கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் திருவிழா இன்று காலை நடை பெற்றது .ஆலயத்தில் இருந்து புறப்பட்ட 36 அடி உயரமான தேர் கல்முனை நகர் ஊடாக சென்று மீண்டும் கல்முனை சந்தை வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேர் இழுத்து செல்லப்பட்டதுடன் பால்குட பவனி காவடிகள் மாணவிகளின் கூத்துகள் என்பனவும் அங்கு இடம் பெற்றது
முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடியில் திறந்து வைக்கப்படவுள்ளது என அறிய முடிகின்றது முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் செயற்பாடுகளை மாகாண மட்டத்தில் பரவலாக்கும் முகமாகவே இவ்வலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது இதன் இரண்டாவது பிராந்திய அலுவலகம் புத்தளத்தில் திறக்கப்படும் என்று வேறு சில தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது காத்தான்குடி பிராந்திய அலுவலத்தின் ஊடாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 750 இற்கு மேற்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் அரபு கலாசாலைகள் நன்மையடையும் என எதிர்பார்க்க படுகின்றது விரிவாக பார்க்க எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ன இப்பிராந்திய அலுவகத்தை திறந்து வைப்பார் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகம் தற்காலிகமாக காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் இயங்கவுள்ளதுடன், இப்பிராந்திய அலுவலகத்த்திற்கென உதவி பணிப்பாளர் ஒருவரும் நியமிக்கப...
நாளை ஏப்ரல் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான வாராந்த வேலைக்கால வாரம் அரச தனியார் ஆகிய இரண்டுபிரிவினருக்கும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். கடந்த வாரமும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும்;. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக் காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment