8வயது பாலகிக்கு 53 கிழவனால் பாலியல் துன்புறுத்தல்
53 வயது முதியவரால் 8வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்ட சம்பவம் கல்முனை பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலை ஒன்றில் சிகிச்சைக்குட்படுதப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் நேற்று கல்முனையில் இடம் பெற்றுள்ளது . பாலியல் குற்றம் புரிந்தவர் என்ற சந்தேகத்தில் 53 வயதான அந்த முதியவர் கல்முனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விச்சாரணையின் பின்னர் இன்று வியாழக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கல்முனை மாநகர சபையில் சுகாதார தொழிலாளியாக பணி புரிகின்றவர் என தெரிவிக்கப் பட்டுள்ளது