கிழக்கு மாகாணத்தின் தலைநகர் மட்டக்களப்புதான்: அமைச்சர் அதாவுல்லா
கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்கப்பு, அம்பாறை என 3 மாவட்டங்களை கொண்டிருந்தாலும் மட்டக்களப்புதான் மையப்பகுதியாக காணப்படுகின்றது. எனவே மட்டக்களப்புதான் கிழக்கு மாகாணத்தின் தலைநகர் என உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கூறினார்.
மாகாணத்தின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலமைக்காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகத்தான் மட்டக்களப்பில் இருந்த பல தலைமைக் காரியாலயங்கள் திருகோணமலைக்கு மாற்றப்பட்டன.
ஆனால் இன்று கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைவிட ஓர் அழகானதும் சமாதானமானதுமான ஓர் மாகாணமாக காணப்படுகின்றது.
எனவே இந்த சூழ்நிலையிலே கிழக்கு மாகாணத்திற்கு மட்டக்களப்புத்தான் தலைநகராக அமையும். எனவே எதிர்காலத்தில் பெரும்பாலான தலைமைக் காரியாலயங்களை மட்டக்களப்புக்கு மாற்ற வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கருணைநாதன், தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வே, கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment