Posts

Showing posts from March, 2013

புலிகளுக்கு உதவிய நாடுகள் பற்றிய தகவல்களை வெளியிடுவேன்!

Image
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அறிவிப்பு! புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உதவிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை தாம்  வெளியிடப் போவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்துள்ளார். போர் குற்றம் தொடர்பில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தியிடமும்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட்லி ஹெடம்ஸ் தெரிவித்திருந்தhர். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பிரதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு உதவிய தரப்பினர் குறித்த அறிந்த ஒரே நபர் நான். நோர்வே- சுவிஸர்லாந்து- தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் பயணம் செய்துள்ளேன். 409 ஆயுத ரகங்கள் தொடர்பான பட்டியலை பேங்கொக்கில் உள்ள விடுதியொன்றில் வைத்து- ஐஸ்சர் என்ற ஆயுத விற்பனை பிரதானியிடம் வழங்குமாறு பிரபாகரன் என்னிடமே அந்த பட்டியலை வழங்கினார். நான் நோர்வேயில் உள்ள ஆயுத நிறுவனங்களுக்கும் சென்றிருந்தேன். இதனால் கண்ணாடி வீடுகளுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என அரசசார்பற்ற நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன். அரசசார்பற்ற நிறுவனங்

ஏப்ரல் 15 விசேட பொது விடுமுறை

Image
ஏப்ரல் 15ஆம் திகதியை விசேட பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வருட தமிழ் சிங்கள சித்திரை புதுவருடம் 13 மற்றும் 14ஆம் திகதி விடுமுறை தினங்களில் வருகின்றது. இதன் காரணமாக ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிக்கப்படுவதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

2012 சா/த பரீட்சை பெறுபேறு ஏப்ரல் 10இல் வெளியீடு

Image
2012 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.புஸ்பகுமார தெரிவித்தார்.  பெறுபேறுகளை வெளியிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.  சா/த பரீட்சை இடம்பெற்ற போது ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீள் பரீட்சை நடைபெற்றதால் பெறுபேறு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட செல்லும் முஸ்லிம்களை சிலர் அச்சுறுத்தி வருவதாக தகவல்

Image
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைப் பார்வையிட அச்சமின்றி வருமாறு முஸ்லிம் மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். கண்காட்சிக்கு வரும் சகல மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.. அம்பாறையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட தினமும் பெருமளவு மக்கள் வருகை தருகின்றனர்.இங்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட செல்லும் முஸ்லிம்களை சிலர் அச்சுறுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். தேசத்துக்கு மகுடம் கண்காட்சி பூமியில் பொலிஸ் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமின்றி கண்காட்சியை பார்வையிட வருமாறும் அவர் பொது மக்களை கோரியுள்ளார். பயமுறுத்தல்களுக்கும் பொய் பிரசாரங்களுக்கும் அஞ்ச வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்

Image
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பாராபட்சம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அங்கு கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர் தனது உறவினர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் மாத்திரமே அனைத்து அமைச்சுக்களினதும், திணைக்களங்களிதும் நேர்முகப் பரீட்சைகளுக்கு அனுப்பி குறிப்பிட்ட பட்டதாரி பயிலுனர்கள் திருப்தியடைந்தால் மாத்திரமே ஏனையவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.  ஒரு குறிப்பிட்ட அமைச்சு, திணைக்களம் நேர்முகப் பரீட்சைக்காக பட்டதாரி பயிலுனர்களை அழைக்கும் போது தகுதியானவர்களை அனுப்பாது தனக்கு வேண்டியவர்களையும், உறவினர்களையும் மாத்திரமே சம்பந்தப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் அனுப்பி வருவதாகவும், இதன்காரணமாக தகுதியுள்ள பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன,மத பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் எனக்கூறிவருகின்ற வேளையில் கல்முனை தமிழ் பிரிவு பிர

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்கிறார்

Image
நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி செயலாளர்  கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை நற்பிட்டிமுனை பள்ளி வீதி வடிகான் தொடர்பாக எழுந்துள்ள பிரட்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று நட்பிட்டிமுனைக்கு அதிகாரிகளுடன்  வருகை தந்து உயர் மட்டக் கூட்டம் நடத்தி சிறந்த தீர்வினை பெற்று கொடுத்துள்ளார் . அதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எழுந்த நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி செயலாளர்  அமைச்சருக்கு நன்றி தெரிவித்து விட்டு அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் விடயம் தங்களுக்கு தெரியாது . இதனை உங்கள் ஊடகவியலாளர்கள் பத்திரிகைகளுக்கு எழுதி உள்ளனர் என சிறு பிள்ளை தனமாக தெரிவித்தார் .இதனை ஊடகவியலாளர்கள்  கண்டிக்கின்றனர் அமைச்சருக்கு  கல்லெறிந்து  இந்த ஊருக்கு வரவேண்டாம் என்று தடுத்தவர்களால்  வாழ்த்து தெரிவிப்பதற்கு பாராட்டுக்கள் .ஊடகவியலாளர்கள்  தொழில் இதுதான் என்பதை இன்றாவது புரிந்திருப்பீர்கள் .இந்த செய்தி பத்திரிகையில் வராமல் இருந்திருந்தால் பள்ளிவாசல் செயலாள்ருக்கே இந்த வீதி யின் அவலநிலை தெரிந்திருக்காது நன்றி -எம்.ஐ.என் 

கிழக்கு அமைச்சர் உதுமாலெப்பைக்கு நற்பிட்டிமுனை மக்கள் நன்றி தெரிவிப்பு

Image
நட்பிட்டிமுனையில் நிர்மாணிக்கப்படவுள்ள வீதி வடிகான் அபிவிருத்தியில் காணப்பட்ட குளறுபடிக்கு கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுத்து தீர்வு பெற்று கொடுத்தமைக்கு  இந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது . உலக வங்கியின் 69 மில்லியன் ரூபா நிதியில் நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதி இருபக்க வடிகானுடன் அபிவிருத்தி செய்யப்படுகின்றது .நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளிவாசல் அருகில் உள்ள உடைந்த வடிகானை உடைதகற்றாமல்  செப்பனிடுவதற்கு எடுத்த முயற்சியை கண்டித்து நற்பிட்டிமுனை மக்கள் கடந்த வாரம்  அமைச்சர் உதுமாலெப்பைக்கு எதிராக கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்தனர் .இதன் பிரதி பலிப்பாக  இன்று அமைச்சரின் ஏற்ப்பாட்டில்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் உயர் மட்டக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டம்  அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்  தலைமையில் நடை பெற்றது .பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன ,வீதி அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாண  பணிப்பாளர்  வீ.கருணை நாதன் ,பொறியியலாளர் ஏ.எம்.ரிஸ்வி ,கிழக்கு மாகான சபை உறுப்பினர

கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் திருவிழா

Image
கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் திருவிழா  இன்று காலை நடை பெற்றது .ஆலயத்தில் இருந்து புறப்பட்ட 36 அடி உயரமான தேர் கல்முனை நகர் ஊடாக சென்று மீண்டும் கல்முனை சந்தை வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேர் இழுத்து செல்லப்பட்டதுடன் பால்குட பவனி காவடிகள் மாணவிகளின் கூத்துகள் என்பனவும் அங்கு இடம் பெற்றது 

கல்முனை மாநகர பிரதேசத்தில் கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும்

Image
அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்க ளு க்கு ஏற்பட்டுள்ள அசாதாரன நிலமையினை கண்டித்து முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் இன்று (25.03.2013)  கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும் இடம்பெற்று வருகின்ற து. இதற்கமைவாக கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்தக நிலயங்கள் மற்றும் பொதுச் சந்தை என்பன மூடப்பட்டு காணப்படுகிறது. அத்தோடு வீதியில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது.   பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பின் மத அடக்கு முறைக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே   இவ்  அமைதியான எதிர்பு நடவடிக்கை மேற்கௌளப்படுகிறது. இந்த கடையடைப்பு ஹர்த்தாலுக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு   அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடக வலயக் கண்காட்சிக் கூடத்தை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திறந்து வைப்பு

Image
தயட்ட கிருள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நேற்று உத்தியோக பூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பொது ஊடக வலயக் கண்காட்சிக் கூடத்தை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திறந்து வைத்;தார், நிகழ்வில் ஊடக அமைச்சின் செயலாளர் கணேகல, ரூபவாஹினி கூட்டுத்தாபன தவிசாளர் மொஹான் சமரனாயக, சுயாதீன ஊடக வலையமைப்பின் தவிசாளர் றொஸ்மன் சேனரத்ன உட்பட  ஊடகத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளா..? உடனே தொடர்புகொள்ளுங்கள்..

Image
பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் உடனுக்குடன் முறைப்பாடுகளைச் செய்வதற்காக ‘1938’ என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ள முடியும். சமூகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிர யோகங்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாகின்ற பெண்களின் நலன் கருதியே ‘1938’ தொலைபேசி இலக்கத்தையும் அதனோடு செயற்படக் கூடிய பொலிஸ் கரும பீடமொன்றையும் ஸ்தாபித்துள்ளது.  துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு விதங்களில் இம்சைக்குள்ளாக்கப்படும் பெண்கள் உடனடியாக மேற்படி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு தமக்கான சட்ட உதவிகளையும் நிவாரணங்களையும் பெற இதன் மூலம் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  வீடுகளில், தொழில்புரியும் இடங்களில் மற்றும் பஸ், ரயில் போன்ற போக்குவரத் துக்களில் பெண்கள் எதிர்கொள்ள நேரும் துஷ்பிரயோகங்களை இத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். முறைப்பாடுகளை ஏற்கும் விசேட பொலிஸ் பிரிவு அது தொடர்பில் உடனடியாகச் செயற்பட்டு விசாரணைகளில் ஈடுபடும். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட நிவாரணத்தையும் பெற்றுத் தரும். இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் நேரடிக் கண

ஹலால் தொடர்பான குறுஞ்செய்தி உங்களுக்கும் வருகிறதா ?

Image
ஹலால் தொடர்பில் குறுஞ்செய்தி தகவல்களை உறுதி செய்யாமல் நம்ப வேண்டாம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தெரிவித்துள்ளது.  அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் தொடர்பாக பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று (23) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் மணியளவில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் சபையின் பொறுப்பாளர் மௌலவி எம்.எம்.இர்பான், கண்டி மத்ரஸதுல் புர்கானியா அரபுக் கல்லூரியின் அதிபரும் ஹலால் சபையின் உறுப்பினருமான எச்.உமர்தீன் ஆகியோர் விஷேட உரையாற்றினர்.  இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் மௌலவி அலியார் (பலாஹி) இகாத்தான்குடி ஜம்மியதுல் உலமா செயலாளர் மௌலவி ஜிப்ரி (மதனி), மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியதுல் உலமா செயலாளர் மௌலவி முஸதபா (இஸ்லாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவர் அப்துல்ஜவாத் பீ.ஏ கவிமணி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி), சம்மேளன உப செயலாளர் சாதிக்கீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான யூ.எல்.எம்.முபீன், கே.எல்.எம்.பரீட், தொழிலதிபர் கலீல் மற்றும் உலமாக்கள், அரபு மத்ரசாக்களின் அதிபர

கல்முனையில் மின்னொளி வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!

Image
கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு மூன்று பேர் கொண்ட மின்னொளி வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப விழா கழகத்தின் தலைவர் ஏ.டப்ளியு.எம். ஜெஸ்மின் தலைமையில் கல்முனை கடற்கரை அல்- மிஸ்பாஹ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்கள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றன. ஆரம்பநாள் முதலாவது போட்டியில் சாய்ந்தமருது அல்-ஜலால் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கல்முனை அல்- மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகம் விளையாடியது. இதில் சாய்ந்தமருது அல்-ஜலால் விளையாட்டுக ;கழகம் கல்முனை அல்- மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து வெற்றிபெற்றது.  இச்சுற்றுப் போட்டிக்கான பூரண அனுசரணையினை கல்முனை ஒரேஞ் டீ கம்பனி, டொப் குயின் நிறுவனத்தினர் வழங்குகின்றனர். இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் 29.03.2013 வெள்ளிக்கிழ

அம்பாறை விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

Image
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஒரு அம்சமாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள அம்பாறை உகன விமானப் படைமுகாம் சூழலில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் விமான நிலையம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. “தேசத்துக்கு மகுடம்” தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிழக்கிலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் குறிப்பிடத்தக்க அம்சமாக மேற்படி விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கின் அபிவிருத்தியில் முக்கிய அம்சமாக விளங்கும் மேற்படி விமான நிலையம் 1600 மீற்றர் நீளமான பாதையையும் பிரயாணிகள் கூடம் உள்ளிட்ட ஏனைய பல பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. தினி 32 வீ12 போன்ற விமானங்களை செயற்படுத்தும் வகையில் இவ் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேற்படி நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரத்ன, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல, விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேசத்திற்கு மகுடம் ஆரம்பம் - முஸ்லிம் அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு

Image
'தெயட கிருள'' தேசத்துக்கு மகுடம் 2013 தேசிய அபிவிருத்திக் கண்காட்சி இன்று அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் கல்லூரியில் பிற்பகல்05.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 23ம் திகதியிலிருந்து முதல் நாளான 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியின் முதல் நாளான இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ,தொலைத் தொடர்புகள் அமைச்சரும் 'தெயட கிருள'' தேசத்துக்கு மகுடம் 2013 தேசிய அபிவிருத்திக் கண்காட்சியின் தலைவருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, நீதியமைச்சரும் ஸ்ரீ.ல.மு.கா தலைவருமான றஊப் ஹக்கீம், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் அடங்கலாக முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். 30 வருட கால யுத்தத்தினால் சேதமடைந்த கிழக்கு பிரதேசத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் 20

அம்பாறை ஆஸ்பத்திரியில் சிறுவர் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Image
அம்பாறை ஆஸ்பத்திரியில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சிறுவர் சிகிச்சை நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார். இது தொடர்பில் நடைபெற்ற விசேட வைபவத்தில் ஆஸ்பத்திரியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கிக் கௌரவித்தார். அதன் பின்னர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயார்களை ஜனாதிபதி நேரில் சந்தித்து உரையாடினார். சுகாதரா அமைச்சினால் நாடு முழுவதிலும் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு 250 அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கான அம்பியூலன்ஸ் வண்டிகளை ஜனாதிபதி கையளித்தார்

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இபாட் வீட்டுத்திட்டம் திறந்து வைப்பு

Image
"எல்லோருக்கும் வசந்தம்" மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இபாட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீட்டுத்திட்ட தொகுதி, பல்தேவைக் கட்டிடம், விற்பனை நிலையம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வும் நேற்று சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வு இபாட் நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் பிரதாப் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகவும், கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத