Posts

Showing posts with the label பொது விடயம்

அரச துறையினருக்கான சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்

Image
அரச துறையினருக்கான மாத சம்பளம் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி முன்னர் செலுத்தப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதியோர், நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்க ஏற்பாடு

Image
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குரிய முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்குவதற்கு உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார் இதற்கமைய முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இததொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த கொடுப்பனவை பெறும் பயனாளிகள் தங்களின் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரை சந்தித்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் மற்றும் மாகாண சபையினால் முதியோர் மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தபால் அலுவலங்களினால் செலுத்தப்படும் இந்த கொடுப்பனவை வழங்குவதில் எதிர் நோக்கப்படுவதாக தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார் விசேடமாக கொவிட் 19 தொற்று தொடரபில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதால், கிராம உத்தியோகத்தருக்கு முன்கூட்டியே அறிவித்துவி...

கல்முனை துளிர் விளையாட்டுக்கழகத்தின் மனிதாபிமான சேவை

Image
தொடர் போலிஸ் ஊரடங்குச் சட்டத்துக்கு முகம் கொடுத்து  தோற்றுநோ ய் எதிர்ப்பு பணிக்கு அர்ப்பணிப்பு செய்யும் மாநகர சபை ஊழியர்களுக்கும் ,கடமையில் ஈடுபடும் இராணுவத்தினருக்கும் தெருவோரங்களில் தங்களின்  பொழுதைக்கழிக்கும் யாசகர்களுக்கும் இன்று காலை உணவை கல்முனை துளிர்  விளையாட்டு  கழக உறுப்பினர்கள் பகிர்ந்தளிப்பு  செய்தனர் . உண்மையாகவே இவர்களது சேவை இக்காலகட்டத்தில் சாலச்சிறந்தது .

கல்முனை செயலான் வங்கிக்கிளையின் 8வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

Image
கல்முனை செயலான்  வங்கிக்கிளையின்  8வது  ஆண்டு நிறைவு  கொண்டாட்டம்  வங்கி முகாமையாளர் எஸ்.உதயகுமரன்  தலைமையில்  கடந்த புதன்கிழமை (04) சாய்ந்தமருது  சீ பிரீஸ்  மண்டபத்தில் நடை பெற்றது  முன்னாள் முகாமையாளர்  திருமதி பிறேமினி  உட்பட  வங்கி  ஊழியர்கள்  வாடிக்கையாளர்கள்  கலந்து கொண்டனர் 

அரச நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

Image
அரசாங்கத்துக்கு உட்பட்ட கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாயாதிக்க சபைகளுக்கு தலைவர் மற்றும் பணிப்பாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள தொழில் அனுபவத்தைக் கொண்டவர்களிடம் இருந்து ஜனாதிபதி செயலாளர் விண்ணப்பங்களை கோரியுள்ளார். இதற்கு அமைவாக அரசாங்கத்திற்கு உட்பட்ட மேம்பாட்டு பிரதி நிறுவனங்கள், அரசியல் யாப்பு சபைகள், நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள், நியாதிக்க சபைகள் ஆகியவற்றிற்கு தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர் ரீதியில் பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள தொழில் துறையினர் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்று ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தர வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது; இதற்கான விண்ணப்பம் மற்றும் ஆலோசனைகளை டிசம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மேலதிக செயலாளர், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 1 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நேர்முக பரீட்சை சபையினால் தகுதியை கொண்டவர்கள் நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்படுவர்.

நள்ளிரவு முதல் செரண்டிப் கோதுமை மாவின்விலை அதிகரிப்பு

Image
இலங்கையில் காணப்படும் நம்பிக்கையை வென்ற கோதுமை மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் மா ஆலை, தவிர்க்க முடியாத புறக்காரணிகள் காரணமாக தமது கோதுமை மா தயாரிப்புகளின் விற்பனை விலையை நவம்பர் 16 திகதி நள்ளிரவு 12 மணி முதல் 8 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்திய புறக்காரணிகளில், கடந்த மாத காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கம் ஒன்றாக அமைந்துள்ளது. 2018 ஜனவரி 1 ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 153.50 ரூபாவாக காணப்பட்டது. ஆனாலும், இன்றை சூழலில் இந்தப் பெறுமதி 181.00 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் சுமார் 27.50 ரூபா மதிப்பிறக்கத்தை இலங்கை ரூபாய் பதிவு செய்துள்ளது. இரண்டாவதாக, இந்த காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை மற்றும் கப்பல் சரக்கேற்றல் விலைகள் 15% அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. மூன்றாவதாக, பணவீக்கம் மற்றும் பொதியிடல் மூலப்பொருட்கள் செலவுகள் அதிகரிப்பு அமைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரப்படி வருடாந்த பணவீக்கம் ச...

உறவுக்கு பங்கமில்லாத உமா வரதனின் மோகத்திரை

Image
பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் உலக சிறுகதை எழுத்தாளர் உமா வரதராஜன் எழுதிய மோகத்திரை நூல் அறிமுக நிகழ்வு  நேற்று (31) சனிக்கிழமை மாலை கல்முனை உவெஸ்லி கல்லூரி நல்லதம்பி மண்டபத்தில் நடை பெற்றது. டாக்டர் புஸ்பலதா லோகநாதன் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு  முதற்பிரதியை வெளியிட்டு வைத்தார்  உலக கவிஞர் சோலைக்கிளி நூலின் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார் நூலின் அறிமுகவுரையை சிவ வரதராஜனும் வெளியீட்டுரையை பேராசிரியர் சி.மௌனகுருவும் , நூல் பற்றிய கருத்துரை  திரைப்பட இயக்குனர் ஏ.ஹஸீன் மற்றும் விரிவுரையாளர் பிரியதர்ஸினி ஜெதீஸ்வரன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது. ஏற்புரையை சிறுகதை எழுத்தாளர் உமா வரதராஜன் நிகழ்த்தினார்  சமீப காலத்தில் கல்முனை பிரதேசத்தில் எழுந்துள்ள முறுகல் நிலைக்கு அப்பால்  தமிழ் முஸ்லிம் உறவுக்குப் பங்கமில்லா நிகழ்வாக உமா வரதராஜனின் மோகத்திரை நூல் வெளியீட்டு விழா அமைந்திருந்ததும் கல்முனையில் இடம் பெற்ற இலக்கிய விழாவில் பெருந்தொகையான எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தமையும்...

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு

Image
அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  இதேவேளை இரவு தபால் புகையிரத சேவை நேற்று இடம்பெறவில்லை. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இரவு தபால் புகையிரத சேவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  இருப்பினும், காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  இதற்கமைய கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - மன்னார், கொழும்பு - மட்டக்களப்பு, கொழும்பு - திருகோணமலை - கொழும்பு – பதுளை ஆகிய இடங்களுக்கான புகையிரத சேவைகள் இடம்பெறும். இந்த நகரங்களில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவை பகல் வேளையில் இடம்பெறும்.  அனைத்து அலுவலக மற்றும் புகையிரத சேவைகளை மேற்கொள்வதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் எ...

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது

Image
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.  IS அமைப்பின் AMAQ செய்தி சேவை ஊடாக இந்த புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த புகைப்படத்தில் உள்ள 8 பேரில் 7 பேர் முகத்தை மறைத்துள்ளதுடன் அதில் ஒருவர் மட்டும்  முகத்தை திறந்தவாறு  உள்ளார்.  முகத்தை திறந்தவாறு  உள்ள குறித்த நபரே இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹசீம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடமையை பொறுப்பேற்றார்

Image
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை வெள்ளிக்கிழமை நாரஹேன்பிட்டிலுள்ள அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தில்  முன்னாள் கல்முனை மாநகர  முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  கடமையை பொறுப்பேற்றார்.இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்  அமீர் அலி, பிரதி அமைச்சர்  மஃறூப் ,பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்  இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 

கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள தீயணைப்புச் சேவையின் தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

Image
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் மிக நீண்ட காலமாக தீயணைப்புச் சேவையில் கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் மாகாணத்தின் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்குற்பட்ட 66பேருக்கே இந் நியமனங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளர் சம்பளம்; கொடுப்பனவுகள் சகிதம் ரூ.855 ஆக அதிகரிப்பு

Image
கடந்த நான்கு மாதங்களாக இழுபறி நிலையில் இருந்துவந்த கூட்டுஒப்பந்தப் விவகாரம், இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூபா 700 அடிப்படைச் சம்பளத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளமாக ரூபா 700, விலைக் கொடுப்பனவு ரூபா 50, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியமாக ரூபா 105 என்ற அடிப்படையில், மொத்தச் சம்பளம் ரூபா 855 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாகப் பறிக்கப்படும் கொழுந்து ஒரு கிலோவுக்கு தலா ரூபா 40 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம், இது வரை ரூபா 500 (கொடுப்பனவு உள்ளிட்டு ரூ. 530) ஆக காணப்பட்டதோடு, அதில் ஊழியர் சேமலாப நிதியத் தொகையும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் திணைக்களத்தில், இன்று (25) இடம்பெற்றது.   இன்றைய பேச்சுவார்த்தையில், தொழில் அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் மத்தியஸ்தம் வகிக்க, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும...

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் Online மூலம் பதியலாம் (Application)

Image
மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன் அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத்தளத்தினை ஒன்லைன் ஊடாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.   அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் வேலைகள் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் மாவட்ட செயலகத்தினால் விண்ணப்ப படிவங்கள் ஊடாக தரவுகள் பதியப்பட்டு வந்த போதிலும் தூர இடங்களிலிருந்து வருகின்ற போது அதற்கான கால நேரம் பண விரயம் மற்றும் பல அசௌகரிங்கள் என்பவற்றினை கவனத்தில் கொண்டு வேலையற்ற பட்டதாரிகள் இலகுவாக இப் பதிவினை ஒன்லைன் ஊடாக வீட்டில் இருந்தவாறே இலகுவாகவும், துரிதமாகவும்மேற்கொள்ள இம்முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  Please Click on your Divisional Secretariat Division to Proceed the Online Forum (உங்களது பிரதேச செயலாளர் பிரிவை தெரிவு செய்யுங்கள்)                                 ...