71 வது சுதந்திரதின நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ். கொட்டும் மழையிலும் நனைந்து நிகழ்வில் பங்கேற்றார்
கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம் இன்று காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவம் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடை பெற்றது. கிழக்கு மாகாண பிரதம செயலகமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப் மரியாதையும் கலை நிகழ்வும் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான நஜீப் அப்துல் மஜீத், ஜயந்த விஜேசேகர அரசியல் பிரமுகர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கொட்டும் மழையிலும் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இந்றைய நிகழ்வில் எவ்வித மழைத்தடுப்புகளையும் பயண்படுத்தாது செயற்பட்டமை பலரையும் வியப்பூட்டியது. ...