முதியோர், நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்க ஏற்பாடு


2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குரிய முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்குவதற்கு உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்
இதற்கமைய முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இததொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
இந்த கொடுப்பனவை பெறும் பயனாளிகள் தங்களின் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரை சந்தித்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் மற்றும் மாகாண சபையினால் முதியோர் மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தபால் அலுவலங்களினால் செலுத்தப்படும் இந்த கொடுப்பனவை வழங்குவதில் எதிர் நோக்கப்படுவதாக தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்
விசேடமாக கொவிட் 19 தொற்று தொடரபில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதால், கிராம உத்தியோகத்தருக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு அவரை சந்திக்க செல்லுமாறு தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது