சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் ஊடகத்துறைக்கு ஆற்றிவரும் சேவைக்கு கிழக்கு மாகாண வித்தகர் விருது


மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் ஊடத்துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவருக்கு வித்தகர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள்  நிகழ்வு கடந்த 2018-10-27ஆம் திகதி மாலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது இதன் போதே இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி வளர்மதி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இவருக்குப் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் கூத்து, கலை இலக்கியம், ஆக்கஇலக்கியம், நாடகம்,பல்துறை, இசைத்துறை, கிராமியக்கலை, சிற்பம், கிராமியப்பாடல், அயூர்வேதம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 13 பேருக்கு இந்த வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது