியவருகின்றது. தற்பொழுது களுத்தறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எதிர்காலத்தில் கொழும்பு, கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி, மூதூர் ஆகிய பிரதேசங்களுக்கும் பகிரப்படும். இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசனலியிடம் கல்முனை நியூஸ் இணையம் வினவியபோது, முதற்கட்டமாக கட்சியின் சிரேஷ்டத்துவம் மற்றும் கட்சிக்கு மிக நம்பிக்கைகுரியவர்கள் என்றடிப்படையில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியின் உயர் பீடம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமச் செய்ய வேண்டிக் கொள்ளும் போது தாங்கள் இருவரும் இராஜினாமச் செய்ய தயார் என்றார் ஹசனலி. இதேவ...

Sampath Bank to extend activities for 365 days in Kalmunai

The Sampath Bank in Kalmunai is the first bank in the eastern province to extend its banking services to customers for 365 days of the year. The Kalmunai branch of the Sampath bank that has become popular and leading in pawning within a short spell of time is to attract its customers extending its services through out the year. Sampath Bank, which started its banking activities in Kalmunai on August 30, 2008, is extending its activities through out the year for 365 days without closing. The bank will be open even on public, bank and mercantile holidays for customers to carry on their businesses with the bank. The Branch Manager Mr.Nitharshan David of the bank has informed the 365 days banking activities will commence from the 2 nd of May this year.

புதிய அமைச்சர்கள் ,விபரம்

Image

உள்ளூராட்சி அமைச்சராக அதாஉல்லாஹ்

Image
உள்ளூராட்சி ,மாகாண சபைகள் அமைச்சராக அதாஉல்லாஹ் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஐ.தே.க முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து காதர் இராஜினாமா

Image
ஐ. தே. கவின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய கண்டி மாவட்ட எம்.பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் முடிவு செய்துள்ளார். அடுத்தடுத்து கட்சியில் அவர் வகிக்கும் ஏனைய பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்யவும் காதர் எம்.பி. தீர்மானித்துள்ளார். இராஜினாமாக் கடிதங்களை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காதர் எம்.பி. கல்முனை இனைய தளத்துக்கு தெரிவித்தார்.

கல்முனை தமிழ் கலாசார மண்டபம் அமையுமா?

Image
பல வருட காலமாக பெயர் பலகையுடன் காணப்படும் கல்முனை தமிழ் கலாசார மண்டபம் எப்போது அமைக்கப்படுமென மக்கள் கேட்கின்றனர்.

முன்னாள் போராளிகளுடன் முதலமைச்சர் சந்திரகாந்தன் சிநேகபூர்வ கலந்துரையாடல்.

Image
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று கிழக்கில் அமைந்துள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு முகாமிற்கு சென்று அவரது முன்னாள் நண்பர்களுடன் சிநேகபூர்வமாக இன்று முழுநாளையுமே செலவழித்தார். மிகவும் ஆர்வத்தோடு முதல்வரின் வருகையினை எதிர்பார்த்திருந்த முன்னாள் போராளிகள் மிகவும் சந்தோசத்துடன் கைதட்டி வரவேற்றனர் .

இவரை தாயார் தேடுகின்றார்.

Image
கிழக்கு மாகாணம் காரைதீவைச் சேர்ந்த 35 வயதான கந்தசாமி நிமலதாசன் என்பவர் 2007 இல் காணாமல் போயிருக்கிறார். எனினும் 2007இல் காணாமல் போன நிமலதாசன் தற்போது யாழ்ப்பாணத்தில் உலவுவதாக அவருடைய தாயாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. பிரஸ்தாப நிமலதாசனை யாழ்ப்பாணத்தில் கோயில்களிலும் பொது இடங்களிலும் கண்ட பலர் இத்தகவலை வழங்கியுள்ளனர். அவர் சற்று மூளைக்கோளாறுக்கு ஆட்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகின்றது. நீண்ட தாடியுடைய நிமலதாசன், நீளக் காற்சட்டை அல்லது சாரம் அணிந்து திரிவதாக தகவல் கிடைத்திருக்கிறது. 2007ல் வீட்டில் சிறு பிரச்சினை காரணமாக வேலைக்குச் செல்வதாகக் கூறி கிளிநொச்சிக்கு சென்ற அவர் பின்னர் யுத்தம் காரணமாக யாழ்ப்பணத்திற்குச் சென்றிருக்கிறார். இவரது தாயார் கன்னிகாவதி பொலிஸிலும், மனித உரிமை ஆணைக்குழுவிடம் ஏற்கெனவே இது தொடர்பாக முறைப்பாடு தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில...

அழைப்பு விடுக்கப்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கொள்ள வேன்டும் -அஷ்ஷெய்க் மஸீத்தீன் இனாமுல்லா

Image
தேர்தல்களுக்காகமுஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் கூட்டு உடன்பாடுகளை எந்தவொரு தேசியகட்சியுடனும் செய்து கொள்வது காலா காலம் ஒரு கட்சியிடம் சரணாகதிஅடைவதற்கல்ல. மாறாக தாம் ஆதரவளித்த தேசிய கட்சி அரசமைக்க தவறும்பட்சத்தில் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆளும் அரசிற்கு ஆதர்வளிப்பதன்மூலம் சமூக நலன்களை காப்பதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இன்றுநாட்டில் பலம் வய்ந்த அரசு ஆட்சி பீடம் ஏறியுள்ளது,போருக்கு பின்னரானபுதிய அரசியல் களநிலவரங்களை சரியாக கையாள்வதற்கான சரியானமுன்னெடுப்புக்களை ஜனதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே முஸ்லிம் காங்கிரஸ்எடுக்கத் தவறி விட்டது என்பதனை பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம்.மூன்றிலொரு பெரும்பான்மையுடன் தேர்தல் முறை மறுசீரமைப்பு, அரசியலமைப்புசீர்திருத்தம்,அரசியல் தீர்வொன்றிற்கான முன்னெடுப்புக்கள் என பல வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகள் விரைவில் மெற்கொள்ளப்படவுள்ளநிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு வெறும்பார்வையளராக இன்னும் பல தசாப்தங்களை கடத்தி விடக்கூடாது. திருப்திகரமானஅமைச்சுப்பதவிகள்,கவற்சிகரமான் பதவிகள் குறித்த இழுபறிகளுக்கப்பால் சமூகம்ச...

கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவராக மு.கா உறுப்பினர் ஜெமீல் நியமனம்

Image
வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சாய்ந்தமருதை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் நியமிக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஆவார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கட்சியின் வெற்றிக்காக ஜெமீல் பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. (கல்)

அரசின் 144 ஆசனங்களுடன் மேலும் 2 ஆசனங்கள் இணைகின்றது

Image
அரசியல் கள நிலவரம்  அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 4 ஆசனங்கள் மட்டும்தான் தேவை ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் பிளவு மேலும் இரு ஆசனங்களை அரசு பெற்று ஆசனங்களின் எண்ணிக்கையை 146 ஆக உயர்த்துகின்றது. ஆளும் தரப்பான  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மேலும் இரு ஆசனங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்க படுகின்றதுஅரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு 150 ஆசனங்களை தனதாக்க வேண்டும்  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் குறிவைத்திருந்தது எனிலும்  தேசிய பட்டியலுடன் 144 ஆசனங்கள்  பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை  பலத்தை பெறுவதற்கு இன்னும் 6 உறுப்பினர்கள் அரசுடன் இணைய வேண்டும் என்ற நிலை காணப்பட்டது இன்று கிடைக்கும் தகவல்கள் மேலும் இரண்டு  பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலக அரசுக்கு தமது ஆதரவை வழங்கமுடிவு செய்திருப்பதாக தெரிவிக்க படுகின்றது மனோ கணேசன் தலைமையிலான  ஜனநாயக மக்கள் முன்னணி , ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசி...

புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது

Image
புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 குறைத்துள்ளது கடந்த பாராளுமன்றத்தில் 25 வரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தமை குறிபிட்ட தக்கது இங்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அவர்களின் கட்சி , அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் , அவர்களின் பிரதேசம் என்பன கீழ் தரப்பட்டுள்ளது - கடந்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பற்றிய விபரங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் பெயர் கட்சி பிரதேசம் 1. A.H.M.பௌசி- 51,641 UPFA கொழும்பு 2. A.L.M.அதவுல்லா 36,943 UPFA திகாமடுள்ள 3. H.M.M.ஹாரிஸ் – 44,755 UNF திகாமடுள்ள 4. M.C.M.பைசல் -41,852 UNF திகாமடுள்ள 5. M.L.M.ஹிஸ்புல்லாஹ் 22,256 UPFA மட்டகளப்பு 6. பஷீர் சேகு தாவுத்- 11678 UPFA மட்டகளப்பு 7. ரிஷாத் பதியுதீன் – 37,780 UPFA வன்னி 8. உனைஸ் -12,780 UPFA வன்னி 9. நூர்தீன் மசூர் – 10,870 UNF வன்னி 10. பைசர் முஸ்தபா – 44,648 UPFA கண்டி 11. காதர் ஹாஜி- 54,937 UNF கண்டி 12. ரவூப் ஹகீம்- ...

கட்சிகளின் தேசிய பட்டியலில் 03 முஸ்லிம்கள் மட்டும்

Image
தேசிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- ஏ எச் எம் அஸ்வர் ஐக்கிய தேசிய முன்னணி- எம் . ஹசன் அலி, அஸ்லம் முஹம்மத் சலீம் கட்சிகள் தமது தேசிய பட்டியலை அறிவித்துள்ளன இவற்றில் மொத்தமாக மூன்று முஸ்லிம்களின் பெயர்கள் மட்டும் இந்த முறை தேசிய பட்டியலில் உள்ளடக்கபட்டுள்ளது இதன் படி தேசிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- தனது 17 பேர்களை கொண்ட தேசிய பட்டியலில் எம் எச் எம் , அஸ்வரையும் ஐக்கிய தேசிய முன்னணி- தனது 9 பேர்களை கொண்ட தேசிய பட்டியலில் ஹசன் அலி , மற்றும் அஸ்லம் முஹம்மத் சலீம் ஆகிய இரண்டு முஸ்லிம்களின் பெயர்களை அறிவித்துள்ளன எனிலும் இவை இரண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டவை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லிம்கள் எவரின் பெயரும் இடம் பெறவில்லை என்பது குறிபிடதக்கது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வை.எல்.எஸ்.ஹமீட் என்பவரை தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்திருந்த போதும் குறித்த கட்சி சார்பாக எவரும் நியமிக்கப்படவில்லை

புதிய பிரதமராக டி.எம்.ஜயரட்ன இன்று மாலை பதவி ஏற்றார்

Image
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவருமான டி.எம்.ஜயரட்ன, இலங்கையின் 14ஆவது பிரதமராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதமர் பதவி தொடர்பில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, பசில் ராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், இன்று சுபநேரத்தில் திமு என அழைக்கப்படும் டி.எம். ஜயரட்ன பிரதமராகப் பதவியேற்றிருக்கின்றார். அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர், புதிதாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசியல் பிரமுகர்கள் இதன்போது வருகை தந்திருந்தனர். திசாநாயக்க முதியான்சலாகே ஜயரட்ன, 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி பிறந்தார். கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயரட்ன 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் நடந்த ஆறாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, கால்நடை அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்து வந்தவராவார்.

மேமாதம் முதலாம்திகதி முதல் தனியார் பஸ்களில் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் முற்றாகத் தடை

மேமாதம் முதலாம்திகதி முதல் தனியார் பஸ்களில் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் முற்றாகத் தடை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று தெரிவித்துள்ளார். இந்த முடிவு குறித்து பொலிஸ் மா அதிபரையும் போக்குவரத்து அமைச்சையும் அறிவூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பஸ்ஸினுள் பிச்சை எடுப்பதாலும் வியாபாரம் செய்வதாலும் பயணிகளுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகக் கூறிய அவர், பஸ்களில் பிச்சை எடுப்பதன்மூலம் 4 ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபாவரை ஒரு பிச்சைக்காரர் வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். பிச்சை எடுப்பதன் பின்னணியில் சில கும்பல்கள் இயங்குவதாகவும், இதனை தடுப்பதன்மூலம் குறித்த கும்பல்களால் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்றும் கூறிய அவர், அது தொடர்பில் பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வை.எல்.எஸ்.ஹமீட்டை தேசிய பட்டியல் நாடாளுமன்ற பதவிக்கு முன்மொழிவு

Image
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வை.எல்.எஸ்.ஹமீட்டின் பெயரை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக இன்று கல்முனை நியூஸ் இணையதளத்திடம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வை.எல்.எஸ்.ஹமீட் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நாடாளுமன்றத்துக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியீடு _

Image
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியிட...

கண்டி, திருகோணமலை மாவட்ட- முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம்- 5

ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்களில் அப்துல் காதர் ஹாஜி 54,937 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாவதாகவும்  ,  ரவூப் ஹகீம் 54,047 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளனர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA பைசர் முஸ்தபா – 44,648 வாக்குகள்- தெரிவானார் ஐக்கிய தேசிய முன்னணி- UNF காதர் ஹாஜி- தெரிவானார்- 54,937-வாக்குகள்- தெரிவானார் ரவூப் ஹகீம்- 54,047-வாக்குகள்- தெரிவானார் R.ஹலீம் – 46,240வாக்குகள்- தெரிவானார் திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர்களில் தமிழ்  தேசிய கூட்டமைப்பு  தலைவர் சம்மந்தன் 24, 488 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாவதாகவும்  ,   ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் எஸ் . எம்    தவ்பீக் 23,588 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளனர் ஐக்கிய தேசிய முன்னணி - எஸ் . எம்    தவ்பீக் - 23,588 வாக்குகள்- தெரிவானார்

UPFA to obtain almost 2/3 majority with the National List seats

Image
The ruling party of Sri Lanka, the UPFA has been able to secure a vast majority of seats at the Parliamentary General Election concluded yesterday evening with the completion of the re-polls at the Nawalapitiya Electorate in the Kandy District and the Kumburupiddi polling division of the Trincomalee District. of The UPFA obtained 10 out of 19 seats in Colombo, Gampaha – 12 (out of18), Kalutara – 7 (out 10), Kndy – 8 (out of 12), Matale – 4 (outof 5), Nuwara Eliya – 5 (out of 7 a ), Galle – 7 (out of 10), Matara – 6(out of 8), Hambantota – 5 (out of 7), Jaffna – 3 (out of 9), Vanni –2 (out of 6), Batticaloa – 1 (out of 5), Digamadulla – 4 (out of 7), Trincomalee – 2 (out of 4), Kurunegala – 10 (out of 15), Puttalam – 6(out of 8), Anuradhapura – 7 (out of 9), Polonnaruwa – 4 (out of 5), Badulla – 6 (out of 8), Moneragala – 4 (out of 5), Ratnapura – 7 (outof 10) and 7 out of 9 seats in the Kegalla...

சம்பந்தன் திருமலையில் முன்னணியில்

Image
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 24 ஆயிரத்து 488 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.தௌபீக் 23 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட சுசந்த புஞ்சிநிலமே 22 ஆயிரத்து 820 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

களுவாஞ்சிகுடி திரு யோக ஞான பீட ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் இந்தியா செல்லவுள்ளார் .

Image
இந்திய பிரம்பலூர் பிரம்ம ரிசி மலை அன்னை சித்தர் ராஜ் குமார் குருஜியின் அழைப்பை ஏற்று களுவாஞ்சிகுடி திரு யோக ஞான பீட ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் இந்தியா செல்லவுள்ளார் . சுவாமி மலையில் இடம்பெறும் 210 சிதர்களுககான பௌர்ணமி மகா யாகத்தில் ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் கலந்து கொள்வதுடன் பக்தர்களுக்கு அன்னதானம்,வாஸ்திரம்,அருள் உபதேசம் என்பன வழங்க உள்ளதாக திரு யோக ஞான பீடத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெளத்த மதத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சாரா மாலினி விடுதலை

Image
பெளத்த மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சாரா மாலினி பெரேரா நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் இஸ்லாம் பற்றி எழுதிய இரண்டு புத்தகங்கள் பெளத்தமதத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார். பஹ்ரைன் நாட்டில் வசிக்கும் இவர் அங்கிருந்தே இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டார்.

ஜனாதிபதி 22ம் திகதி பாராளுமன்றில் பேசமாட்டார். ரத்தனசிறியே பிரதமர்.

Image
ஏழாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமைஇடம்பெறவுள்ளது. இவ்வமர்வின் போது ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்ததிட்டமிட்டிருந்தார். அந்நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வியாழக்கிழமை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பிர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வர். அதேநேரம் புதிய பிரதம மந்திரி பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சகண்வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்துடன் கட்சியின் சிரேஸ்டஉறுப்பினர்கள் இருவர் தொடர்பாகவும் இவ்விடயத்தில் வதந்திகள்பரவியிருந்தது. அனால் முன்னாள் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்கவே புதியபிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்துதெரியவருகின்றது. புதிய சபாநாயகராக ஜனாதிபதியின் சகோதரர் சமல் ராஜபக்சநியமிக்கப்படவுள்ளார்.

கல்முனை மாநகர பிரதி மேயராக நற்பிட்டிமுனை தௌபீக்?

Image
கல்முனை மாநகர பிரதி மேயராக நட்பிட்டிமுனையை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர் உதுமா லெப்பை தௌபீக் நியமனம் செயப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொது தேர்தல் காலத்தில் வாக்களித்த பிரகாரம் நற்பிட்டிமுனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை கேட்டுள்ளனர். இது தொடர்பாக பேசுவதற்கு மாநகர சபை உறுப்பினர் தௌபீக் தலமையிலான குழுவினர் ரவூப் ஹக்கீமை சந்திக்க சென்றுள்ளனர். இதே வேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடத்தினால் பிரதி முதல்வராக நியமனம் செயப்பட்டிருக்கும் சாய்ந்தமருதை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர் எ.பசீர் முடியும் என்றால் என்னை தவிர வேறு ஒருவருக்கு கொடுத்து பார்க்கட்டும் என சவால் வித்துள்ளார். நட்பிட்டிமுனைக்கு பிரதி முதல்வர் பதவி வழங்கப்படாதவிடது முஸ்லிம் காங்கிரசில் ஒட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என தௌபீகின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார்?

Image
புதிய சாபாநாயகராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட உள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரரும், முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சருமான சமால் ராஜபக்ஷவை சபாநாயகராக நியமிப்பதற்கு எதிர்க்கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றின் பிரதி சபாநாயகர் பதவி மீண்டும் பிரியங்கர ஜயரட்னவிற்கு வழங்கப்படவுள்ளது. கடந்த இரண்டு தடவைகள் சபாநாயகர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப் பெற்றதனால் இம்முறை ஆளும் கட்சிக்கு வழங்குவதில் தடையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமரர் அனுர பண்டாரநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார ஆகியோர் கடந்த காலங்களில் சபாநாயகர் பதவியை வகித்தனர். எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றம் கூடியதன் பின்னர் சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது.