Posts

Showing posts from January, 2015

அமைச்சர் ஹசனலிக்கு சொந்த ஊர் நிந்தவூரில் வரவேற்பு

Image
சுகாதார சுதேச வைத்தியத் துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ ஹசன் அலிக்கு  இன்று நிந்தவூரில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.  இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியுடன் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர்  எம்.ஏ.எம் தாகிர் ஆகியோரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.  வரவேற்பு ஊர்வலத்தின் இறுதியில் நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட துஆ பிராத்தனையிலும் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி கலந்து கொண்டதுடன் நிந்தவூர் அஸ்ரப் சதுக்கத்தில் வவேற்பு விழாப் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.  நிந்தவூர் பிதேசசபைத் தவிசாளர் எம்.ஏ.எம் தாகிர் தலமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு விழாப் பொதுக்கூட்டத்தில் நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி உயர் பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து க

72 மணித்தியாலத்துக்குள் கிழக்கு முதலமைச்சர் யாரென தெரிய வரும் - அமைச்சர் ஹக்கீம்

Image
கிழக்கு முதலமைச்சர் யார் என்பதை இன்னும் 72 மணித்தியாலத்துக்குள் மக்களுக்கு அறிவிப்பேன்  என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபி அபிவிருத்தி  மற்றும் நீர் வழங்கல்  வடிகாலமைப்பு  அமைச்சருமான  ரவுப் ஹக்கீம்  மருதமுனையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மாவட்ட செயற் குழு கூட்டத்தில் தெரிவிதார் . ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற் குழுக் கூட்டம் மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது . அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்  கண்ட வாறு தெரிவித்தார். 

வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் சுனாமி வீட்டுத்திட்டத்தில் தீ விபத்து, இருவர் பரிதாப உயிரிழப்பு

Image
சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் சுனாமி வீட்டுத்திட்டப் பிரதேசத்தில் இன்று (30) நள்ளிரவு குடிசை ஒன்று தீப்பற்றியதில் தந்தை, மகன் பலி மகள் எரிகாயங்களுடன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்மபவத்தில் சின்னத்தம்பி ஆதம்லெப்பை வயது – 43, மகன் ஆதம்லெப்பை றிஸான் வயது- 02 ஆகியோர் குடிசையினுள்ளே மரணமடைந்துள்ளனர். மகளான ஆதம்லெப்பை றியா வயது – 05 என்பவர் தீக்காயங்களுடன் அம்பாறை பொதுவைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இது ஒரு திட்டமிட்ட செயல் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மரணமடைந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் இடம்பெற்ற குற்றச் சம்பவம் ஒன்றிற்காக எதிர்வரும் மாதத்தில் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கொன்றில் சாட்சியாக உள்ளார் எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்பாக அப்பிரதேசத்தில் பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நியாஸ் வயது -45 எம்பவர் சம்மாந்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்ந சம்மபவம் தொடர்பான

கல்முனை மாநகரம் கட்டாக்காலிகளின் நகரமாக மாறிவிட்டது

Image

கல்முனை தமிழ் மக்களுக்கு சுய தொழிலுக்கான உதவி

Image
கிழக்கு மாகாண  சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன்  கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர்  எம்.ராஜேஸ்வரன்  கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான உபகரணங்களும் , நிதி கையளிக்கும் நிகழ்வும் இன்று கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.  பிரதேச செயலாளர் கே.லவநாதன்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர்  எம்.ராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உபகரணங்களையும் , நிதியையும்  வழங்கி வைத்தார் . 

கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம்- ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

Image
(சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம் சலீம்)  கிழக்கு மாகாண  சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம் செய்யப் படவுள்ளதாக  சம்மாந்துறையில் இடம் பெற்ற  நிகழ்வொன்றில் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல்  அமைச்சர் ரவூப் ஹக்கீம்  சம்மாந்துறையில் இன்று தெரிவித்தார். இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹும் எம்.வை.எம். மன்சூரின் 25 ஆவது வருட நினைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்ட தகவலை அவர் வெளியிட்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் மன்சூர் ஏ.காதர் தலைமையில் சம்மாந்துறை 'வேர்கள் விழுதுகள்' சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை அப்துல் மஜீத் நினைவு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.  கடந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் , அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப் பட வேண்டும் என  உள்ள நிலையில்  இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடாத்த

கல்முனையில் வரவு செலவு திட்ட மகிழ்ச்சி விழா

Image
ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சியில் இன்று பாராளுமன்றதுக்கு கொண்டுவரப் பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் 13 அத்தியாவசியப் பொருட்களுக்கான  விலைக் குறைப்பயடுத்து  கல்முனை மக்களால் ஏற்பாடு செய்யப் பட்ட துஆ பிரார்த்தனையும் பால் சோறு வழங்கும் நிகழ்வும்  கல்முனைக் குடி ஆட்டோ பஸார்  சந்தியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகம் முன்பாக இடம் பெற்றது. கல்முனை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் எஸ்.எல்.முஹீஸ் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் மக்கள் பலர் கலந்து கொண்டு  மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் ஜனாதிபதிக்கும் , நாட்டு மக்களுக்கும் விசேட துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தப் பட்டது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு

Image
அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000 ரூபாவும் ஜூன் மாதம் மிகுதி 5000 ரூபாவும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதேவேளை, தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்துமாறு தனியார்துறை நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் தனியார் துறை முயற்சியான்மையாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை எனவும் அந்த நலன்களை ஊழியர்களுக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இ

தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராக சுஹைர் நியமனம்

Image
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர்  நாயகமாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் ஜனாதிபதி மைதிரியினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைருக்கு இன்று மாலை கையளிக்கப்பட்டது. பதவி வழியாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயகோன் தவிசாளராக இந்த ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுகின்ற நிலையில் இதன் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எம்.சுஹைர், ஈரானுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றியதுடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபகத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார் . 

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்!குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார்

Image
அண்மையில் சில உள்ளூர் சமூக இணையத்தளங்களில்  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களைத் தொடர்புபடுத்தியும் வெளிவந்த செய்திகள் தொடர்பாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரை தொடர்பு கொண்டு கேட்டோம். சில உள்ளூர் இணையத்தளங்களில் வெளிவந்துள்ள குறித்த குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த உபவேந்தர், குறித்த இணையத்தளங்களால்  முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும், இவைகளால் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் சார்ந்த உயரதிகாரிகள் விளக்கம் கோரும் பட்சத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பும் உதவியும் புரிவதற்கு தயாராய் இருப்பதாகவும், எந்தக்குற்றச்சாட்டுக்களுக்கும் முகம்கொடுக்கவும் தன்னால் முடியும் என்றும் தெரிவித்தார்.

கல்முனை கார்மேல் பற்றிமா சாதனையாளர் பாராட்டு

Image
2014 இல் வெளியான 5ம் தர புலமைப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதி கூடிய மாணவர்கள் சித்தியடைந்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் சாதனையாளர்களை பாராட்டும் விழா நேற்று (27) மாலை  முதல்வர்  அருட் சகோதரர் ஸ்ட்ரீபன்  மத்தியு தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகவும் ,கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் ,பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில் வாகனம் , கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வீ.ஜெகநாதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர் . கல்லூரியல் சித்தியடைந்த 71 மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவர்களுக்கான பாராட்டுக்களும் பரிசளிப்புக்களும் இடம் பெற்றன .அத்துடன் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப் பட்டனர். நிகழ்வில் பெற்றோர்களும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர் .

ஊடக ஒழுக்க கோவை எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு

Image
(பீ .எம்.எம்.ஏ.காதர்) மாறிவரும் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் இன்று ( 27.1.2015) செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டையிலுள்ள கிங்கஸ் பெறி ஹோட்டலில் இன்று காலை ஆரம்பமான இந்த மாநாடு நாளை புதன்கிழமை மாலை நிறைவடையவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா மற்றும் இந்தியா பாகிஸ்தான் , மியன்மார் , நேபால் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இலங்கையில் இருந்தும் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை மற்றும் முரன்பாட்டுச் சூழலில் ஊடகங்களின் சம நிலை போன்ற பல் வேறு தலைப்புக்களில் கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் இடம் பெறுகின்றன. இந்த மாநாட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் அவர்களும் பங்கு பற்றியுள்ளார்.

முதலமைச்சர் பதவியை மு.கா.வுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்; ராஜினாமாவுக்கும் நஜீப் தயார்!

Image
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உயர்மட்டம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது. நேற்று  திங்கட்கிழமை மாலை ஐக்கிய மாக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில் கூட்டப்பட்ட இவ்விசேட கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் ஸ்ரீபால டி.சில்வா உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உட்பட அம்மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். இதன்போது கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான அவசியம் வலியுறுத்தப்பட்டு அது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு ஆட்சியை நிறுவும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பத்

கல்வி மேம்பாட்டுக்கான சமூக அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்வி மேம்பாட்டுக்கான சமூக அமைப்பின் ஏற்பாட்டில்  ( AFEDS )  2013ம், 2014ம் கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு  தெரிவு  செய்யப்பட்ட மருதமுனைப் பிரதேச மாணவர்களை கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கிய நிகழ்வு  அண்மையில்  மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவில் நடைபெற்றது. கல்வி மேம்பாட்டுக்கான சமூக அமைப்பின் தலைவர் எம்.ஏ.ஏ.ஆபித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எம்.என்.எம்.நாஜித், பொருளாளர் ஏ.எல்.ஏ.பாஸித் ஆகியோருடன் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு 24 மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர். கடந்த ஆண்டில் இருந்து கிழக்கில் பல்வேறுபட்ட சமூக சேவைகளை இந்த கல்வி மேம்பாட்டுக்கான சமூக அமைப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கௌரவிப்பு நிகழ்வு 

கல்முனையில் ஐ.தே .கட்சிக்கு மீண்டும் உயிர் மூச்சு

Image
கல்முனை செய்தியாளர்கள்  -  ,அஸீஸ் ,ரம்ஸான், இஸ்ஹாக்   அண்மையில் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து ஆட்சிமாற்றத்தின் உச்ச பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சியினர் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் புத்துணர்ச்சி பெற்று வருகின்றனர். கடந்த ஜனாதிபத்தித் தேர்தலின் போது நாட்டிலேயே அதி உச்ச வீதமான 89.81 வீத வாக்குகளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு வழங்கிய கல்முனை பிரதேசங்களிலும் ஐக்கிய தேசியகட்சியின் மீள் உத்வேகம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன அதன் அடிப்படையில் 2015.01.26ல், கல்முனையில் மிகவும் பழமைவாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அதாவது 09-09-1969ல் முதலாம் இலக்கத்தைக் கொண்டு ஆரம்பித்து செயற்பட்டு வந்த கல்முனைக்கிளை, அதன் தலைவர் ஏ.எம்.ஹுசைன் ஜே.பி.தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த்திருந்தது. இந்த சந்திப்பின் போது இக்கிளையின் செயலாளர் ஏ.எம்.நூறுல்லாஹ்வும் மற்றும் ஏ.ஏ.அஸீஸ் உட்பட ஐக்கிய தேசியகட்சியின் கல்முனைக் கிளை முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழவில் ஐக்கிய தேசியகட்சியின் கல்முனைக் கிளையின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்க

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள், பணிப்பாளர்கள் நியமனம்!

Image
அரசாங்க ஊடகங்களுக்கு புதிய தலைவர்க மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.ரி.என். தலைவராக பேராசிரியர் டி.ஜி.திஸாநாயக்கவும் அதன் செயற்பாட்டுப் பணிப்பாளராக தனுஷ்க ராமநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக என்.முத்தெட்டுவேகமவும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் எஸ்.பண்டாரவும் அஷோஷியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டெட்டின் செயற்பாட்டுப் பணிப்பாளராக எஸ்.வகாராச்சும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை மண்ணுக்கு சதி நடந்து விட்டது!அமைச்சுப் பதவியில் புறக்கணிக்கப்பட்ட மாமனிதா் அஷ்ரஃபின் தாயகம் !!

Image
எம்.இம்ராஸ்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ராஜாங்க அமைச்சும் இன்னுமொரு பிரதியமைச்சும் வழங்கப்பட்டுள்ளன. எனது இந்த வியூகம் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. என்றாலும் ஒரு விடயம் பிழைத்து விட்டதுதான். நாடாளுமன்ற உறுப்பினர்களான தௌபீக், ஹரீஸ் ஆகியோருக்கே இவை கிடைக்குமென நான் நினைத்தேன். ஆனால் ஹஸன் அலிக்கு ராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தௌபீக், ஹரீஸ் ஆகியோரையே ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக நியமிப்பதற்கு கடைசி வரை தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சிலர் காரியத்தில் அப்பர்களாகச் செயற்பட்டதால் ஹரிஸின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ஹரீஸுக்கு பதவி வழங்குவதன் மூலம் தனது எதிர்கால அரசியல் இருப்பில் ஏற்படக் கூடிய தளர்வு நிலைமைகளை கருத்தில் கொண்டே ஒரு குட்டித் தலைமை காய் நகர்த்தியுள்ளது. கல்முனையிலிருந்து அவசரமாக கொழும்பு வந்து இந்த விடயத்தில் தனது காரியத்தைச் சாதித்து விட்டது. இவ்வாறு மூத்த ஊடகவியலாளர் சித்திக் காரியப்பர் பதிவிட்டுள்ளார். ஊடகவியலாளர் சித்திக் காரியப்பர் செய்திகளை வெளியிடுவதில் நடுநிலைத்தன்மையை பேணுகின்ற ஒருவர். அந்த வகையில் கல்முனை நக

வறிய பிள்ளைகளும் கல்வி பெற உதவும் பெருந்தகை -பரகத்

Image
2015ம் ஆண்டு முதலாம் தரத்தில் சேர்ந்த மாணவர்களுக்கும்,  வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) கல்முனை அஸ்-சுஹறா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அஸ்-சுஹறா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். அப்துல் கமால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கடந்த காலங்களில் பெற்றோரை இழந்த, வருமானம் குறைந்த கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பாடசாலை கற்றல் உபகரணங்களும், அப்பியாசப் கொப்பிகளும் வழங்கிவருகின்றமைக்காகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கல்லூரியின் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து சிறப்பித்தார்கள்.

"சதீஸ்" சமாதான நீதவானாக நியமனம்

Image
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் ) தம்பிலுவில் 02ம் பிரிவைச் சேர்ந்த சண்முகம்பிள்ளை சதீஸ் என்பவர் தீவூ முழுவதற்கமான ஒரு சமாதான நீதவானாக நியமனம் பெற்றுள்ளார்.  சின்னத்தம்பி சண்முகம்பிள்ளை, குஞ்சித்தம்பி நல்லரெத்தினம் ஆகியோரின் புதல்வராகிய இவர் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் திவிநெகும முகாமையாளராக கடமையாற்றி வருகிறார். வியாபார நிருவாக முகாமைத்துவப் பட்டத்தினை யாழ் பல்கலைக்கழத்தில் பூ ர்த்தி செய்த இவர் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயங்களின் பழைய மாணவனுமாவர்.

காலி துறைமுகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கப்பல் சட்ட ரீதியானதே என பாதுகாப்புச் செயலாளர் யூ.டி.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

Image
காலி முறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் பெருந்தொகையான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன.  சட்ட விரோதமான முறையில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்ட ரீதியானது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக்கணக்கான தோட்டாக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். காலி துறைமுகத்திலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில்  இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது. சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளுக்காக இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.  இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பற்றிய விபரங்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்ட விரோதமான முறையில் நங்கூரமிடப்பட்டிருக்க

எரி பொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப் பட்டுள்ளது

Image
இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.  அதன்படி பெற்றோல் 92 ஒக்டென் லீட்டர் 117 ரூபாவாகவும் 95 ஒக்டென் 128 ரூபாவாகவும் டீசல் 95 ரூாவாகவும் சுப்பர் டீசல் 110 ரூபாவாகவும் மண்ணெண்னை 65 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.   இன்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 அமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

Image
ஜனாதிபதியின் முன்னிலையில் இன்று இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். மொஹமட் ஹலீம் மொஹமட் ஹாசிம் முஸ்லிம் மதவிவகார மற்றும் அஞ்சல்துறை அமைச்சரவை அமைச்சராகவும் சுகாதார ராஜாங்க அமைச்சராக ஹசன் அலியும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதனை தவிர ரஞ்சன் ராமநாயக்க சமூக சேவைகள் பிரதியமைச்சராகவும் வசந்த அலுவிஹார மகாவலி அபிவிருத்தி பிரதியமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். வீடமைப்புத்துறை மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சராக அமீர் அலியும் உள்ளக போக்குவரத்த்துறை அமைச்சராக மொஹமட் சரீப் தௌபீக்கும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரே ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.  இந்த சந்திப்பையடுத்து  ராஜாங்க அமைச்சு ஒன்றும் ,பிரதி அமைச்சு  ஒன்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது . இதில் சுகாதார ராஜாங்க அமைச்சராக ஹசனலியும் , போக்குவரத்து பிரதி அமைச்சராக தௌபீக்கும் நியமனம் செய்யப் படவுள்ளதாக கூறப் படுகின்றது. இதே வேளை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீரலிக்கு  வீடமைப்பு மற்றும் சமுர்தி   பிரதி அமைச்சர் பதவி வழங்கப் படவுள்ளதாக அறிய முடிகின்றது .

கல்முனை றோயல் வித்தியாலத்தின் பாடசாலை மட்ட தேசிய மீலாத் விழா!

Image
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக பாடசாலை மட்டத்தில் தேசிய ரீதியில் மீலாத் நபி விழா இன்று (20) கல்முனை றோயல் வித்தியாலத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்விற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். கல்முனை றோயல் வித்தியாலத்தில் 2015ம் ஆண்டு தரம் ஒன்றில் காலடி வைத்த மாணவர்களுக்கும், தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த ஏனைய தரம் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பிரதம அதிதியாக ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களினால் அப்பியாசக் கொப்பிகள் பரிசளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்விற்கு கல்லூரியில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், உலமாக்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம்

Image
ஸ்டாசொலிடர்டி பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு   மா வட்டத்தில் ஒரு பகுதியான தாழங்குடா முதியோர்  சங்க உரறுப்பினர்களுக்கான நிவாரணம்  வழங்கும்  நிகழ்வு  தாழங்குடா முதியோர்  இல்லத்தில்  நேற்று (2015.01.19) அமைப்பின் தலைவர்  வ.கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன் போது அமைப்பின்  வடக்குகிழக்கு மாகாணத்தின் திட்ட இணைப்பாளர் வே.வாமதேவன், திட்டஆலோசகர்  ஜி.ரஞ்சித்குமார்  மற்றும் நிர்வாக  உத்தியோகத்தர்   ர.பிரவாளினிஉட்பட  முதியோர்  சங்கத்தின் நூற்றுக்கும்  அதிகமானோர்  கலந்துகொண்டதுடன் சுமார்  1350 ரூபா பெறுமதியான உலர்  உணவுப்  பொருட்கள் அடங்கிய  உலருணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.