Posts

Showing posts from June, 2014

நான் பிறந்த மண்ணே ...

Image
நான் பிறந்த மண்ணே ...  நாட்களின் புது வரவுகளில் நான் பிறந்த மண்ணின் உறவுகளுக்கு நலமறிய ஸலாமுரைத்து நற் செய்திகள் பரிமாறி தொலைத் தொடர்புகளால் விடைபெறுவதென் வழக்கம் அன்றும்... வழமைபோல் ஆவலுடன் மௌனத்தில் ஓடிய நிமிடங்கள் நீண்டது மணித்தியாலங்களை காலம் விழுங்கிச் செல்ல என்னவென்றறிந்திட ஏது செய்யலாமென உண்ணாதுறங்காதிருந்தேன் மறுநாள்.... துவக்குச் சட்டத்தால் அடக்கியதும் வன் செயலால் முடக்கியதும் வாழ்வாதாராங்கள் எரிந்து சாம்பலாகியதும் கல்லடிகளால் உடைத்;து நொறுக்கியதும் மஸ்ஜிதுகளை காத்திடும் இறைவழிப் போர் களத்திறங்கிய சகோதர உயிர்கள் சஹீதாகிப் போனதும் துன்பியல் வரலாறாக - என் செவிகளுக் கெட்டியது அறுத்த கோழியைப் போல் துடித்தது - என் உள்ளமும் உணர்வுகளும் சீர்குலைக்கப்பட்ட - என் பிறந்த மண்ணே - உன் எழிலை கண்களுக்குள்  விழித்த கனவுகளாய் சீர்தூக்கிப் பார்க்கிறேன் மௌன விரதம் பூண்டு மெல்ல நடந்து சென்று  பாத்திரமேந்தி கேட்டுப் புசிக்கும் ஆசைகள் துறந்த (அப்) பாவிகளா... நம் அடையாள ஆவணங்களை கொள்ளையடித்து காவிச்சென்றது

தேசிய சமாதான பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற சர்வ சமய குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட செயலமர்வு

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் தேசிய சமாதான பேரவையினால்ஏற்பாடு செய்யப்பட்ட 3 நாள் வதிவிட செயலமர்வு நேற்று  நிறைவு பெற்றது. கொழும்பு ஹெக்டர்கொப்பேகடுவ பயிற்சி நிலையத்தில் ஊடகமும் அறிக்கைப்படுத்தலும் மற்றும் கவனத்தின் முன்வைத்தல் எனும்தொனிப்பொருளில்இப்பயிற்சி நெறிஇடம்பெற்றது. தேசிய சமாதான பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற மாவட்ட சர்வ சமய குழுக்களின் பிரதிநிதிகளுக்காக இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் 8மாவட்டங்களிலிருந்த 60 க்கும் மேற்பட்ட மாவட்ட சர்வ சமய குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய சமாதான பேரவையின் செயற்திட்ட இணைப்பாளர் சமன்செனவிரட்ன பிரபல ஊடகவியலாளர் சீ.தொடாவத்த புஷ்பா ரஞ்சனிஆகியோர் வளவாளர்களாகக்கலந்து கொண்டனர்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் குணமடைய பிரார்த்திப்போம்

Image
இருதய நோய் காரணமாக தற்பொழுது கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாறை மாவத்தில் மூத்த ஊடகவியலாளருமான கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் குணமடைய றஹ்மத் நிறைந்த றமழான் மாதத்தில் பிரார்த்திப்போம் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ .ல.மு.கா. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் விடுத்த விசேட அறிக்கையில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றாப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இன்று தொலைபேசியினூடாக அவரை தொடர்பு கொண்டபோது தற்பொழுது ஓரளவு நலமடைந்து வருவதாகவும் இன்னும் ஐந்து தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருந்து வைத்திய ஆலோசனையின் பின்னர் நிந்தவூருக்கு வரலாம் எனவும் தெரிவித்தார். மேலும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் மற்றும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீட் உள்ளிட்டோர் தன்னை பார்வையிட வந்ததாகவும்

நாளை நோன்பு

Image
ரமலான் மாத தலைப் பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதால் நாளை நோன்பு பிடிப்பதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை  ஜமியதுல் உலமா அறிவித்துள்ளது . 

முஸ்லிம்களின் தலைமைத்துவம் முஸ்லிம்களை பாதுகாக்க கூடிய தைரியமுள்ள தலைமையாக இருக்க வேண்டும் -ஹரீஸ் MP கூறுகிறார்

Image
பொதுபல சேனா மற்றும் ராவண பலய போன்ற தீவிரவாத அமைப்புக்களின் கொடூர பிடியில் சிக்கியுள்ள முஸ்லிம் சமுகத்தை காப்பது என்றால் முஸ்லிங்கள் தகுதியான தலைமைத்துவம் ஒன்றின் கீழ் ஒன்றுமைப்பட வேண்டும் என்று கல்முனை அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் சூளுரைத்தார். தமிழ் பத்திரிகைகளுக்கு வந்து எங்களுடைய வாயை பொத்தச் சொன்னார்கள்- கதிரைகளை தூக்கினார்கள்- என்று சொல்லும் தலைமையாக அது அமையக் கூடாது என்றும் அவர் குறிப்பிடார். முஸ்லிம் சமுகம் சார்ந்த பிரச்சனைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டுக்கும் கொண்டு சென்று தகுந்த தீர்வை பெற்றுத்தரக் கூடிய தலைமையாக அது இருக்க வேண்டும் என்றும் ஹரீஸ் எம்.பி. வலியுறுத்தினார். “முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிர வாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்” எனும் தலைப்பில் மெஸ்ரோ ஏற்பாடு செய்திருந்த உரையாடலும் துஆப் பிரார்த்தனையும் எனும் நிகழ்வுக்கு முன்னிலை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார். நேற்று மாலை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் மெஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம் நசீல் தலைமையில் இடம்பெற்

பொதுபல சேனா இன்று நாட்டின் பாரியதொரு சக்தி

Image
சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்பிக்கொண்டு முஸ்லிம்கள் மீது இனவெறித் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பினை கண்டிப்பது காலத்தின் தேவையாகும். இவ்வாறு   கல்முனை   மாநகர   சபை அமைர்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார். கடந்த ஜுன் 15ம் திகதி அளுத்கம ,  தர்கா   நகர் ,  பேருவளை மற்றும்    வெலிப்பன்ன  உட்பட   நாட்டின்   பல   பகுதிகளிலும்   முஸ்லிம்கள்   மீது   கட்டவிழ்த்து   விடப்பட்டுள்ள பேரினவாத   தாக்குதல்களைக்   கண்டித்து   கல்முனை   மாநகர   சபையில்   முதல்வர் நிஸாம் காரியப்பர் கண்டனத்   தீர்மானத்தை   சமர்ப்பித்த போது அதனை ஆதரித்து உரையாற்றுகையிலேயே   அவர்   இதனைக்   குறிப்பிட்டார் . அவர்   அங்கு   மேலும்   கூறியதாவது ; கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பொதுபல சேனா என்ற அமைப்பு இன்று நாட்டின் பாரியதொரு இனவெறி சக்தியாக சிங்கள மக்கள் மத்தியில் பரினாமம் பெற்று வருகின்றது. இவ்வமைப்பின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றாக சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதங்களாக பயன்படுத

முஸ்லிம்களிடம் மனிப்பு கோருகிறார் அமைச்சர் ராஜித

Image
அளுத்கமயில் இனவாதிகள் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்றதொரு கசப்பான சம்பவம் இனி மேலும் ஏற்படக்கூடாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்  . மேலும் அவர் உரையாற்றும்போது ,இப்பகுதியில் அப்பாவி முஸ்லிம்கள் மீது இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலையிட்டு மன்னிப்புக் கேட்கின்றேன். வெட்கப்படுகின்றேன். பௌத்தன் என்ற வகையில் மிகவும் வேதனையடைகின்றேன். இச்சம்பவம் தொடர்புடைய காடையர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உச்ச தண்டனையும் வழங்க வேண்டும். நேற்று  மாலை தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி ஐ.எல்.எம்.மஷ்ஷுர் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . இனவாதிகள் என்னையும் முஹம்மத் ராஜித என்று சொல்கின்றனர். தலிபான் ஞானசார அல்கைதா ஞானசார என்று சொல்லாமல் முஹம்மத் ராஜித என்று சொல்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்றார். மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், களுத்துறை மாவட்ட செயலாளர் யு.டி.சந்தன ஜயலால், பிரதேச செயலாளர் ஜானக ஸ்ரீசந்திரகுப்த, இராணுவப் படையின் மேல

ஆகஸ்ட் ஐந்தாம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

Image
க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். ஐந்தாம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை 29ஆம் திகதி நிறைவு பெறும் என்றும் எதிர்வரும் 17ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை 334,662 தோற்றவுள்ளனர். உயர்தரப் பரீட்சைக்கு 234,197 தோற்றவுள்ளனர். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 62,134 விண்ணப்பத்துள்ளனர். க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று இரவு கல்முனையில் மெஸ்ரோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த துஆப் பிரார்த்தனை நிகழ்வினை தடைசெய்ய கோரி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல்! நீதிமன்றம் அதனை நிராகரிப்பு, நிகழ்வினை நடாத்த அனுமதி

Image
அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற அநீதிக்கு எதிராக முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனம் (மெஸ்ரோ) ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வினை தடைசெய்யுமாறு கோரி கல்முனை பொலிஸார் இன்று கல்முனை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். இவ்வழக்கினை மாவட்ட நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, கல்முனை பொலிஸார் மெஸ்ரோ நிறுவனம் இன்று நடத்தவிருக்கும் இந்நிகழ்வினால் கல்முனை பிரதேசத்தின் அமைதிற்கு குந்தகம் ஏற்படும். இவ்வமைப்பு கடந்த மூன்று நாட்களாக இந்நிகழ்வினை நடாத்த முயற்சித்த போது தடைசெய்தது போல் இன்றும் இந்நிகழ்வினை தடைசெய்ய வேண்டும் என கோரினர். இதனை ஆட்சேபித்து மெஸ்ரோ நிறுவனத்தின் சார்பாக சட்டத்தரணிகளான எம்.முஸ்தபா, எம்.ஹாதி ஆகியோர் ஆஜராகி இன்றைய நிகழ்வு அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற சம்பவத்தில் மரணித்த உறவுகளுக்கும், அம்மக்களின் பாதுகாப்புக்கும் இறைவனின் உதவிகோரி துஆப் பிரார்த்தனையும் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் இவ்வாறான நிகழ்வுகளின் போது எவ்வாறு நடந்து கொள

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு விசேட ரமழான் விடுமுறை

Image
நோன்பு காலத்தை முன்னிட்டு அரச துறையில் பணிபுரியும் முஸ்லிம்களுக் கான விசேட விடுமுறை மற்றும் சமய வழிபாட்டு நேரங்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.  ரமழான் பண்டிகைக்கு 14 நாட்களுக்கு முன்பதாக முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முற்பணம் வழங்கப்படுவது தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பி. பீ. அபேகோனினால் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலை வர்கள் மற்றும் அரச செயலகங்களின் பிரதானி களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளது. இதற்கிணங்க ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு தொழுகை மற்றும் மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு விசேட விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொடுக்குமாறும் அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டு ள்ளார். இம்முறை ரமழான் நோன்பு காலம் ஜூன் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை மாதம் 29ஆம் திகதி முடிவடையவுள்ளது. இக்காலப் பகுதியில் முஸ்லிம் அரச அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்துகொள்ளக் கூடியதாகவே

முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனம் (மெஸ்ரோ) ஏற்பாடுசெய்துள்ள முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்

Image
முஸ்லிம்   கல்வி   சமூக   ஆய்வக   நிறுவனம்  ( மெஸ்ரோ )  ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம்   இருப்பும் அச்சுறுத்தும்   தீவிரவாதமும் எதிர்கொள்ளும்   உபாயங்களும் எனும்   தலைப்பிலான   கலந்துரையாடலொன்றும் துஆ பிரார்த்தனையும் எதிர்வரும் 27.06.2014 இன்று     வெள்ளிக்கிழமை   பி.ப. 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது . இந்நிகழ்வுகள் சாய்ந்தமருது   லீமெரிடியன்   மண்டபத்தில் இடம்பெறவுள்ளது . இதில் நாங்கள் எங்கள் மீதுள்ள எதிர்ப்புணர்வுகள் என்ன? எங்களை அழித்தொழிப்பதற்கு முன்வைக்ககப்படும் காரணங்கள் என்ன? இதில் எங்களுடைய பலவீனங்கள் என்ன? எதிரிகளின் பபலங்கள் என்ன? என்பது பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விரிவுரைகளும் இடம்பெறவிருக்கின்றன. இந்நிகழ்வில் முஸ்லிம்   பாராளுமன்ற   உறுப்பினர்கள், அரசியல் வாதிகள்,   பல்கலைக்கழக   விரிவுரையாளர்கள் உலமாக்கள் மற்றும்   புத்திஜீவிகள்   உட்பட   பலர்   கலந்து   கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில்   சமூக   உணர்வுள்ள   அனைவரையும்   கலந்து   கொள்ளுமாறு   ஏற்பாட்டாளர்கள்   அழைப்பு   விடுத்துள்ளனர் . 

சித்திரவதைக்கெதிரான சர்வதேச தினம் இன்று கல்முனையில் நடைபெற்றது.

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய அலுவலகமும் மனித அபிவிருத்தி தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரவதைக்கெதிரான சர்வதேச தினம் தொடர்பான செயலமர்வொன்று இன்று கல்முனையில் நடைபெற்றது. கிரிஸ்டா இல்லத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய உத்தியோகத்தர் டாக்டர்எம்.எம்.ஏ.ரஹ்மான் வளவாளராகக்கலந்து கொண்டார். இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்.சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்.அரச அதிகாரிகள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

நான் நாட்டில் இருந்திருந்தால் ஒரு துளி இரத்தம் சிந்தவும் இடமளித்திருக்க மாட்டேன்!

Image
நான் நாட்டில் இருந்திருந்தால் அளுத்கமை, பேருவளைப் பிரதேசங்களில் ஒரு துளி இரத்தம் சிந்தவோ, சொத்துக்கள் அழிக்கப்படவோ இடமளித்திருக்க மாட்டேன் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்தன கூறினார்.   பேருவளை பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.    இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய அமைச்சர் உடனடியாக வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அளுத்கமை மற்றும் பேருவளைப் பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட பிரதேசங்களைப் பார்வையிட்டார்.    அதன் பின்னர் அப்பிரதேசத்தில் உள்ள சகல சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.   அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;   நடைபெற்ற துரதிஷ்ட சம்பவத்தையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். வன்முறையில் அழிக்கப்பட்ட சொத்துக்களை நாம் மீண்டும் உரியவர்களுக்கு வழங்குவோம். அதேவேளை இந்த வன்முறைகள் காரணமாக உடைந்துபோன உள்ளங்களை சீரமைக்க

மெஸ்ரோவின் கூட்டம் கல்முனையில்

Image
முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனம் (மெஸ்ரோ)ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும் எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று நாளை   (27) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் பி.ப.3.30மணிக்கு  ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் துஆப்பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது. இதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில் சமூக உணர்வுள்ள அனைவரையும் கலந்து  கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

கல்முனை மாநகர சபை தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Image
கல்முனை மாநகர சபை தொழிலாளர்கள் ஆளணி வெற்றிடம் நிரப்பப்படுதல் , உள்ளிட்ட  07 கோரிக்கைகளை  முன் வைத்து  கல்முனை மாநகர சபை  வளாகத்தில் சற்று முன்னர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர் . இந்த போராட்டத்துக்கு ஆதரவாக  அகில இலங்கை பொது ஊழியர்   சங்கமும்  சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் உட்பட சங்க பிரதிநிதிகள் பலரும் இணைந்து  தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்குகின்றனர் 

கல்முனை மாநகர சபையில் இனவெறித்தாக்குதலுக்கு கண்டன பிரேரணை நிறைவேற்றம்

Image
அளுத்கம ,  தர்கா   நகர் ,  பேருவளை ,  வெலிப்பன்ன    மற்றும் நாட்டில் பல பாகங்களிலும் முஸ்லிம்கள்   மீது   நிழகந்து கொண்டிருக்கும் இனவெறித் தாக்குதலைக் கண்டித்து   கல்முனை   மாநகர   சபையில்   கண்டனத்   தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது . கல்முனை   மாநகர   சபையின்   மாதாந்த   சபை   அமர்வு   நேற்று    புதன்கிழமை     முதல்வர்   எம் . நிஸாம்   காரியப்பர்   தலைமையில்   நடைபெற்ற   போதே  இக்கண்டனத்   தீர்மானம்   நிறைவேற்றப்பட்டது . இன்றைய சபை அமர்வின்போது மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புப்   பட்டி   அணிந்தவண்ணம் பங்கேற்றிருந்தனர் . மாநகர   முதல்வர்   நிஸாம்   காரியப்பர்   இக்கண்டனப்   பிரேரணையை  சமர்ப்பித்து     உரையாற்றினார். முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்ட இக்கண்டன பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து சபையின் தமிழ்,முஸ்லிம் அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்கள் மறந்து உரையாற்றினார்கள். இக்கண்டனத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இனவெறித்தாக்குதலை தூண்டும் பொதுபலசேனை மற்றும் சிஹல ராவய ஆகிய அமைப்புக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புக்களையும் கண்டித்து உறுப்பினர்களின் உரை காணப

கல்முனையில் நாளை நடைபெறவிருந்த பிரார்தனை கூட்டத்துக்கு நீதி மன்ற தடை! பொலிஸ் மா அதிபர் மேல் சீறிப் பாய்கிறார் ஹரீஸ் MP

Image
பேருவளை.அளுத்கம மற்றும் தர்ஹாநகர் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும் , அம்மக்களுக்காக துஆ பிரார்தனையூம் நடாத்துவதற்கும் கல்முனையில் முஸ்லிம் வாழ்வூரிமைக்கான அமைப்பு நாளை (25)ஏற்பாடு செய்த நிகழ்வை நீதி மன்றமூடாக தடைசெய்தமைக்கு பொலிஸ் மா அதிபருக்கு எதிராக கடுமையான கண்டனத்தை திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்; தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் சர்ச்சைக்குரிய பொதுபல சேனா இயக்கம் அதிஸ்டான பூஜையொன்றை நடாத்த பொலிஸ்மா அதிபர் அனுமதி வழங்கும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக எமது இஸ்லாமிய முறையிலான துஆ பிரார்த்தனையை புரிவதற்கு தடை விதித்தமை அரச உயர் மட்டங்களின் அளுத்தமே காரணம் எனவூம் நாட்டில் நீதி மரணித்து விட்டதாகவூம் ஹரீஸ் மேலும் தெரிவித்தார் . வாக்கு வங்கியை திருப்பம் செய்யூம் நோக்கமே இந்த இனவாத செயற்பாடு. இதற்காகவே பொதுபல சேனா இந்த செயற்பாட்டில் இறங்கியூள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளருக்கு விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாடு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் சாய்ந்தமருது இல்லத்தில் இன்று (24) மாலை இடம் பெற்றது.  அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவி

வன்முறைச் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க மொத்தம் 20 பொலிஸ் குழுக்கள் களத்தில்!

Image
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை நடத்தி, சூத்திரதாரிகளை சட்டத்தில் முன்நிறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மொத்தம் 20 பொலிஸ் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனவாம்!  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.  ஏற்கனவே கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஐந்து தனித் தனி விசாரணைக் குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தன. இந்த ஐந்து அணிக்கு மேலதிகமாக தற்போது மேலும் 15 அணிகளை பொலிஸ் தலைமையகம் களத்தில் இறக்கியுள்ளது.  அதேசமயம் மேற்படி வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரிகளை அடையாளம் காணக்கூடிய படங்கள், வீடியோ கிளிப்புக்களை யாரேனும் வைத்திருந்தால் அவற்றைத் தந்துதவுமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.