Posts

Showing posts with the label தேர்தல்

பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி

Image
ஜூன் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு - நேரடி ஔிபரப்பு

Image
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. (பின்னிணைப்பு - 10.59 am)  புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்திலேயே தனது கடமைகளை சற்று முன்னர் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜனாதிபதியின் செயலாளராக பேராசிரியர் பி. பீ. ஜயசுந்தர நியமிக்கபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா

Image
தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அமைச்சுப் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விற்றர் கணக்கிலேயே இந்த கருத்தை தெரிவித்துள்ளார். Harin Fernando ‏ Verified account   @fernandoharin   3h 3 hours ago More Respecting the people's mandate I am stepping down as Minister of Sports, Telecommunications & Foreign Employment. I am also resigning from my positions at UNP. I Take this opportunity to thank every one who supported me in my tenure, hope good work done will be continued

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து

Image
ஐ.தே.க. உப பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதற்கு, புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ள சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் ஆணைக்கு கட்டுப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலகுவதாகவும், சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தன்னை ஜனாதிபதி பதவியில் நியமிக்க ஆதரவளித்தோர், தனக்காக முன்னின்றோர் உள்ளிட்ட அனைவருடனும் தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து எதிர்வரும் வாரங்களில், கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது 26 வருட அரசியல் வாழ்க்கை மற்றும் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்...

இதுவரை வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

Image
NDF Sajith Premadasa 579,822 48.25% SLPP Gotabaya Rajapaksa 532,806 44.34% NMPP Anura Kumara Dissanayaka 41,866 3.48% OTHER 41,943 3.49%

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள்

Image
கோடாபாய முன்னிலையில் SLPP Gotabaya Rajapaksa 347,555 50.81% NDF Sajith Premadasa 285,661 41.76% NMPP Anura Kumara Dissanayaka 29,555 4.32% NPP Mahesh Senanayake

முதலாவது பெறுபேறு இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்

Image
இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முழுமையான பெறுபேறுகளை 18 ஆம் திகதி திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இருப்பினும் முடிந்தவரை பெறுபேறுகளை விரைவாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். சிலவேளை இது நாளை மாலைக்கு முன்னதாக கூட இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் பதிலளித்தார். இதேவேளை இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு 80 சதவீதமாக அமைந்திருந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் முதலாவது தேர்தல் பெறுபேற்றை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இது தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் பெறுபேறாகும் என்றும் அவர் தெரிவித்தார். வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்திற்கும் அதிகரிக்கக்கூடும் ஏனெனில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வ...

நாடு பூராகவும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவு

Image
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி ​தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அதன்படி, நாடளாவிய ரீதியில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தளை, குருணாகலை, மாத்தறை, பதுளை, பொலன்னறுவை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் 80 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 75 சதவீத வாக்குப்பதிவும், யாழ்ப்பாணத்தில் 66 சதவீத வாக்குப்பதிவும், கிளிநொச்சியில் 73 சதவீத வாக்குப்பதிவும், மட்டக்களப்பில 77 சதவீத வாக்குப்பதிவும், இரத்தினபுரியில் 84 சதவீத வாக்குப்பதிவும், கம்பஹாவில் 81 சதவீத வாக்குப்பதிவும் கேகாலையில் 79 சதவீத வாக்குப்பதிவும் மற்றும் திருகோணமலையில் 83 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல், மொனராகலையில் 84 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவில் 76 சதவீத வாக்குகளும், கிளிநொச்சியில் 73 சதவீத வாக்குகளும், 76 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 75 சதவீத வாக்குக...

கல்முனையில் 65% வாக்களிப்பு

Image
நடை பெற்றுக்  கொண்டிருக்கும்  8வது  ஜனாதிபதி தேர்தலில் கல்முனை பிரதேசத்தில் மாலை நான்குமணி வரை 65%வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  தெரிவித்துள்ளார் . 5.00 மணிவரை வாக்களிக்கப்பட்டால் 75%ஐ  தாண்டலாம்  என அவர் தெரிவித்தார். மேலும் கல்முனை முஸ்லீம் பிரதேசத்தில் வாக்களிப்பை அதிகரிக்கும் வகையில் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலம் வாக்களிக்காத வாக்காளர்களை விரைந்து வாக்களிக்குமாறு பலதடவைகள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன .

நாட்டின் சில மாவட்டங்களில் 70 சதவீத வாக்குப்பதிவு

Image
இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிவரையில் 70 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 70 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், திருகோணமலை, குருணாகலை மற்றும் கொழும்பில் 60 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், புத்தளம், கம்பஹா, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 65 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. காலி மாவட்டத்தில் 67 சதவீத வாக்குப்பதிவும் யாழ்ப்பாணத்தில் 54 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

Image
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும். இதன்படி இன்று காலை 12 மணிவரை  கம்பஹாவில் 40 சதவீத வாக்குப் பதிவுகளும், கண்டியில் 55 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் நுவரெலியாவில் 50 சதவீத வாக்குகளும், காலியில் 50 சதவீத வாக்குகளும் மற்றும் மாத்தறையில் 50 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹம்பாந்தோட்டையில் 55% வாக்குகளும், கொழும்பில் 40% வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை பொலன்னறுவையில்  52 சதவீத வாக்குகளும், அனுராதபுரத்தில் 50 சதவீத வாக்குகளும், பதுளையில்  60 சதவீத வாக்குகளும், மொனராகலையில் 55 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 55 சதவீத வாக்குகளும் மற்றும் புத்தளத்தில் 50 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் களுத்துறையில் 50 சதவீத வாக்குகளும், குருணாகலில் 55 சதவீத வாக்குகளும், மாத்தளையில் 56 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 50 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவில் 45 சதவீதமான வாக்குகளும் மற...

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க விசேட முறைப்பாட்டு பிரிவு

Image
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் இந்த காலப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு 24 மணித்தியாலமும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க கூடிய வகையில் விசேட முறைப்பாட்டு பிரிவு ஒன்றை அமைத்துள்ளது. தேர்தல் துஸ்பிரயோகம், ஊழல், மோசடி உள்ளிட்ட தேர்தலுடன் தொடர்புடைய எந்த வகையான முறைப்பாடுகளையும் இந்த பிரிவில் தெரிவிக்க முடியும். இவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளின் இரகசிய தன்மையை பாதுகாப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய பின்வரும் இலக்கங்களின் ஊடாக தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க முடியும். மேல் மாகாணம் 070-4701141, மத்திய மாகாணம் 070-4701142, வட மேல் மாகாணம் 070-4701143, சப்ரகமுவ மாகாணம் 070- 4701144, வட மத்திய மாகாணம் 070-4701145, தென் மாகாணம் 070-4701146, ஊவா மாகாணம் 070-4701147 மற்றும் மற்றும் கிழக்கு மாகாணம் 070-4701148 ஆகிய இலக்கங்களுடன் முறைப்பாடுகளை அளிக்க முடியும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு பெப்ரல் அமைப்பு பொதுமக்களை கேட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்

Image
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறவுள்ளன. இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இம்முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர். நாடு பூராகவுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

ஜனாதிபதி தேர்தலுக்கு அம்பாறை தயார் நிலையில்!

Image
நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப வளாகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் காலை கொண்டு செல்லப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, திகாமடுல்ல ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும் வாக்குப் பெட்டிகள் உரிய வாக்கெடுப்பு நிலையங்களை சென்றடைந்தது முதல் பொலிஸ் நடமாடும் சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களிப்பது எப்படி

Image

கிழக்கு மாகாணத்தில் 1,183,205 வாக்காளர்கள் 1258 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க தயார்

Image
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 (1,183,205) வாக்காளர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 1258 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தொகுதியில் 94,781 பேரும், மூதூர் தொகுதியில் 107,30பேரும், சேருவில தொகுதியில் 79,303 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (398,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 பேரும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 187,672 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 94,648 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள...

குடியுரிமை சர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்

Image
எந்தவொரு நபரேனும் அமெரிக்க குடியுரிமையில் இருந்து விலகிக் கொண்டதற்கான சான்றிதழ் கிடைத்ததன் பின்னர், அவர் அமெரிக்காவின் குடியுரிமையில் இருந்து முழுமையாக விலக்கப்படுவதாக அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் நென்சி வென்ஹோன் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் சில தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தாலும் அமெரிக்க குடியுரிமை இழக்கப்பட்ட நபரின் பெயர் அமெரிக்கா பெடரல் பட்டியலில் உள்ளடக்கப்படுவது வெறும் வருமான வரிக்காகவே எனவும் அவர் தெரிவித்துள்ளார். குடியுரிமையை இரத்து செய்வது மிகவும் நீண்டகால செயற்பாடு எனவும் யாரேனும் ஒருவருக்கு இந்த விடயம் தொடர்பில் அதிக ஆர்வம் இருப்பின் travel.state.gov என்ற இணைய தளத்தில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையும் அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் மற்றும் ஒப்படைக்கும் நடவடிக்கைகளும் அமெரிக்க தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த ஆவணங்கள் வொஷிங்டனில் உள்ள அமெரிக்க அரசாங்க திணைக்களத்திடம் இறுதியாக ஒப்படைக்கப்படுவத...

2019 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஒழுங்கு விதிகள்

Image
இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கென ஒரு கோடி 60 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இந்தமுறை வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களை விட அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2019 ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் வாக்களிக்க வேண்டிய நிலையம் குறிப்பிடப்பட்டிருக்கும். அட்டையில் குறிப்பிடப்பட்ட நிலையங்களுக்கு சென்று வாக்கினை அளிக்க வேண்டும். வேறு நிலையங்களில் வாக்கினை அளிக்க முடியாது. போட்டியிடும் 35 வேட்பாளர்களுள் விருப்பமான ஒருவருக்கு ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட வாக்கை செலுத்தலாம். வாக்களிப்பின் போது வேட்பாளரின் கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் எதிரே உள்ள கூட்டில் புள்ளடி இட வேண்டும். அல்லது 1 என்ற இலக்கத்தை குறிப்பிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமாயின் முதலாவது தெரிவுக்கு நேரே 1 என்றும் ஏனைய இர...

2018ஆம் ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை

Image
நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 55 இலட்சத்து 92 ஆயிரத்து 96 ஆகும்.  இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக, அதாவது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு உட்பட்ட வகையில் இவ்வாறு கணக்கிடப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.  கடந்த வருட வாக்காளர் பட்டியலிலும் பார்க்க இம்முறை 2 இலட்சத்து 31 ஆயிரத்து 229 பேர் புதிதாக வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆகக் கூடுதலான வாக்காளர்கள் கம்பாஹ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளனர்.  இத்தொகை 17 இலட்சத்து 51 ஆயிரத்து 892 ஆகும். கொழும்பு, குருநாகல், கண்டி ஆகிய மாவட்டங்கள் இதில் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் இடம்பெற்றுள்ளன.  குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம் திருகோணமலையாகும். எதிர்கால தேர்தல்களுக்கு 2018 ஆண்டு வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  (அரசாங்க தகவல் திணைக்களம்)

மஹிந்த தேசப்பிரியவின் விசேட அறிவித்தல்..!

Image
மறு அறிவித்தல் வரை நிர்வாகப் பணிகளை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்திருக்கிறார்.