சர்வதேசஅனர்த்த குறைப்புதினத்தை முன்னிட்டு மட்டு மாவட்டத்தில் அனர்த்த ஒத்திகை நிகழ்வு


(சுரேஸ்)
சர்வதேசஅனர்த்த குறைப்புதினத்தை முன்னிட்டு மட்டு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் அனர்த்த ஒத்திகை நிகழ்வுகளும் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதன் இறுதிநாள் நிகழ்வு ஐரோப்பிய ஆணைக் குழு மற்றும் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் செயற்திட்டத்தை அமுல் படுத்தும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன்  மட்டக்களப்பு வலயக் கல்விஅலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அனர்த்த குறைப்பு தின நிகழ்வு  கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் கலைஅரங்கில் மட்டக்களப்பு பிரதிகல்விப் பணிப்பாளர்  சசிந்திரசிவகுமார்  தலைமையில் வலயக் கல்வி பணியகத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்  ஏ.ஜெகநாதனின் தொகுப்பில் இன்று 31 நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட செயலகத்தின் பிரதமகணக்காளர்  எஸ்.நேசராஜா கௌரவ அதிதிகளாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்  எஸ்.இன்பராஜா சேவ் த சில்ரன் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர்  ஆர் .மரி யாவித்தியா,அக்டர்  நிறுவனத்தின் திட்டஉத்தியோகத்தர்  இ.ஹஜேந்திரன்,கன்டிகப் இன்டர் நெசனல் அமைப்பின் திட்டமுகாமையாளர்  ஆர் .ரவிகுமார் சரணியாமற்றும் மாவட்டத்தின் பிரபல  டசாலைகளின் அதிபர்  ஆசிரி யார் களும் மாணவர் களுமாகபலரும் கலந்துகொண்டனர் 
ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவார்களினால் வடிவமைக்கப்பட்டிருந்த அனர்த்த பாதுகாப்பு  பொருட் காட்சி காட்சிப் படுத்தப்பட்டதன் பின் அனர் த்த எச்சரி க்கை,அனார் த்தமுன்னாயத்தம்,அதன் பாதுகாப்பு போன்ற விடயங்கள் சம்மந்தமாக கலை நிகழ்வுகளும் விழிப்புணர் வூட்டல் நாடகங்களும் நடைபெற்றமை விசேட அம்சமாகும். 





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்