Posts

Showing posts from December, 2011

மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா

Image
மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் விழா குழு தலைவர் ஏ.ஆர்.ஸாலிஹ் தலைமையில் மருதமுனை அல்-மனார் மண்டபத்தில் நடை பெற்றது.விழாவுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேர்க்கப் படுவதையும், பூரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீரா சாஹிப்  மாணவன் எம்.எம்.அதூப் அகமதுக்கு சான்றிதழ் வழங்குவதையும் காணலாம்.
Image
கண்ணீர் இருப்பில்லை அலைகடலே உன் கரையில் விளையாடியது குற்றமென பிஞ்சுகளின் உயிரோடு விளையாடிவிட்டாய். உன் மடியில் வலை வீசியது குற்றமென மீனவர்களின் உயிரை விலை பேசிவிட்டாய் . குழந்தைகளை பிரித்து பெற்றோர்களை அனாதயாக்கினாய் பெற்றோரை பிரித்து குழந்தைகளை அனாதயாக்கினாய். இன்னும் யாரை பிரிக்க அலை அலையாய் அலைந்துகொண்டு இருக்கிறாய்? இங்கு இறப்பதற்கு இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம் இறந்த பின் சிந்துவதற்கு கண்ணீர் தான் இருப்பில்லை…

சுனாமி ஏழாண்டு நினைவு கல்முனையில்

Image
தகவல்- கல்முனை இஸ்ஹாக் ஆழிப் பேரலையில் உயிர் நீத்த உறவுகளின் ஏழாண்டு நினைவு வைபவம் கல்முனையில் நடை பெற்றது. மரணித்தவர்களின் நினைவாக கல்முனை மாமன்க வித்தியாலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ள நினைவு தூபிக்கருகில் இடம் பெற்ற இவைபவதில் அதிகாரிகள் உட்பட பல போது மக்களும் கலந்து கொண்டு உறவுகளுக்காக தீபமேற்றி வழிபட்டனர். மக்கள் தங்கள் உறவுகளின் நினைவாக தேம்பி தேம்பி அழுதனர் இதேவேளை கல்முனை கடற்கரை பள்ளி வாசலில் ஜனாஸா நலன் புரி சங்கம் ஏற்பாடு செய்த விசேட துவா பிரார்த்தனையும் நடை பெற்றது. அதே வேலை கல்முனை மாநகர மேயர்  சிராஸ் மீரா  சாஹிப் தலைமையில் நடை பெற்ற சுனாமி நினைவு தின வைபவத்தில் மாநகர சபை உத்தியோகத்தர்களும்  கலந்து பிரார்த்தனை செய்தனர். 

சம்மாந்துறையில் மாணவி கொலை சந்தேகம்

சம்மாந்துறை,  மல்கம்பிட்டி வீதியில் கைகாட்டி சந்தியிலுள்ள வீடொன்றிலிருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் சந்தேகத்தின் பேரில் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை மாநகர சபையின்வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Image
கல்முனை மாநகர சபையின் 2012ம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அணைவரினதும் ஆதரவுடன் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கல்முனை மாநகர சபை மாதாந்த பொதுக் கூட்டம் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாகிப் தலைமையில் நேற்று நடைபெற்றது. கல்முனை மாநகர சபை 2012ம் வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானமாக 17கோடி 43 இலட்சத்து 59 ஆயிரத்து 60 ரூபாவும் எதிர்பார்க்கும் செலவாக 17கோடி 43 இலட்சத்து 42 ஆயிரத்து 788 ரூபாவும் என முதல்வரினால் முன் வைக்கப்பட்டு எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கினார். அரசின் நெல்சிப் திட்டத்தின் மூலம் 4 கோடி 70 இலட்சம் ரூபாவும் பிரமாண அடிப்படையிலான நன்கொடையாக 1இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையாக 10 இலட்சம் ரூபாவும் வருமானமாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், மாநகரசபை எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் உட்பட உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர். உறுப்பினர்களின் வரவு செலவுத் திட்ட விவாதத்தைத் தொடர்ந்து வரவு செலவுத்

தொலை பேசி அவசர தகவல் பெற

வாடிக்கையாளர் வசதி கருதி கல்முனை நியூஸ் இணையத்தளம் கையடக்க தொலை பேசியில் அவசர செய்தி சேவை வழங்க ஆரம்பித்துள்ளது. உங்களுடைய dialog, mobital , eatislat  ஆகிய தொலை பேசி ஊடாக follow kalmunai_news என type  செய்து 40404  எனும் இலக்கத்துக்கு SMS செய்யவும் 

டிசம்பர் 31 வரை உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்

Image
விதவைகள், அநாதைகள், தபுதாரர் ஓய்வூதியம்: பணிப்பாளர் கே.ஏ. திலகரட்ண விதவைகள், அநாதைகள் மற்றும் தபுதாரர்கள் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கமைய உரிமை கோரும் விண்ணப்பங்களை ஓய்வூதிய திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் தினம் டிசம்பர் 31 ஆம் திகதி என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே. ஏ. திலகரட்ண அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின்படி பின்வரும் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். இந்நிகழ்வுகள் யாவும் 2010 ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் * பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் என்பன காரணமாக உயிரிழந்த அரச அலுவல்கள் இறுதியாக பெற்றுக் கொண்ட சம்பாத்திய அடிப்படையில் விதவைகள், அநாதைகள், தபுதாரம் ஓய்வூதியத்தை திருத்தியமைத்து ஓய்வூதியம் வழங்கல். * அமைய, தற்காலிக பதவியில் இருந்தோர் பயங்கரவாதம் காரணமாக, இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்திருந்தால் துணைவர்களுக்கு மற்றும் அநாதைப் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். * 26 வயதிற்

இராப்போசன வைபவத்தில் சந்திப்பு!

Image
நேற்று புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இரவு வழங்கிய இராப்போசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உட்பட ஏனைய பாராளுன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இவ்விருந்துபசார நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் 

கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Image
கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி திருகோணமலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டும் மழையில் நனைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கல்முனை வலய மேலதிக ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக கல்முனை வலயத்திலிருந்து அக்கரைப்பற்று சம்மாந்துறை, திருக்கோயில், மட்டக்களப்பு மத்திய ஆகிய வலயங்களுக்கு 134 ஆசிரியர்கள் 2009.06.22 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கடிதத்திற்கு இணங்க இடமாற்றம் செய்யப்பட்டனர் இவர்கள் வெளி வலயத்தில் ஒரு போதும் கடமையாற்றாதவர்கள் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 8 வருடத்திற்கு மேல் கடமை புரிந்தவர்கள். 53 வயதுக்கு குறைந்தவர்கள் என்ற நியதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு 2 வருட நிபந்தனை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த செய்தி உண்மையானதா

Image
மருதமுனை கமு/அல்-மனார் மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தினுள் குடைகளை பிடித்துக் கொண்டு க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் மாணவ மாணவிகளைப் படத் தில் காண்க. இந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. (படம்: நிந்தவூர் தினகரன் விசேட நிருபர் ரபீக் பிர்தெளவுஸ்) கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் மருதமுனை அல் மானார் மத்திய கல்லூரி கல்வி சமூகத்தில் பேசப் படுகின்ற ஒரு பாடசாலையாகும். கட்டட வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏன் இவ்வாறான நிலை ஏற்ப்பட வேண்டும் . இந்த செய்தி திட்டமிடப்பட்டு செயப்பட்டிருந்தால் கண்டிக்கப் பட வேண்டியதொரு விடயம். பரீட்சை நிலையத்தில் படம் எடுக்க அனுமதித்த அதிகாரிக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மருதமுனை கல்வி சமூகம் கேட்டுள்ளனர்.

தேனிலவு வந்த பிரிட்டன் ஜோடிக்கு கட்டுநாயக்கவில் ஆனந்த அதிர்ச்சி!

Image
தேனிலவைக் கொண்டாட வந்து இருந்த பிரித்தானிய தம்பதி ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை அரசினால் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. Nehdia Chemby, John Chemby இருவரும் தேனிலவுக்கு உகந்த இடமாக இலங்கையை தெரிவு செய்தனர். கடந்த திங்கட்கிழமை வந்து அடைந்தனர்.  இலங்கைக்கு இவ்வருடம் வந்த 800,000 ஆவது உல்லாசப் பயணி Nehdia ஆவார். 800000 ஆவது உல்லாசப் பயணியை வரவேற்க சுற்றுலாத் துறை அதிகாரிகள் முன் ஆயத்தங்களுடன் திரண்டு நின்றனர். பிரிட்டன் தம்பதிக்கு தடபுடல் வரவேற்பு வழங்கப்பட்டு நினைவுப் பரிசில்கள் கொடுக்கப்பட்டன. எதிர்பார்த்து இராத மகிழ்ச்சி கலந்த பேரதிர்ச்சி என்றும் இத்தருணத்தை வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள் என்றும் இத்தம்பதி தெரிவித்து உள்ளது.

23 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கி கின்னஸ் சாதனை

Image
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞன் ஒருவர் 23 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கி கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். கின்னஸ் சாதனைக்கான அரங்கில் தமிழ் உறவுகள் உட்பட ஆர்வலர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். சுதாகரன் சிவஞானதுரையின் ( வயது 37 ) தலை மயிரில் ஒரு வகை நாடாவால் பலமாக சுருக்குப் போடப்பட்ட்து. தரையில் இருந்து ஒரு மீற்றர் உயரத்துக்கு அந்தரத்தில் தொங்கினார். இவரது நிறை. 57 கிலோ. கடந்த 27 வருடங்களுக்கு மேலாக தியானம், யோகா ஆகியவற்றை வாழ்வியல் ஒழுக்கமாக கடைப்பிடித்து வருகின்றமையால்லும், . இயற்கையான எண்ணெய்யை பயன்படுத்துகின்றமையால் முடி மிகவும் பலமானதாக உள்ளமையாலும் இச்சாதனையை நிறைவேற்ற முடிந்து உள்ளது என சாதனை வீரன் சுதாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.  இவரது இச்சாதனை முயற்சி முன்பு இவ்வுலகில் எவராலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று!

Image
14 மாவட்டங்களை உள்ளடக்கி அதன் கரையோரப் பகுதிகளில் இன்று (20) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. கொழும்பு- களுத்துறை- கம்பஹா- திருக்கோணமலை- அம்பாறை- காலி முல்லைத்தீவு-  யாழ்ப்பாணம்- கிளிநொச்சி- மன்னார்- புத்தளம்- அம்பாந்தோட்டை- மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட கரையோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது. இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களை தெளிவூட்டும் வகையில்  இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த ஒத்திகை நடவடிக்கையால் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களில் இருந்து ஒலி எழுப்பப்படும் எனவும் அதனை கேட்டு மக்கள் அச்சமடைய தேவையில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டஉள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள் எட்டு உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயசிங்க தெரிவித்தார். இந்நீடிப்பு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிற்கு உள்ள அதிகாரத்தின் மூலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கிணங்க எதிர்வரும் 2012 மார்ச் 18ஆம் திகதி நிறைவடைவுள்ள, மட்டக்களப்பு மாவட்டத்திலுள் எட்டு உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2013 மார்ச் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளைப்ற்று வடக்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை ஆகியவற்றின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  

ரணில் மீண்டும் தலைவராகத் தெரிவு!

Image
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிக்கொத்தவில் இன்று நடைபெற்ற இரகசிய வாக்கொடுப்பில்  ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அடுத்த வருடத்துக்கான தலைவர் மற்றும் ஏனைய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று கட்சித் தலைமையகத்தில்  நடைபெற்றது. ஐ.தே.க. தலைமைத்துவ தெரிவுக்கு வாக்கொடுப்பு நடத்தப்பட்டமை இதுவே முதல் முறையாகும். கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டார். கட்சித் தலைமைப் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரய ஆகியோர் போட்டியிட்டனர். பிரதித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

ஐ.தே.க. தலைவர் ரணிலா? கருவா? ஸ்ரீகொத்தாவில் இன்று தேர்தல்

Image
பிரதித்தலைவர் பதவிக்கு ரவி, சஜித் போட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் 2012 ஆம் ஆண்டிற்கான தலை வர், பிரதித் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. மிகவும் பரபரப்பானதொரு சூழ்நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இப்பதவிகளுக்காக போட்டியிட விரும்புவோர் இன்று காலை 10 மணி வரை ஸ்ரீகொத்தா விலுள்ள ஐ.தே.கட்சி அலுவலகத்தில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுமாறும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கேட்டுக் கொண் டுள்ளார். ஐ.தே.க.வின் அரசியல் யாப்பின்படி 2012 ஆம் ஆண்டுக்கான கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கென கரு ஜயசூரிய எம்.பியும் ரணில் விக்கிரம சிங்கவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பிரதித் தலைவர் பதவிக்காக சஜித் பிரேமதாஸ எம்.பி.யும் ரவி கருணாநாயக்க எம்.பியும் தேசிய அமைப்பாளர் பதவிக்காக தயாசிறி ஜயசேகர எம்.பியும் தயா டி கமகே எம்.பியும் நேற்று மாலை மூன்று மணிக்குள்ளாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்ததாகவும் ஸ்ரீகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்றுக் க

அரச ஊழியர் சம்பள உயர்வு; சுற்று நிருபம் வெளியாகியது

கடந்த மாதம் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பத்து சதவீத சம்பள உயர்வு தொடர்பான சுற்று நிருபத்தை அரசாங்க நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. அரச ஊழியர் ஒருவர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெறும் அடிப் படை மாதாந்த சம்பளத்தில் பத்து சதவீதத்தினை 2012 ஜனவரி மாதம் முதல் விசேட படியாக பெறுவதுடன் இப்படியானது ஓய்வூதியக் கணிப்பீட் டிற்குள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா தெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு இப்படியானது ஜனவரி முதல் ஐந்து சதவீதமும் 2012 ஜூலை மாதம் முதல் மீது ஐந்து சதவீதமும் வழங்கப்படும். பதவி நிலை சாராத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், பயினுர் பதவிகளில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஜனவரி முதல் பத்து சதவீதம் அதிகரித்த படி வழங்கப்படும். இதேவேளை 2003 டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு 2012 ஜனவரி மாதம் ஐநூறு ரூபாவும், 2012 ஜூலை மாதம் ஐநூறு ரூபாவும் விசேட படியாக வழங்கப்படுவதுடன் 2004 ஜனவரி முதலாம் திகதிக்கும், 2005 டிசம்பர் 31ம் திகதிக்குமிடையில் ஓய்வு பெற்றோருக்கு 2012 ஜனவரி

கிழக்கு மாகாணத்திலுள்ள 50 இளைஞர்களுக்கு நடுவர்களாக கடமையாற்ற பயிற்சி

Image
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழகங்களின் 50 இளைஞர்களுக்கு மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் நடுவர்களாக கடமையாற்ற பயிற்சிகளை வழங்கி வருகிறது. திருகோணமலை துளசிபுரத்தில் அமைந்துள்ள மனித அபிவிருத்தி வள நிலையத்தில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பயிற்றுவிப்பாளர்களால் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படு கின்றன.

கல்முனை மேயர் முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமனம்

Image
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமிக்கட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் யாப்பின் படி உள்ளூராட்சி மன்றமொன்றின் தலைவர் பதவி வழி ரீதியாக கட்சியின் அதியுயர் பீட நியமிக்கப்படுவார். அதனடிப்படையிலேயே கல்முனை மேயர் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார். குறித்த உள்ளூராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து இழக்கப்படும் போது அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் இழக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார். கல்முனை மேயராக பதவி வகித்ததன் மூலம் முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதலாவது மேயர் சிராஸ் மீராசாஹிப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஸ்ஸிற்குள் அரவம் தீண்டி இளம் வயது தாய் காயம்

Image
குழந்தைக்கு மருந்தெடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்து கொண்டிருக்கையில் பஸ்ஸிற்குள் அரவம் தீண்டிய சம்பவமொன்று அண்மையில் (13) இறக்காமம் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இறக்காமம் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான ஏ. ஜியானாபீவி (26) என்பவரே அரவம் தீண்டப்பட்டு அம்பாறைப் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, சுகவீனமுற்றிருந்த தனது இரண்டு வயதுக் குழந்தைக்கு மருந்தெடுப்பதற்காக தனது கணவருடன் அக்கரைப்பற்றுக்குச் சென்று மீண்டும் வீடு செல்வதற்காக தனியார் பஸ்ஸொன்றில் பிரயாணித்துக் கொண்டிருக்கையில் அக்கரைப்பற்று அம்பாரை வீதியில் எட்டாம் கட்டைச் சந்தியை அண்மித்த நிலையில் பிரயாணிகள் திடீரென பாம்பு பாம்பு என்று கூக்குரலிட்டு அல்லோலகல் லோலப்பட்டதையடுத்து செய்வதறியாது குழந்தையுடன் ஆசனத்தில் அமர்ந்திருந்த தாயின் கால் பெருவிரலில் இப்பாம்பு தீண்டியதாகத் தெரிய வருகிறது.

இடமாற்றத்தை கண்டித்துகல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்ட இடமாற்றத்தை கண்டித்து இன்று கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் இடமாற்றம் செயப்பட்டுள்ள ஆசிரிய,ஆசிரியைகளும் அவர்களுடைய சிறு குழந்தை களும் கலந்து கொண்டு கோஷமிட்டனர். எங்கள் குடும்பங்களை பிரிக்காதே ,தாய் ஒருஇடம்,பிள்ளை ஒரு இடம். தந்தை ஒரு இடமா, என்பன போன்ற கோசங்களை எழுபியவர்களாக கல்முனை நூலக முன்றலில் இருந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகம் வரை எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவர்களாக ஊர்வலமாக சென்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு மகஜர் கய்யளிதனர். இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நஹீமும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டிப் பரீட்சையின் விடைத்தாளுடன் ரூ.5000 பணம், அதிர்சி அடைந்த உத்தியோகத்தர்

Image
கிழக்கு மாகாண அரசசேவை உதவி  முகாமையாளர்களுக்கான  போட்டிப் பரீட்சையின் விடைத்தாள்கள்  திருத்தும்  கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோஸ்தர்  விடைத்தாளுடன் 5000 ரூபா  பணமும்  ஒரு கடிதமும்  இணைத்திருந்ததணை கண்டு  அதிர்ச்சியடைந்துள்ளார். விடைத்தாள்களை திருத்தும் பணியில்  ஈடுபட்டிருந்த  உத்தியோஸ்தர் இது சம்பந்தமாக கிழக்கு  மாகாண  அரச சேவைகள் திணைக்களத்திற்கு  அறிவித்துள்ளார். விடைத்தாளுடன் இரண்டு 2000 ருபா  நோட்டுக்களும்  ஒரு 1000 ருபா நோட்டும் கடிதமொன்றும்  ஒரு உறையில்  போடப்பட்டு விடைத்தாளுடன்  இணைக்கப்பட்டிருந்தது.  அக்கடிதத்தில் தான் மிகவும் கஸ்டமான நிலையில் இருப்பதாகவும் தனது இரண்டு  காதணிகளை வங்கியொன்றில் ஈடுவைத்த  பணத்தையே இத்துடன்  இணைத்துள்ளதாகவும்  இப்பரீட்சையில்  எந்தவிதத்திலாவது தன்னை சித்தியடையச்  செய்தால் எனது வாழ்க்கையில்  செய்யும் பெரிய  உதவியாக கருதுவதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்ததாக  கிழக்கு மாகாண அரச சேவைகள் திணைக்கள  அதிகாரியொருவர் தெரிவித்தார் .

மீண்டும் மழை வீதி எங்கும் நீர் தேக்கம்

Image
அம்பாறை மாவட்டத்தில் kadantha பல மணித்தியாலங்களாக பலத்த மழை  பெய்கிறது . இதனால்  சகல் வீதிகளும் நீரில்   மூழ்கி   உள்ளன  . மழை காரண  மாக சாதாரண   தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்  பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

சபாநாயகர் வெற்றிக் கிண்ணம்: அமைச்சர்கள் - எம்.பிக்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி

Image

கட்டார் பிரதமர் இன்று இலங்கை விஜயம் !

Image
ஜனாதிபதி உட்பட பலருடன் சந்திப்பு – கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமாட் அல்தானி தலைமையிலான விஷேட தூதுக் குழு ஒன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றது. பிரதமர். டி.எம்.ஜயரட்ன  மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  கட்டார் தூதுக்குழுவினரை வரவேற்பர். இருநாடுகளுக்கு இடையோன நட்புறவை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையில் இவ் விஜயம் அமையும் என நம்பப்படுகிறது . இலங்கை வரும் கட்டார் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மற் றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்ச ர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் தலைநகர் மட்டக்களப்புதான்: அமைச்சர் அதாவுல்லா

Image
கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்கப்பு, அம்பாறை என 3 மாவட்டங்களை கொண்டிருந்தாலும் மட்டக்களப்புதான் மையப்பகுதியாக காணப்படுகின்றது. எனவே மட்டக்களப்புதான் கிழக்கு மாகாணத்தின் தலைநகர் என உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கூறினார். மாகாணத்தின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலமைக்காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், "கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகத்தான் மட்டக்களப்பில் இருந்த பல தலைமைக் காரியாலயங்கள் திருகோணமலைக்கு மாற்றப்பட்டன. ஆனால் இன்று கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைவிட ஓர் அழகானதும் சமாதானமானதுமான ஓர் மாகாணமாக காணப்படுகின்றது.  எனவே இந்த சூழ்நிலையிலே கிழக்கு மாகாணத்திற்கு மட்டக்களப்புத்தான் தலைநகராக அமையும். எனவே எதிர்காலத்தில் பெரும்பாலான தலைமைக் காரியாலயங்களை மட்டக்களப்புக்கு மாற்ற வேண்டும்" என அவர் தெரிவித்தார்.  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கருணைநாதன், தலமையில் இடம்பெற்ற இந் நி

பாண்டிருப்பில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

Image
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு அரசடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள இரும்புத் தொழிற்சாலையிலிருந்து வெட்டுக் காயங்களுடன் இளைஞரொருவரின் சடலம்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.  அத்துடன், அத்தொழிற்சாலையில் உறங்கிக்கொண்டிருந்த  காவலாளியும் கடும் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில்  கல்முனை ஆதார வைத்தியசாலையில்  இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். பாண்டிருப்பு இரண்டாம் பிரிவைச் சேர்ந்த இரும்புத் தொழிற்சாலை உரிமையாளரின் புதல்வரான சுந்தரலிங்கம் ரஞ்சித்  (வயது 17) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ள அதேவேளை,  ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த உதயன் என்ற காவலாளியே வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;.  நேற்று சனிக்கிழமை இவர்கள் தமது இரும்புத் தொழிற்சாலையில் உறங்கிக்கொண்டிருந்தபோது,  கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தனது தொழிற்சாலைக்கு வந்திருந்த அத்தொழிற்சாலையின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பம்

Image
5,31,000 பரீட்சார்த்திகள்  3,921 நிலையங்கள் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவிருக்கும் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் 5 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார். பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சா/தரப் பரீட்சையில் கடந்த காலங்களை விடக் கூடுதலான மாணவர்கள் இம்முறை தோற்றுவதாகத் அவர் தெரிவித்தார். இம்முறை நடைபெறும் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3 இலட்சத்து 85 ஆயிரம் பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேரும் தோற்றவுள்ளனர். கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 22 ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள் மேலதிகமாகத் தோற்றுகின்றனர். இவர்களுக்காக நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 921 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்குமான பாதுகாப்பு அந்தந்தப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும், பரீட்சை நடைபெறும் நாட்களில், பரீட்சை நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகளில் பரீட்சை எழுதும்