Posts

Showing posts from August, 2010

கூட்டமைப்புக்கும் , முஸ்லிம் காங்கிரஸ்க்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும்.

Image
அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ள போதும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர் பீடத்தின் கூட்டத்தை தொடர்ந்து, அரசாங்கத்தின் அரசியல் சீர்த்திருத்தத்துக்கு முழுமையான ஆதரவை வழங்க அந்த கட்சி நேற்று தீர்மானித்தது. எனினும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் எதிர்கட்சியுடனேயே இருக்கும் எனவும், எதிர்கட்சிகளுடனான தமது செயற்பாடுகளில் இந்த தீர்மானத்தினால் பாதிப்பு ஏற்படாது எனவும் கட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து,  தமிழ் தேசிய கூட்டமைப்பை வினவிய.போது கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சுமந்திரன், ஏற்கனவே இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என குறிப்பிட்டுள்ள

ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கப்படமாட்டாது.

Image
ஐக்கிய தேசியக் முன்னணி கூட்டிலிருந்து ஆழும் கட்சியுடன் தாவிக்கொண்டுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு ஒன்று வழங்கமுடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. ஆழும்கட்சியின் அரசியல் யாப்பு மாற்ற முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவென அரசுடன் இணைந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தனக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சும் கட்சியின் இருவருக்கு இரு பிரதி அமைச்சுக்களும் வேண்டியபோதும் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு வழங்க முடியாது என கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆழும் கட்சியுடன் உள்ள அமைச்சர்களான அதாவுல்லா , றிசார்ட் பதுர்தீன் , ஹிஸ்புல்லா ஆகியோர் ஹக்கீம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சினை பெறுவததை எதிர்த்துள்ளதாக கூறப்படுகின்றது

கிழக்கு மாகாண சபை பொது மக்கள் முறைப்பாட்டுக் குழுவின் முறைப்பாட்டு பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம்.

Image
கிழக்கு மாகாண சபை பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுவின் முறைப்பாட்டுப் பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முறைப்பாட்டுப் பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆரம்பித்து வைக்க இருக்கின்றார். எதிர்வரும் 27.08.2010 அன்று கல்லடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் மகாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.30 மணிக்கு மேற்படி நிகழ்வு இடம்பெறும்.

ஹக்கீமின் செயற்பாடானது ஒழுக்கமற்றது

Image
ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரிவிக்காமல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியை சந்தித்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். ரவூம் ஹக்கீம் நேற்றய தினம் ஜனாதிபதியை கண்டி ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்ததாவது:- தனது கட்சியிலிருக்கும் ஒருசில உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொள்ளவுள்தாக பரவி வரும் வதந்தி தொடர்பிலேயே ஜனாதிபதியுடன் பேச்சுகளை நடத்தியுள்ளதாக பேச்சுகளின் பின் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஹக்கீமின் செயற்பாடானது ஒழுக்கமற்றது என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.  

அரசில் இணைவது பற்றி ஆராய மு. கா. அதியுயர் பீடம் இன்று கூடுகிறது

Image
அரசாங்கத்தில் இணைவது பற்றி இறுதி முடிவெடுப்பதற்காக முஸ் லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர் பீடம் இன்று அவசர அவசர மாகக் கூடுகிறது. இன்று பிற்பகல் 3 மணியளவில் மு. கா.வின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதென மு. காவின் வன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மசூர் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைவதா? இல்லையா? என்பதைப் பற்றியே ஆராயவுள்ளோம். பெரும்பாலும் இணைவதில் சாதகமான நிலை ஏற்படலாம்” என அவர் கூறினார். கட்சியிலுள்ள எம். பிக்களும் முக் கிய பொறுப்புக்களில் உள்ளோரும் அரசில் இணைய வேண்டும் என்ப தில் ஆர்வமாகவுள்ளனர். ஆகவே இந்த விடயத்தில் இன்று இறுதி முடிவெடுக்கப்படுமெனவும் நூர்தீன் மசூர் எம். பி. தெரிவித்தார்.

கல்முனையில் LOLC கிளை

Image
அம்பாறை மாவட்டத்திற்கான   லங்கா ஒறிக்ஸ் லீசிங் கம்பணி கிளை கல்முனை பிரதம தபாலகத்தில் நேற்று திறங்துவைக்கப்பட்து . அங்கு கம்பனியின் பிராந்திய முகாமையாளர் மாலன் பெர்ணாண்டஸ் கிளையை நாடா வெட்டித் திறந்துவைத்து உரையாற்றுவதையும் கிழக்கு வலய தலைவர் டானியல் பாக்கியம் மொழிபெயர்ப்பதையும் முதலாவது பணக்கொடுக்கல்வாங்கல் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம் .

மின்தடையென்றால் 1987 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்

Image
மின்சார விநியோகம் தடைப்படும் சந்தர்ப்பங்களில் 1987 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பாவனையாளர்களைக் கேட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கம் தொடர்பாக முன்னரும் மக்களுக்கு அறிவித்திருந்தபோதிலும் அவர்கள் மின்சார சபையின் பிரதேச அலுவலகங்களுக்கே அறிவிப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் வித்யா அமரபால தெரிவிக்கிறார். மின்சாரப் பாவனையாளர்கள் 1987 என்ற இலக்கத்தினூடாக அறிவிப்பதன் மூலம் மின்சாரத் தடைக்கான காரணம் மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய தீர்வு நடவடிக்கை போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

தோப்பூரில் குண்டுவெடிப்பு கனரக வாகனம் சேதம்

Image
திருக்கோணமலை மாவட்ட் மூது}ர் பிரதேச செயலாளர் பிரிவு தோப்பூர் கிராமத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் கனரக வாகனம் ஒன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் இத்திக்குளம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட வேளையிலேயே இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது. வாகனம் ஓரளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை தோப்பூர் காவல் நிலையத்தை சேர்ந்த பொலிசாருடன் இணைந்த மூதூர் பொலிஸ் நிலைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். வெடிச்சத்த்தினால் பிரதேச வாசிகள் அச்சமடைந்திருந்தாலும் பின்னர் நிலைமையயை ஊகித்துக் கொண்டதால் அமைதியடைந்தனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இத்திக்குளத்தில் மண் அகழ்வு   வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வாகனமே (பக்கோ) சேதத்திற்கு உள்ளாகியது. மீட்கப்படாத குண்டு ஒன்று குளத்தில் இருந்து வெடித்துள்

கல்முனை நகரில் தின்மக்கழிவு அகற்ற புதிய திட்டம்

Image
கல்முனை நகர வர்த்தக சங்கமும்  மாநகர சபையும் இணைந்து  வர்த்தக நிலையங்களின் கழிவுகளை சேகரிப்பதற்கு திங்கள் முதல் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதற்காக  கழிவுகள் சேமிப்பதற்கான பிளாஸ்ரிக் தொட்டிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர முதல்வர் மசூர் மௌலானா தலைமையில் நடை பெற்றது.

கல்முனையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

Image
  கல்முனை மாநகர சபை அனுசரணையுடன் சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி வைத்திய அதிகாரி டாக்டர் ஹபீபுல் இலாகி  தலைமையில் கல்முனை குடியில்  நடை பெற்றது. கல்முனை நகர பிரதி முதல்வர் எ.பசீர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .

மட்டக்களப்பில் பொலிஸிடம் ஆயுதம் திருட்டு

Image
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலத்திற்கு முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களில் ஒருவரின் துப்பாக்கியைப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குப் பாதுகாப்புக் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே பறிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு ரயில் நிலையப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இணைய தள வாயிலாக பெருநாள் வாழ்த்து

Image
கல்முனை நியூஸ் இணையத்தளம் பெருநாள் வாழ்த்து செய்தி இணைக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம் . வாழ்த்து தெரிவிப்பவரின் புகைப்படத்துடன் எமது  இணைய தளம்  வெளியிடவுள்ளதால்  2"/2" அளவிலான  தெளிவான  புகைப்படத்துடன்  வாழ்துபவரின் முழுப் பெயர் , முகவரி என்பவற்றுடன் வாழ்த்த படுவோர் விபரங்களை 15 சொற்களுக்குள்  அடக்கி kalmunainews@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 25 பேருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிசில் இப்தார் நிகழ்வு

Image
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா  தலைமையில்  பொலிஸ் நிலையத்தில்  வெள்ளிக்  கிழமை இப்தார் நிகழ்வு  நடை பெற்றது. அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்  ரஞ்சித் வீரசூரிய ,கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.மென்டிஸ் உட்பட கல்முனை பிரதேச மத தலைவர்கள்,ஊர் தலைவர்கள் ,வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒலுவில் பிரதேச கடற்படை முகாமை அகற்ற ஜனாதிபதி நடவடிக்கை

Image
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து  பிரதேச வாசிகள் மற்றும் மீனவர்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னர்  தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர் இதை தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார். இதன்போது ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமை அங்கிருந்து அகற்றுவதாக உறுதியளித்துள்ளார் இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளருடன் விரைவில் பேசி முகாமை அங்கிருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் ஏற்கனவே ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடிதம் மூலம் அறிவித்துள்ள போதிலும் எவ்வித சாதகமான பதிலும் இது வரை கிடைக்கவில்லை என  பிரதேச வாசிகள் கடந்த காலங்களில் தெரிவித்தமை குறிபிடத்தக்கது தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தற்போது துறைமுகமென்றும் அமைக்கப்பட்டு வருவதால் இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் பெ
Image
பொத்துவில் பகுதியில் வாகனவிபத்து ஆசிரியர் ஒருவர் பலி. அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த டொல்பின் வான் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் ஒருவர் மரணமானார். ஐவர் படுகாயமடைந்தனர். ஆறு ஆசிரியர்கள் பயணம் செய்த இந்த வானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் வான் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொத்துவில் தாருல் பலாஹ் வித்தியாலய த்தில் கற்பிக்கும் லாபிர் (46வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான ஆசிரியரே இச் சம்பவத்தில் மரணமானார். வானில் பயணம் செய்த இரு அதிபர்கள் ஒரு ஆசிரியை ஒரு ஆசிரியர் வான் சாரதி ஆகியோர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கையடக்க தொலைபேசியில் ஆபாச இணையத்தளங்களுக்கு தடை

Image
கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையத்தளங்களைத் தடை விதிக்க   நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் கையடக்க தொலைபேசி ஊடாக பார்ப்பதை தடை செய்யக் கோரி வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர்  இது பற்றி குறித்த  கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் இரு மாதங்களுக்கு முன்னர்  உத்தரவிட்டது   இது தொடர்பில்கையடக்க தொலைபேசி நிறுவனங்களான டயலொக், மொபிடல், ஹட்ச், எடிசலாட், எயாடெல் ஆகியனஆபாச இணையதள பாவனையை கையடக்கத் தொலைபேசியில் தடை செய்வதற்கு ஏற்கனவே இணக்கம்  தெரிவித்துள்ளன கையடக்க தொலைபேசியில் ஆபாச இணையதள பாவனை அதிகரித்து வருவதே இத்தடைக்கு பிரதான காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர் இந்த தடை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது ஆனாலும் இந்த தடை ஆபாச தளங்களை கையடக்க தொலைபேசியில் முழுமையாக தடுக்குமா என்பதை தடை நடைமுறைக்கு வந்த பின்னர் தான் கூறமுடியும் என்று சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி கலந்து கொண்ட நிகழ்வு.

Image
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் உயர்தர மாணவர் தினவிழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதியும் கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவியுமான ஏ.எல்.நூருல் மைமுனா வரவேற்று அழைத்து வரப்படுவதனையும் பிரதம அதிதி தேசியக் கொடியினையும் கல்லூரி அதிபர் எம்.எம் இஸ்மாயில் கல்லூரி கொடியினையும் ஏற்றி வைப்பதனையும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியினையும்   நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.

மர்ஹூம் டாக்டர் எச்.எல். ஜமால்தீன் ஞாபகார்த்த துஆப் பிராத்தனையும், இப்தார் நிகழ்வும்

Image
மருதமுனை மர்ஹூம் டாக்டர் எச்.எல். ஜமால்தீன் பவுண்டேசனின் ஏற்பாட்டில் மர்ஹூம் டாக்டர் எச்.எல். ஜமால்தீன் ஞாபகார்த்த துஆப் பிராத்தனையும், இப்தார் நிகழ்வும்  2010.08.14ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் உள்ளக திறந்த முற்றத்தில் நடை பெற்றது .

ஒரு மணி நேர மழை முன்னூறு ஏக்கர் அறுவடை செய்த நெல் வயல் வெள்ளத்தில்

Image
  விவசாயிகள் கவலை  சனிகிழமை  பெயித  ஒரு மணி நேர  மழை  முன்னூறு ஏக்கர்  அறுவடை செய்த  நெல்  வயலை  வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது . இதனால் கல்முனை நற்பிட்டிமுனை விவ சாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். அறுவடை செயப்பட்ட நெல் ,வேளாண்மை  படகு, உளவு இயந்திர உதவிகளுடன் தரைக்கு எடுத்து வரப்படுகின்றன .இதனால் பாரிய சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அங்கு தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுவதால் பெண்  தொழிலாளர்கள்  பயன் படுத்த படுவதாகவும் , கரவாகு வட்டை வடிச்சல் பிரச்சினைதான்  இதற்க்கு காரணம் என கூறப்படுகின்ற போதிலும்  நீர்பாசன திணைக்களத்தின்  கவனம் அற்ற தன்மையும் இதற்கு காரணமாகும்.

மருதமுனையில் பஜிரோ விபத்து

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனையில் சனிக்கிழமை அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது . கொழும்பில் இருந்து அக்கரை பத்து நோக்கி பயணித்த புதிய பஜிரோ வாகனம்  வீதியை  விட்டு விலகி மின் பிரப்பாகியில் மோதுண்டு பலத்த சேதம் அடைந்துள்ளது. மின் கம்பிகள் அறுந்த போதிலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை

அரசாங்க, தனியார்துறை முஸ்லிம் ஊழியர்க்கு ரமழான் விஷேட விடுமுறை

Image
அரசதுறை முஸ்லிம் ஊழியர்களுக்கு ரமழான் கால சமயக் கடமைகளை நிறை வேற்றும் வகையில் விஷேட விடுமுறையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேபோன்ற விடுமுறையை தனியார் துறையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் வழங்குமாறு தொழில் அமைச்சர் காமினி லொகுகே அனைத்து தனியார்துறை தொழில் வழங்குநர்களையும் கேட்டுள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செப்டம்பர் 10 ஆம் திகதி வரை இவ்விஷேட விடுமுறையை வழங்குமாறு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தினசரி தொழுகைக்காக அனுமதிக் கப்பட்டுள்ள நேரம்: மு.ப 3.30 முதல் மு.ப. 6.00 மணி வரை பி.ப 3.15 முதல் பி.ப 4.15 மணி வரை பி.ப 6.00 முதல் பி.ப 7.00 மணி வரை பி.ப. 7.30 முதல் இரவு 10.30 மணி வரை நோன்பு பெருநாள் தினத்தன்று விசேட விடுமுறை, தகுதியுடைய முஸ்லிம் ஊழியர்களுக்கு நோன்பு காலம் முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னராக பண்டிகை அல் லது வேதன முற்பணக் கொடுப்பனவை வழங்குமாறும் அமைச்சர் தனதறிக்கையில் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்முனையில் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்

Image
பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சுமார் 60 பேர் சற்றுமுன் கல்முனை பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். டெங்கு ஒழிப்பு நிகழ்வில் பங்குபற்றத் தவறிய சமுர்த்தி உத்தியோகஸ்தரை நேற்றுமுன்தினம் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிவைத்தமைக்கு எதிராக நாடெங்கிலும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் கேட்போர் மண்டபம் திறந்துவைப்பு!

Image
எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஓன்றரை கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை இருதயநாதர் ஆண்டகை மண்டபம்  சனி  மாலை மட்டக்களப்பு-திருகோணமலை துணை ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்பினால் திறந்து வைக்கப்பட்டது. கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானா,மட்டக்களப்பு கல்முனை எகெட் பணிப்பாளர் அருட்தந்தை சிறீதரன் சில்வெஸ்டர் உட்பட பல பிரமுகர்கள் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

கல்முனையில் வாகன விபத்து

Image
கல்முனையில்  இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கல்முனை நகரில் இடம் பெற்ற விபத்தில் விபத்துக்குள்ளான பிக்கப் வண்டி மின் கம்பத்துடன் மோதுண்டு கிடப்பதை படத்தில் காணலாம்

கல்முனை கடற்கரையில் ஆண் சடலம் மீட்ப்பு

Image
கல்முனை கடற்கரையில் ஆண் சடலம் ஓன்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது வாசி எனவும் 22 வயதை மதிக்கத் தக்கவர் எனவும்  பொலிசார் அடையாளப் படுத்தி உள்ளனர். சடலத்தில் காயங்கள் காணப்படுகின்றன.