Posts

Showing posts from May, 2018

கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உட்பட அனைத்து நிலயியல் குழுக்களும் எதிரணி ஆதிக்கத்துக்குள்

Image
கல்முனை மாநகர சபை நிதிக்குழுவின்  உறுப்பினர்களாக வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்  கல்முனை மாநகர சபை இரண்டாவது அமர்வு  மாநகர முதல்வர்  சட்டத்தரணி ஏ.எம்.ரகீப் தலைமையில் இன்று  புதன்கிழமை காலை 10.30க்கு  நடை பெற்றது. கல்முனை மாநகர சபையின் நிலையியற் குழுக்கள் அமைப்பது தொடர்பில் இருந்துவந்த  இழுபறி நிலைக்கு இன்று முடிவுகட்டப்படுள்ளது . நிதிக்குழுவில் முதல்வர் உட்பட ஆறு உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும் அதன் அடிப்படையில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் கல்முனை மாநகர சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஐந்து பேரும்  எதிர்க்கட்சி அங்கத்தவர்களாகும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சி.எம்.முபீத் -23 வாக்கு , தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன்- 22 வாக்கு ,பொன்செய்வநாயகம்- 23 வாக்கு  , சாய்ந்தமருது சுயேச்சை குழு உறுப்பினர்களான அசீம்-22வாக்கு  மற்றும் ரஸ்மீர்- 22 வாக்குகள் பெற்று   தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .

சமூக நல்லிணக்கத்துக்கு அனைவரது பங்களிப்பும் அவசியம்

Image
அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு வலியுறுத்தி யு ள்ளது சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் சம்பவங்கள் இடம் பெறுகின்ற  சந்தர்ப்பங்களில் அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ,திணைக்களங்களின் அதிகாரிகள் நடை பெற்ற சம்பவங்களை விசாரித்து அதற்கான தீர்வை வழங்குகின்ற போது  சமூகங்களுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை தவிர்ந்து கொள்ளலாம். சிறிய சம்வங்களை பெரிதாக்கி சமூகங்களுக்கு மத்தியில் வீணாண குழப்பங்கள் ஏற்படுத்துவதை சமூக வலைத்தளங்களும் மற்றும் ஊடகங்களும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு வலியுறுத்தி யு ள்ளது. சமாதானமும் சமூகப் பணிக்குமான மன்றத்தின் அனுசரணை யு டன் அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழுவின் ஏற்பாட்டில் நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாடு நேற்று கல்முனையில் இயங்குகின்ற அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு காரியாலயத்தில் நடை பெற்ற போது இந்த விடயங்கள் வலி யு றுத்தப்பட்டு  அறிக்கை  யு  ம் வெளியிட்டு வைக்கப்பட்டன. அண்மையில் திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில்  நடை பெற்ற துரதிஸ்ட சம்பவத்தை பெரிது படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் சம்பவ

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய மாணவர்களுக்கு பாராட்டு

Image
நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் முதல் தடவையாக கல்விப் பொது தராதர பரீட்சைக்குத்  தோற்றி  சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு சமீபத்தில் நடை பெற்றது. கல்லூரி அதிபர் வை.எல்.பஷீர் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ .எம்.முபீத் ,கைத்தொழில் வணிக அமைச்சரின் இணைப்பாளரும் அல் -கரீம் பவுண்டேசன் தலைவருமான சீ .எம்.ஹலீம் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா ,ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எல்.ஏ.ரஹீம், கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.சக்காப்   ஆகியோரும்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம்,பிரதி அதிபர்  வீ.எம்.ஸம்ஸம் , உதவி அதிபர்களாக மௌலவி ஏ.சாலிதீன்,திருமதி ஏ.முனாசீர் ,கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி அதிபரும் நற்பிட்டிமுனை உலமா சபை தலைவருமான மௌலவி யு.எல்.ஏ.கபூர்  ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து  மாணவர்களுக்கு பாராட்டு  வழங்கி சிறப்பித்தனர்.

கல்முனை மாநகரத்தில்; பெரும் சவலாலாக இருந்து வருகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்படும்

Image
கல்முனை மேயர் ஏ.எம்.றக்கீப் (பி.எம்.எம்.ஏ.காதர்)  கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பெரும் சவலாக இருந்து வருகின்ற திண் மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு  காண்பதற்று துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார்.  கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு  செய்யப்பட்டுள்ள மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு  செவ்வாய்க்கிழமை(08-05-2018)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய போதே மேயர் றக்கீப் இவ்வாறு தெரிவித்தார்.பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த கௌரவிப்பு நிகழ்வு  கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில் மன்றத்தின் தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெற்றது. மேயர் றக்கீப் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-கல்முனை மாநகரப் பிரதேசத்திலே பல்வெறு பிரச்சினைகள் உள்ளன அவற்றை உடனடியாகத் திர்த்து வைக்க முடியாது பிரச்சினைக

ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கான கடமைப் பொறுப்பேற்பு.

Image
(அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (10) வியாழக்கிழமை கொழும்பு உலக வரத்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவவிதாரண உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் பல பிரமுகர்களும்  கலந்துகொண்டனர். அண்மையில் நடைபெற்ற பகுதியளவிலான அமைச்சர், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் மாற்றத்தின்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகவிருந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அர

ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் இரத்ததான முகாம்

Image
“உதிரம் கொடுத்து பிறர் உயிர்காப்போம” எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம் நேற்று(06.05.2018) ஞாயிற்றுக் கிழமை சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் பள்ளிவாயலின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்வில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணிபுரியும் டாக்டர் ஏ.எச்.எம். ரிஷ்வி மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுவதையும் ஆண், பெண் என இருபாலாரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதையும் படங்களில் காணலாம். படமும் தகவலும்: ஏ.முஹம்மத் பாயிஸ்

கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயர் ஏ.எம்.றக்கீபுக்கு மருதமுனையில் கௌரவிப்பு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்முனை மாநகர சபையின் ஆறாவது மேயராகத் தெரிவு  செய்யப்பட்டுள்ள மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்பைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  நாளை(08-05-2018)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த கெரவிப்பு நிகழ்வு  மன்றத்தின் ஆலோசகர் ஏ.அர் எம்.சாலிஹ்வின் நெறிப்படுத்தலில்   தலைவர் ஏ.எல்.சபுறுத்தீன் தலைமையில் நடைபெவுள்ளது. இந்த நிகழ்வில் பெரிய நீலாவணை  நெசவாளர் சமூக சேவை மன்றத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனியும் கௌரவிக்கப்படவுள்ளார். இங்கு மன்றத்தின் உறுபினர்களும் கலந்து கொள்ளவு ள்ளனர்.   

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 26வது மேதினம்

Image
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 26வது மேதின ஊர்வலமும்   பொதுக் கூட்டமும் இன்று (07) திங்கட் கிழமை கல்முனையில் நடை பெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ் லோகநாதன் தலைமையில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனமும் ஒன்றிணைந்து நடாத்திய தொழிலாளர் தின நிகழ்வு  கல்முனை செலான் வங்கி கட்டிட IP  மண்டபத்தில் நடை பெற்றது. புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுய ஆட்சியை ஏற்படுத்துமாறு அரசை கோரல், விலைவாசி உயர்வு  காரணமாக பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு ரூபாய் 15000 சம்பள உயர்வு  வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட 16அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகஜர் அனுப்பி வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைய தொழிலாளர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார் .

இராணுவ கிண்ண உதைபந்தாட்டம் கல்முனை சனிமெளன்ட் கழகம் சம்பியன்

Image
அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட 'ஏ' பிரிவு 8 அணிகள் பங்கு பற்றிய இலங்கை இராணுவ கிண்ண − -2018 உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கல்முனை சனிமெளன்ட் விளையாட்டுக் கழகம் 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இலங்கை இராணுவ கிண்ண− -2018 சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இவ்விறுதிப்போட்டி கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (30) கல்முனை சனிமெளன்ட விளையாட்டுக்கழகம் மற்றும் மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் எதிர்த்து பலப்பரீட்சை நடாத்தியது. முதல் பாதியில் கோல்ட்மைன்ட் அணியின் வீரர் ரிஷாப் கோல் ஒன்றை போட்டு தனது அணியை பலப்படுத்தினார். இரண்டாம் பாதி தொடங்கி ஆட்டம் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் வேளையில் சனி மெளன்ட் அணியின் முன்னாள் தலைவர் நிசார் கோல் ஒன்றை போட்டு சமநிலை படுத்தினார். தொடர்ந்து போட்டி சென்று கொண்டிருக்கும் போது மேலும் ஒரு கோலை சனி மெளன்ட் கழகத்தின் றில்வாத் பெற்றுக்கொடுக்க இறுதியில் சனிமெளன்ட் கழகத்தினர் 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான வெ

நாளை வடக்கு, கிழக்கில் அதிக வெப்பம்!

Image
-நாளை மறுதினம் முதல் மழைக்கான காலநிலை நாளைய தினம் (03) நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை காணப்படலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும், வட மேல், ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் அதிக வெப்ப காலநிலை காணப்படும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையும் அதன் எச்சரிக்கை மட்டமும் 27-38  :  சாதாரணமானது 39-45  :  எச்சரிக்கை மட்டம்  - அதிக நேரம் வெட்ட வெளியில் நிற்றல் மற்றும் வேலைகளில் ஈடுபடுவதன் காரணமாக களைப்பு நிலை ஏற்படலாம். மேலும் வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps) ஏற்படலாம் 46-52  :  அதிக எச்சரிக்கை மட்டம்  - அதிக நீரிழப்பு காரணமான தசைப் பிடிப்பு (Heat Cramps), வெப்ப அதிகரிப்பு காரணமான அதிக களைப்பு (H