கல்முனை றோயல் வித்தியாலத்தின் பாடசாலை மட்ட தேசிய மீலாத் விழா!
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக பாடசாலை மட்டத்தில் தேசிய ரீதியில் மீலாத் நபி விழா இன்று (20) கல்முனை றோயல் வித்தியாலத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கல்முனை றோயல் வித்தியாலத்தில் 2015ம் ஆண்டு தரம் ஒன்றில் காலடி வைத்த மாணவர்களுக்கும், தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த ஏனைய தரம் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பிரதம அதிதியாகஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களினால் அப்பியாசக் கொப்பிகள் பரிசளிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்விற்கு கல்லூரியில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், உலமாக்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தார்கள்.
Comments
Post a Comment