நற்பிட்டிமுனை தாஹிர் ஜெஸான் !! கல்முனையில் முதல் பெண் இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.
அல்-கரீம் பவுண்டேஸன் “சாதனை மங்கை “ பட்டம் வழங்கி கெளரவிப்பு நற்பிட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த தாஹிர் ஜெஸான் 2017 இல் நடை பெற்ற இலங்கை நிருவாக சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவாகி அகில இலங்கை ரீதியில் 55வது இடத்தைப் பெற்று நிருவாக சேவை அதிகாரியானார். இவர் நாளை 2019-03-05ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை அரச நிருவாக நிறுவனத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவருக்கான நியமனத்தைப் பெற்று ஒரு வருட பயிற்சிக்குச் செல்லவுள்ளார். 1990.01.26ஆம் திகதி நற்பிட்டிமுனை கிராமத்தில் பிறந்த இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார். இலங்கை மொறட்டுவை பல்கலைக்கழத்தில் வணிகத்துறை பீடத்தில் கற்று பட்டணமும் நாடும் பல்வகைத் திட்டமிடல் பட்டதாரியாகி நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றினார் அதன் பின்னர் அப் பதவியை விட்டு விலகி 2017ஆம் ஆண்டு முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தைப் பெற்று கல்முனை பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியா...