Posts

Showing posts from June, 2018

கல்முனை கடலரிப்பு தடைக் கற்களை சீராக ஒழுங்குபடுத்தி தருமாறு மக்கள் வேண்டுகோள்

Image
நிப்ராஸ் மன்சூர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அண்மித்த கடற்கரை யோரத்தில்  கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல தசாப்தங்களுக்கு முன்னாள் இடப்பட்ட பாரிய பாரங்கற்களை சீராக ஒழுங்குபடுத்தி தருமாறு பிரதேச அரசியல்வாதிகளிடம் பொது மக்கள் வேண்டுகின்றனர்.  குறித்த பள்ளிவாசலுக்கு அண்மித்து செல்கின்ற கிழக்கு கடற்கரை வீதியில்  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஸ்தரிப்பு பணிக்காக நகர்த்தப்பட்ட கற்கள் கடற்கரையில் ஆங்காங்கே பரவிக் காணப்படுவதனால் ஒய்வு நேரங்களை கழிப்பதற்காக இங்கு வருகின்ற பொது மக்களுக்கு இது அசெளகரியங்களை ஏட்படுத்துவதுடன் கடற்கரையின் அழகிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  கடல் கொந்தளிப்பு காலங்களில் பாரிய கடல் அலைகளினால் இக் கற்கள் படிப்படியாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுமாக இருந்தால் இப் பிரதேசத்தில் பாரம்பரியமாக மேற்கொண்டுவரும் கரை வலை மீன்பிடி தொழிலிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதனால் இவ்விடயங்களை கருத்தில் எடுத்து விரைந்து செயற்படுமாறு பொது மக்கள் பிரதேச அரசியல் வாதிகளிடம் வேண்டுகின்றனர்.  மேலும் இது விடயமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள்  சம்மந்தப்பட்ட

நேற்று மாலை கிழக்கில் வீசிய சூறாவளியில் நட்பிட்டிமுனை கிராமத்தில் பலத்த சேதம்

Image

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திர வேலாயுதர் தேவஸ்தான வருடாந்த கும்பாபிஷேகம்

Image
பாண்டிருப்பு அருள்மிகு  ஸ்ரீ சித்திர வேலாயுதர் தேவஸ்தான வருடாந்த கும்பாபிஷேக தினநவோத்திர சத சங்காபிஷேக பெருவிழாவின் 11ஆம் நாள் சடங்குகளான சப்பரத் திருவிழா , பாற்குடப்பவனி , சங்காபிஷேக கிரியைகள் இன்று (03) நடை பெற்றது. கடந்த மே மாதம் 23 ஆம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமான உற்சவகால கிரியைகள் கடந்த 10 தினங்களாக புண்ணியாகவாசனம்,வாஸ்துசாந்தி , வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதி வலம் வருதல் நடை பெற்று இன்று காலை சப்பரத் திருவிழா இடம் பெற்றது. அதனை தொடர்ந்து பாண்டிருப்பு  மாரியம்மன்   தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவனி  நிகழ்வில் பெருந் தொகையான பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர். நாளை திங்கட் கிழமை காலை 7.00 மணிக்கு திருப்பொற்சுண்ண சூர்ணோற்சவ ஆராதனையைத் தொடர்ந்து  பகல் மகேஸ்வரப் பூஜையாக சமுத்திர தீர்த்தோற்சவம் இடம் பெற்று இரவு  7.00 மணிக்கு  வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சித்திர வேலாயுதப் பெருமானுக்கு சுப முகூர்த்தத்தில் மணவாளக் கோல திருமாங்கல்யதாரண திருப் பொன்னூஞ்சல் நடை பெற்று கிரியைகள் யாவும் நிறைவு  பெறும்.