தோப்பூரில் குண்டுவெடிப்பு கனரக வாகனம் சேதம்
திருக்கோணமலை
மாவட்ட் மூது}ர் பிரதேச செயலாளர் பிரிவு தோப்பூர் கிராமத்தில் குண்டு
ஒன்று வெடித்ததில் கனரக வாகனம் ஒன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐக்கிய
நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் இத்திக்குளம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட
வேளையிலேயே இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது. வாகனம் ஓரளவு சேதத்திற்கு
உள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை தோப்பூர் காவல் நிலையத்தை சேர்ந்த
பொலிசாருடன் இணைந்த மூதூர் பொலிஸ் நிலைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிச்சத்த்தினால்
பிரதேச வாசிகள் அச்சமடைந்திருந்தாலும் பின்னர் நிலைமையயை ஊகித்துக்
கொண்டதால் அமைதியடைந்தனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில்
இடம் பெற்றுள்ளது.
இத்திக்குளத்தில் மண் அகழ்வு வேலைகளில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த வாகனமே (பக்கோ) சேதத்திற்கு உள்ளாகியது.
மீட்கப்படாத குண்டு ஒன்று குளத்தில் இருந்து வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட
விசாரணைகளில் தெரிய வந்துள்ளன
Comments
Post a Comment