அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 26வது மேதினம்

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 26வது மேதின ஊர்வலமும்   பொதுக் கூட்டமும் இன்று (07) திங்கட் கிழமை கல்முனையில் நடை பெற்றது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ் லோகநாதன் தலைமையில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனமும் ஒன்றிணைந்து நடாத்திய தொழிலாளர் தின நிகழ்வு  கல்முனை செலான் வங்கி கட்டிட IP  மண்டபத்தில் நடை பெற்றது.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுய ஆட்சியை ஏற்படுத்துமாறு அரசை கோரல், விலைவாசி உயர்வு  காரணமாக பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு ரூபாய் 15000 சம்பள உயர்வு  வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட 16அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகஜர் அனுப்பி வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய தொழிலாளர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்
.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்