Posts

Showing posts from October, 2014

கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்ட மக்களின் அவலநிலை கண்டு கவலையடைகின்றேன். - ஹரீஸ் எம்.பி அனுதாபம்

Image
பதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மன்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு 'நாம் இலங்கையர்கள்' என்று இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் உதவுமாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மன்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மன்சரிவானது எமது நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்குப் பின்னரான இரண்டாவது பேரழிவாகும். இதில் ஒரு கிராமமே அழிவுற்றுள்ளதுடன் பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனையிட்டு அம்மக்களை என்னி நான் கவலையடைகின்றேன். இம்மண்சரிவில் உயிர்களை இழந்து தவிர்க்கும் குடும்பங்களுக்கும், தாய், தகப்பனை இழந்து தவிர்க்கும் சிறார்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனாதிபதி குச்சவெளி அந்நூரியா கனிஷ்ட்ட பாடசாலை மாணவர்களையும் சந்தித்து உரையாடினார்

Image
திருமலை ரபாய் டீன் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குச்சவெளி பிரதேச செயலகத்தை திறந்து வைப்பதற்காக 29ம் திகதி வருகை தந்திருந்தார்.இதன்போது குச்சவெளி அந்நூரியா கனிஷ்ட்ட பாடசாலை மாணவர்களையும் சந்தித்து உரையாடினார். மாணவர்கள் தங்கள் பாடசாலையின் பல்வேறு வளப்பற்றாக்குறைகளை சுட்டிக்காட்டி ஜனாதிபதியின் கரத்தில் மகஜரென்றையும் கையளித்தனர் இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப படத்தில் காணலாம்.அருகில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம.ஐ.மன்சூர் அருகில் நிற்கிறார்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நிதி கையளிக்கும் நிகழ்வு

Image
 வறுமை ஒழிப்பு வாரத்தை  முன்னிட்டு  கிழக்கு மாகாண  சபை  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  அம்பாறை மாவட்ட உறுப்பினர் பேராசிரியர்  எம்.ராஜேஸ்வரனின்  நிதி  ஒதுக்கீட்டில்  சுய தொழில்  முயற்சியாளர்களுக்கான  நிதி கையளிக்கும் நிகழ்வு இன்று  உறுப்பினரின் மணல்சேனை அலுவலகத்தில் இடம் பெற்றது . மாகாண  சபை  உறுப்பினரின் செயலாளர் வீ.அழகு ரத்தினம் தலைமையில் இடம் பெற்ற  வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண  சபை மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எஸ்.நடராஜா  கலந்து கொண்டார் . நிகழ்வில்  நற்பிட்டிமுனை அம்பலத்தடி  ஆலய   நிருவாக பரிபாலகர் கனகரட்னம் ,ஓய்வு பெற்ற விவசாயப் போதனாசிரியர் எஸ்.சுப்பிரமணியம்  ஆகியோரும் மற்றும்  கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் . பதுளை மாவட்டத்தில் மண் சரிவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப் பட்டதுடன் அவர்களுக்கான  உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அங்கு தெரிவித்தார் . அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்  அரசின் செல்லப் பிள்ளையாக இருக்கின்ற வர்கள்  எம்மால் செய்யப் படுகின்ற

பெண்களுக்கான மார்பகப் புற்று நோய் தொடர்பான விழிப்புணரவூட்டல் கருத்தரங்கு

Image
(சுரேஸ் )   அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மார்பகப் புற்று நோய் பற்றி பெண்களுக்கு தெளிவு படுத்தும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர் குழுவினால் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணா;வூட்டல் கருத்தரங்கு குழுத் தலைவி வி.கவின்யா தலைமையில் வை.எம்.சீ.ஏ பிரதானமண்டபத்தில் இன்று 2014.10.31 நடைபெற்றது. இவ் விழிப்புணா;வூட்டல் கருத்தரங்கின் கிழக்கு பல்கலைக் கழகத்தின் மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர்  கே.அருளாணந்தம்> உதவி விரிவுரையாளா; கே.ஈ. கார்த்தீபன்ஆகியோரின்ன் விரிவுரையின் கீழ்; வாலிபர்  கிருஸ்த சங்கத்தின் பொதுச் செயலாளர்  டீ.டீ.டேவீட் மற்றும் அமைப்பின் அனைத்து உத்தியோகத்தா;களும் கலந்து கொண்டு பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பாக பல விடயங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டமைகுறிப்பிடத்தக்கது.

சர்வதேசஅனர்த்த குறைப்புதினத்தை முன்னிட்டு மட்டு மாவட்டத்தில் அனர்த்த ஒத்திகை நிகழ்வு

Image
(சுரேஸ்) சர்வதேசஅனர்த்த குறைப்புதினத்தை முன்னிட்டு மட்டு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் அனர்த்த ஒத்திகை நிகழ்வுகளும் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதன் இறுதிநாள் நிகழ்வு ஐரோப்பிய ஆணைக் குழு மற்றும் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் செயற்திட்டத்தை அமுல் படுத்தும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன்  மட்டக்களப்பு வலயக் கல்விஅலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அனர்த்த குறைப்பு தின நிகழ்வு  கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் கலைஅரங்கில் மட்டக்களப்பு பிரதிகல்விப் பணிப்பாளர்  சசிந்திரசிவகுமார்  தலைமையில் வலயக் கல்வி பணியகத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்  ஏ.ஜெகநாதனின் தொகுப்பில் இன்று 31 நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட செயலகத்தின் பிரதமகணக்காளர்  எஸ்.நேசராஜா கௌரவ அதிதிகளாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்  எஸ்.இன்பராஜா சேவ் த சில்ரன் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர்  ஆர் .மரி யாவித்தியா,அக்டர்  நிறுவனத்தின் திட்டஉத்தியோகத்தர்  இ.ஹஜேந்திரன்,கன்டிகப் இன்டர் நெசனல் அமைப்பின் திட்டமுகாமையாளர்  ஆர்

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மிளிரும் அட்டைவெளியீட்டு நிகழ்வும் சர்வதேச சிறுமியர் தினமும்

Image
(சுரேஸ்) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சிறுவர்  அபிவிருத்தி குழு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வாலிபர் கிருஸ்தவ  சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தசிறுவர்  பாதுகாப்பு தொடர்பான மிளிரும் அட்டை வெளியிட்டு நிகழ்வும்  சர்வதேச சிறுமியர்  தினசிறப்புநிகழ்வும் நாவற்குடா அருட்பணி சிறுமியர்  இல்லத்தில் மாவட்டஉதவிஅரசாங்கஅதிபர்  எஸ்.ரங்கநாதன் தலைமையில்  நேற்று  2014.10.30 நடைபெற்றது. இந்நிகழ்வின் அதிதிகளாக வை.எம்.சீ.ஏநிறுவனத்தின் பொதுச் செயலாளர்  கலாநிதி டீ.டீ.டேவிட் இந் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர்  எஸ்.பற்றிக் சிறுவர்களுக்கான உரிமைகளை பாதுகாத்தல் செயற்திட்டத்தின் பயிற்சி இணைப்பாளர்  ஐஸ்வர்யா தேவி குகதாசன் சிறுவர்  பாதுகாப்பு உத்தியோகத்தர்  எம். அன்பழகன் மற்றும் மாவட்டசிறுவர் அபிவிருத்திஉத்தியோகத்தர்  வீ.குகதாசன் அத்துடன் இல்லத்தின் சிறுமியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்  அந்த வகையில் வை.எம்.சீ.ஏநிறுவனத்தின் அமுலாக்கத்தில் கலாநிதி.ஓகே.குணநாதனின் கதைவடிவமைப்பில் பதிப்பிக்கப்பட்டசிறுவர்  பாதுகாப்பு மற்றும் உரிமைகள் சம்மந்தமானவிழிப்புணர்வூட்டல் மிளிரும் அட்டை உத்தி

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் சுய தொழிலுக்கான தையல் இயந்திரங்களும் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன

Image
பி. முஹாஜிரீன் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு  செலவுத் திட்ட நிதியிலிருந்து ரூபா 30 இலட்சம் நிதியொதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்தில் சுயதொழில் உபகரணங்களும் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம் வழங்கும் வைபவமும் புதன்கிழமை நடைபெற்றது. பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஸித் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தெரிவு  செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார். இதில் சுமார் 20 பயனாளிகளுக்கு சுய தொழிலுக்கான தையல் இயந்திரங்களும் 13 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எல். தாஜூதீன், பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.எம். முஸர்ரப் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரப்போகின்றஜனாதிபதித் தேர்தலில் எடுக்கப்போகின்ற முடிவுதேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது.

Image
பாராளுமன்ற   உறுப்பினர் எச் . எம் . எம் . ஹரீஸ்   ( ஹாசிப்யாஸீன் ) தென்பகுதியின்   அபிவிருத்திக்கு   ஒதுக்கப்படும்   நிதியும் , அம்பாரை   மாவட்ட   அபிவிருத்திக்கு   ஒதுக்கப்படும் நிதியும்   மலைக்கும்   மடுவுக்கும்   ஒப்பானது .  இன்று   கட்சி நினைத்தால்   பாரிய   அபிவிருத்திகள்   பற்றிப்   பேசலாம் . ஆனால்   சமூக   விடயத்தை   புறந்தள்ளிவிட்டு எதைப்பற்றியும்   சிந்திக்கமுடியாது   என   திகாமடுல்ல மாவட்ட   பாராளுமன்ற   உறுப்பினரும் ,  கல்முனைத் தொகுதி   அபிவிருத்திக் குழுத் தலைவருமான   சிரே ஷ்ட   சட்டத்தரணி   எச் . எம் . எம் . ஹரீஸ்   தெரிவித்தார் . பாராளுமன்ற   உறுப்பினர்   எச் . எம் . எம் . ஹரிஸீன்   பல இலட்சம்   ரூபா   நிதி   ஒதுக்கீட்டில்   பொத்துவில்   பிரதேச மக்களுக்கும் ,  விளையாட்டு   வீரர்களுக்கும் உதவியளிக்கும்   சுயதொழில்   மற்றும்   விளையாட்டு உபகரணங்கள்   வழங்கும்   நிகழ்வு   இன்று   மாலை பொத்துவில்   பிரதேச   செயலக   கேட்போர்   கூடத்தில் நடைபெற்றபோது   அதில்   பிரதம   அதிதியாகக்   கலந்து கொண்டு   உரையாற்றுகையில்    ஹரீஸ்   எம் . பி மேற்கண்டவாறு   தெரிவித்தார் . பிரதே

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதியொதுக்கீட்டின் மூலம் பொத்துவில் அல்-கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தின் நுழைவாயில் கோபுர நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Image
( ஹாசீப் யாஸீன்) திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற   உறுப்பினர் சட்டத்தரணி   எச் . எம் . எம் . ஹரீஸின்   நிதியொதுக்கீட்டின் மூலம் பொத்துவில் அல்-கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தின் நுழைவாயில்   கோபுர நிர்மாணத்திற்கு   அடிக்கல்   நாட்டும்   நிகழ்வு   நேற்று   பு  (30) இடம்பெற்றது .                            கல்லூரியின்   முதல்வர்   எம்.ஐ.எம்.சமீம்   தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற   உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி   எச் . எம் . எம் . ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர் ஏ . எல் . எம் . நஸீர் ,  பொத்துவில் பிரதேச   சபையின் தவிசாளா் எம்.எஸ்.எம்.வாசித், பிரதித் தவிசாளா் எம்.தாஜூதீன் மற்றும்   பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதி   அதிபர்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோர்கள்    உட்பட   பலரும்   கலந்து   கொண்டனர் . இந்நிகழ்வின் போது இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இப்பாடசாலையிலிருந்து 22 மாணவா்கள் தெரிவானதை

மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவiராக அமீன் நியமனம்

Image
( A.H.M.Boomudeen ) மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின்( தேசிய உப்புக் கூட்டுத்தாபனம்) புதிய தலைவராக எம்.எம்.அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் இந் நியமனம் இன்று 30ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது. அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர்  மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக பொறுப்பேற்கும் அமீன் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவரும் ஒருவராகும். அவருக்கு இன்று கிடைத்துள்ள இந்தப் பதவியை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். லாபத்தில் இயங்கி வரும் இக்கூட்டுத்தாபனத்தை மேலும் இலாபம் ஈட்டக் கூடிய நிறுவனமாக உயர்த்த வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் அவரை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். கூட்டுத்தாபனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அமீன் விடத்தல் தீவு – பெரியமடுவை பிறப்பிடமாகக் கொண்டவர். இந்த பிரதேச மக்களினதும் முழு வடபுல முஸ்லிம்களினதும் தியாகமும் உதவியுமே என்னை இன்று அமைச்சராக உருவாக்கியுள்ளது.  அமைச்சராக இரு

நற்பிட்டிமுனை முருகன் ஆலயம் முப்பாக நடை பெற்றவரலாறு சொல்லும் சூரன் போர்

Image
கந்த சஷ்டி இறுதி நாளான புதன் கிழமை   முருகன் ஆலயங்களில் சூர சம்கார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நற்பிட்டிமுனை முருகன் ஆலயம்  முப்பாக நடை பெற்ற  சூரசம்ஹாரத்தையும் பார்வையிடும் மக்களையும் காணலாம்