கடவுளின் பெயரால் மனித வாழ்வை அழிப்பது மதத்திற்கு முரணானது

உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தினால் உயிரிழந்த அனைவரது ஆத்மசாந்திக்காகவும், காயமடைந்தவர்கள் முழுமையாகக் குணமடையவும் கொழும்பு பேராயர் இல்லத்தில் விசேட தேவ ஆராதனை இன்று காலை இடம்பெற்றது. கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை நடத்தினார். இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருப்பலி ஒப்புக்கொடுத்தார். அதிமேற்றிராணியார் உரையாற்றுகையில் இந்தத் தாக்குதல் மனித செயற்பாடுகளுக்கு களங்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாகும் என்று தெரிவித்தார். கடவுளின் பெயரால் மனித வாழ்வை அழிப்பது முழுமையாக மதத்திற்கு மாறுபட்ட ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார். (அரசாங்க தகவல் திணைக்களம்)