சமூக நல்லிணக்கத்துக்கு அனைவரது பங்களிப்பும் அவசியம்

அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு வலியுறுத்தியுள்ளது

சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் சம்பவங்கள் இடம் பெறுகின்ற  சந்தர்ப்பங்களில் அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ,திணைக்களங்களின் அதிகாரிகள் நடை பெற்ற சம்பவங்களை விசாரித்து அதற்கான தீர்வை வழங்குகின்ற போது  சமூகங்களுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை தவிர்ந்து கொள்ளலாம்.

சிறிய சம்வங்களை பெரிதாக்கி சமூகங்களுக்கு மத்தியில் வீணாண குழப்பங்கள் ஏற்படுத்துவதை சமூக வலைத்தளங்களும் மற்றும் ஊடகங்களும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு வலியுறுத்தியுள்ளது.

சமாதானமும் சமூகப் பணிக்குமான மன்றத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழுவின் ஏற்பாட்டில் நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாடு நேற்று கல்முனையில் இயங்குகின்ற அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு காரியாலயத்தில் நடை பெற்ற போது இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டு  அறிக்கை யு ம் வெளியிட்டு வைக்கப்பட்டன.

அண்மையில் திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில்  நடை பெற்ற துரதிஸ்ட சம்பவத்தை பெரிது படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் சம்பவமானது கண்டிக்கத்தக்கதொரு விடயமாகும். இந்த விடயத்தை கல்வித் திணைக்களம் தலையிட்டு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்க முடி யு ம். இந்த விடயத்தை கையாண்ட விதம் காரணமாகவே முரண்பாடுகளுக்கு காரணமாயிற்று இவ்வாறான சம்பவங்கள் நடைபெறமால் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவினால் கோரப்பட்டுள்ளது.

இந்த ஊடக மாநாட்டில் சமாதானமும் சமூகப்பணிக்குமான தேசிய அமைப்பாளர் ரீ.தயாபரன்,அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு இணைப்பாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ், திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜெலீல் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி நாட்டில் நிரந்தர சமூக நல்லிணக்க செயற்பாடுகளை நாட்டில் மேம்படுத்த முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்ட நல்லிணக்கக் குழு வலியுறுத்தியுள்ளது. 





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்