Posts

Showing posts from July, 2013

ஜனாதிபதியின் இப்தார் இம்முறை கண்டியில்

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருடந்தோறும் ரமழான் மாதத்தில் நடத்தும் ‘இப்தார்’ வைபவம் இம்முறை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஓகஸ்ட் 03 ஆம், 04 ஆம் திகதிகளில் இரு நாட்களுக்கும் நடைபெறும். இவ்வளவு காலமும் ஜனாதிபதி ‘இப்தார்’ வைபவத்தை கொழும்பில் அலரி மாளிகையிலேயே நடத்தி வந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇன்று வேட்பு மனுதாக்கல்

Image
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய வேட்பு மனுக்களைஇன்று  திங்கட்கிழமை (யூலை 29) தாக்கல் செய்யவுள்ளதாக உட்கட்சி தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.  கிளிநொச்சி மாவட்டத்துக்கான வேட்பு மனுவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், கிளிநொச்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுபவருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் தாக்கல் செய்யவுள்ளனர்.  அதுபோல மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்

Image
இவ்வருடம்  நடை பெற்ற  அகில இலங்கை  தமிழ் தினப் போட்டியில்  பாவோதல் முதலாம் பிரிவில்  கல்முனை கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலை  மாணவி  செல்வி சுஷ்மிக்கா  முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் . இவர்  பாண்டிருப்பு சண்முகம் சரவண முத்து ,திருமதி காஞ்சனா சரவண முத்து ஆகியோரின் செல்வப் புதல்வியாவார் 

மாற்று மதங்களுடன் AGASS இப்தார் நிகழ்வு

Image
 சமயங்கள் ஊடாக ஒற்றுமையும் சமாதானமும் எனும் தலைப்பில் கடந்த  2013.07.21ம் திகதி மாலை மருதமுனை மக்கள் மண்டபத்தில் ஒன்று கூடல் நடை பெற்றது .   AGASS   அமைப்பின் தலைவர் Dr.S.S.ஜெமீல்  தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வின் போது  அயல் கிராம மாற்று மத சகோதரர்கள்,மும்மத தலைவர்கள் , ஊர் பிரமுகர்கள்   மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் என்போர் பங்குபற்றினர். இதன் போது மாற்று மத தலைவர்கள் சமயங்களின் ஊடாக  இனங்களிடையே  ஒற்றுமை ஏற்படுத்துவது தொடர்பான   கருத்துக்கள் அங்கு  பேசப்பட்டது  

பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ்

Image
தென்கிழக்கு பல்கலை கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆளுகை காலத்தில் கலாநிதி சபீனா இம்தியாஸ் பீடாதிபதியாக கடமையாற்றி இருந்தார். பின்னர் அவரது ஆளுகை காலம் முடிவடைந்ததும் தற்காலிக பீடாதிபதியாக நசீர் அஹ்மட் உபவேந்தரால் நியமிக்கப்பட்டார். இன்று 24-07-2013 இடம்பெற்ற உபவேந்தர் தலைமையிலான பீடாதிபதி தெரிவின் போது கலாநிதி சபீனா இம்தியாஸ் மற்றும் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் ஆகியோர் போட்டியிட்டனர் இதன்போது இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் கலாநிதி சபீனா இம்தியாஸ் 12 வாக்குகளையும் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் 09 வாக்குகளையும் பெற்றனர். 03 மேலதிக வாக்குகளை பெற்ற கலாநிதி சபீனா இம்தியாஸ் நடப்பு ஆளுகை காலத்துக்கான பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்கு பல்கலை கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான முதல் இரண்டு ஆளுகை காலதத்திலும் செல்வி வினோதினி சந்தானமும் மூன்றாவது ஆளுகை காலதத்தில் நசீர் அஹ்மட் அவர்களும் அடுத்த நான்காவது ஆளுகை காலதத்தில் எ.எம்.றஸ்மியும் ஐந்தாவது ஆளுகை காலதத்திலும் நடப்பு ஆளுகை காலத்துக்கும் காலதத்த

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன இப்தார் வைபவம்!

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  வருடாந்த இப்தார் வைபவம் சனிக்கிழமை நிந்தவூர்  மாவட்ட தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் அல்-ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மௌலவி அல்ஹாபிழ் எம்.றிபாய் மார்க்க சொற்பொழிவாற்றினார்.

03ஏ சித்தி பெற்ற 25 தமிழ் ,முஸ்லிம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Image
பல்கலை கழகங்களில் சரிவர  சட்டங்கள் நிறை வேற்றப் படுமானால் சில வேளைகளில் மாணவர்கள்  உரிமையை கூட இழக்க நேரிடும். அல்லது  பல்கலை கழகத்தில்  படிக்க  முடியாத நிலை ஏற்படும்  என தென் கிழக்கு பல்கலை கழக  உப வேந்தர்  கலாநிதி  எஸ்.எம்.எம்.இஸ்மாயில்  தெரிவித்தார்  கல்முனை தமிழ் சங்கமும்  மாணவர் மீட்பு பேரவையும்  இணைந்து கல்முனை கல்வி வலயத்தில்  2012ஆம்  ஆண்டு கல்வி பொது தராதர பரீட்ச்சையில்  03ஏ   சித்தி பெற்ற  25 தமிழ் ,முஸ்லிம் மாணவர்களை  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  சனிக்கிழமை (20) கல்முனை நால்வர்  கோட்டம் தாமரை மண்டபத்தில்  தமிழ் சங்க தலைவர்  கலாநிதி பரதன் கந்தசாமி  தலைமையில் நடை பெற்றது. கிழக்கு பல்கலை கழக உப வேந்தர் கலாநிதி  கிட்ணன் கொபிந்தராஜா ,தென்கிழக்கு பல்கலை கழக  உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்  ஆகியோர்  பிரதம அதிதிகளாகவும் ,கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலாளர்  கே.லவநாதன், கண்ணகி இலக்கிய கூடல் தலைவர் த.கோபால கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்  கலந்து கொண்டனர்  கல்முனை தமிழ் சங்கத்தின்  ஆலோசகர் அருட் சகோதரர்  எஸ்.ஏ.ஐ.மத்தியு அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்

முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி சம்பளம்

Image
நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டுமென திறைசேரி சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது. நோன்புப் பெருநாள் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி கொண்டாடப்படவுள்ளதால் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாகவும் இதற்கமைய தேவையான நிதி ஒதுக்கீடு சகல அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். தற்போது சகல அரசாங்க நிறுவனங்க ளிலும் சகல முஸ்லிம் உத்தியோகத்தர்க ளுக்கும் பெருநாள் முற்பணம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாஸாவை உரிமை கோருங்கள்

Image
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் கிண்ணியா பிரதேசவாசி ஒருவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. கிண்ணியா மான்சோலையை  சேர்ந்த 68 வயதையுடைய அப்துல் காதர் என்பவர் கடந்த புதன்கிழமை இரவு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகயீனம் முற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் நேற்று மாலை 5 மணியளவில் மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. மேலும் இந்த சடலம் யாரும் உரிமை கோரப்படாத நிலையில் தற்போது கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

சிசுவை வயலில் வீசிய பெண் தடுப்புக் காவலில்..!!

Image
அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவில் சிசுவொன்றை வயலில் வீசிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் 11ஆம் இலக்க குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண், கடந்த 13ஆம் திகதி இரவு சிசுவைப் பிரசவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார், உயிரிழந்த நிலையில் வயலில் இருந்து சிசுவின் உடலை நேற்று கண்டெடுத்ததுடன் அதன் தாயாரையும் கைது செய்துள்ளனர். திருமணமாகாத 30 வயதான பெண் ஒருவரே இரகசியமாக குழந்தையைப் பிரசவித்த பின்னர் வயலில் வீசியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் பெண் பொலிஸ் பாதுகாப்புடன் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த சிசுவின் சடலமும் அதே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியா – அம்மிவைத்தான் பகுதியில் பிறந்து ஒரு நாள் நிரம்பிய சிசுவொன்றை நிலத்தில் புதைத்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தா

திருமணப் பந்தத்தில் இணைந்தார் மெத்தியூஸ்

Image
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் இன்று திருமணப் பந்தத்தில் இணைந்தார். மெத்தியூஸ் மற்றும் ஹேசானி சில்வா ஆகிய இருவருக்கும் கொள்ளுபிட்டி சென்.மேரிஸ் தேவாலயத்தில் வெகு சிறப்பாக திருமணம் இடம்பெற்றது. இவர்களது திருமணத்தின் சாட்சியாளர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

பாடசாலைச் சிறார்களுக்கு இலவசமாக விட்டமின் வில்லைகள்!

Image
பாடசாலைச் சிறார்களின் அறிவு விருத்திக்காக சத்துள்ள விட்டமின் வில்லைகளை இலவசமாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இரும்புச் சத்துள்ள வில்லைகள், விட்டமின் சீ போன்ற வில்லைகளே இவ்வாறு  பாடசாலை சிறார்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வில்லைகளை மாணவர்கள் தொடர்ச்சியாக 6மாத காலத்துக்கு  உட்கொண்டால் குறித்த மாணவர்களின் ஞாபகச்சக்தி, பாடங்களில் கரிசனை மற்றும் சுறுசுறுப்பு என்பன அதிகரிக்கும் என அமைச்சு நம்பிக்கை தெரிவிக்கிறது. பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகத்தினூடாக பிரதேச வைத்திய பரிசோதகர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவிக்றது.

பயணிகள் பஸ்ஸில்சட்ட விரோத சிகரட் பயணிகள் தெருவோரத்தில்

Image
கொழும்பில் இருந்து  பயணிகள் பஸ்ஸில் கல்முனைக்கு எடுத்து வரப்பட்ட ஒரு தொகை சட்ட விரோத  சிகரட்டுகள் கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளது. இன்று(17) அதிகாலை 5.00 மணிக்கு  கல்முனையில்  தேநீர்  கடை ஒன்றின் அருகே  பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட  பொதிகளை இறக்குகின்ற போதே  பொலிசாரினால் சுற்றி வளைக்கப் பட்டு  இந்த சட்ட விரோத சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து  சம்மாந்துறைக்கு பயணிகளை ஏற்றி செல்லும் போதே  இந்த சம்பவம் கல்முனையில் இடம் பெற்றுள்ளது . சம்மாந்துறைக்கு செல்ல வேண்டிய பயணிகளை  கல்முனையில் இறக்கி விட்டு பொலிசார் பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸை எடுத்து சென்று விட்டனர். இதனால் கொழும்பில் இருந்து வந்த பயணிகள் செய் வதறியாது  தெருவோரத்தில் நின்றிருந்தனர். பஸ்சுடன் கைப்பற்றப்பட்ட  சட்ட விரோத சிகரட்டும் ,சாரதியும்  கல்முனை போலீசில் தடுத்து வைக்கப்பட்டு  விசாரிக்கப் படுகின்றனர்.

வருடாந்த இப்தார் வைபவம்

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்  வருடாந்த இப்தார் வைபவம்  எதிர் வரும் 20ஆந்  திகதி சனிக்கிழமை   நிந்தவூர்  மாவட்ட தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூட மண்டபத்தில்  சம்மேளனத்தின்  தலைவர்  கலா பூஷணம் அல் -ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன்  தலைமையில்  இடம் பெறவிருப்பதாக  சம்மேளனத்தின் செயலாளர்  ஐ.எல்.எம்.றிசான்  தெரிவித்துள்ளார் 

மார்பை கடித்ததற்காக குழந்தையை கத்தியால் குத்திய தாய்!

Image
பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக்  கடித்தமைக்காக  தாயொருவர் அவரது  குழந்தையை  90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் வயது 8 மாதங்கள் எனவும் தெய்வாதீனமாக அக்குழந்தை உயிர்பிழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை- அதன் தாய் மற்றும் அவரது உறவுக்காரர்கள் இரண்டு பேர் என 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் முற்றத்தில் குழந்தை இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட அதன் மாமா ஒருவர் அதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

திட்டமிடல் உத்தியோகத்தர்கள் 118 பேர் நேற்று கடமையேற்பு!

Image
இலங்கைத் திட்டமிடல் சேவையின் மூன்றாம் வகுப்பிற்கு திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 118 உத்தியோகத்தர்கள் நேற்று முதல் தமது கடமைகளை நிதி, திட்டமிடல் அமைச்சில் ஏற்றுக் கொண்டனர். இவர்களுள் 114 பேர் சிங்கள மொழி மூலமும், 04 பேர் தமிழ் மொழி மூலமும் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் கொழும்பு, டைம்ஸ் கட்டடத்தில் அமைந்துள்ள “மீலோதா” பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ் மொழி மூலம் கிழக்கு மாகாணத்தில் ரி.கே. றிஹான், எம்.எம். எம். சப்ரி ஆகியோர் கல்முனையிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்து எம். வினோத்ராஜ் என்பவரும், அநுராதபுரத்திலிருந்து எம். சஜீராவும் தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்றுள்ளனர் .

ரமழான் வசந்தம் வெற்றியாளர்கள் 2011

Image
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன  முஸ்லிம் சேவை புனிதம் மிகு ரமழான் காலங்களில்  முஸ்லிம் சேவையின் பிரதான ஆலோசகரும்  உயர் நீதி மன்ற நீதி பதியுமான  எம்.எம்.ஏ.கபூர் அவர்களின் ஆலோசனைக்கிணங்க  கடந்த 2011 ஆம்  ஆண்டு நடாத்திய  "ரமழான் வசந்தம்"  நிகழ்ச்சியில்  பங்கு பற்றிய ஆயிர கணக்கான  நேயர்களுள்  அதிஸ்ட சாலியாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  இன்று( 2013.07.10 ) புத்தக பரிசு ஒன்றும்   சான்றிதழும் தபாலில் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது . இப்பரிசு  கல்முனை பிர  தேசத்தில் நீண்ட காலமாக பத்திரிகை விநியோகஸ்தராக சேவை செய்யும்  எம்.எச்.நவ்பீர்  என்பவருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது . பொறுப்பு வாய்ந்த ஒருவரின் ஆலோசனயின் பிரகாரம் நடத்தப்பட்ட இப்போட்டிக்கு பரிசு வழங்க இவ்வளவு காலம்  தேவைப் பட்டதன்  காரணம்தான் என்ன :?

உயர்தர வகுப்பிற்கான தொழில்நுட்ப பாடநெறி

Image
கல்வியமைச்சு நாடு தளுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் உயர்தர வகுப்பிற்கான தொழில்நுட்ப பாடநெறியினை இன்று  உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைத்ததது. அதனடிப்படையில் கல்முனைத் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு பாடநெறியினை ஆரம்பித்து வைப்பதற்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் கல்லூரியின்   தொழில்நுட்ப பாட வகுப்பறை திறந்து வைக்கப்படுவதனையும் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் உரையாற்றுவதனையும் கலந்து கொண்டோரின் ஒரு தொகுதியினரையும் காணலாம்.

பாட சாலையில் வரவு குறைந்த மாணவர்களின் தகவல் பதிவு

Image
கல்முனை கல்வி வலயம் 63 தமிழ் முஸ்லிம் பாடசாலைகளை கொண்டதொரு கல்விவலயமாகும் .இவ்வாலயத்தில்  உள்ள பாட சாலைகளில்  பல காரணங்களின் நிமிர்த்தம் காலப் போக்கில் மாணவர்களின் வருகை குறைவடைந்து வருவது அவதானிக்கப் பட்டு  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரினால்  இதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றது . கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசீமின்  கட்டளைக்கு அமைய கல்வி அபிவிருத்திக்கான  பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்  பாடசாலைகளில் வரவு குறைந்த மாணவர்களின் விபரங்களை திரட்டி வருகின்றார். இதன் முதற் கட்டமாக  பாட சாலையில் வரவு குறைந்த மாணவர்களின்  தகவல் பதிவு தொடர்பான  செயலமர்வு  இன்று 2013.07.12 கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் நடை பெற்றது. வலயக்கல்வி அலுவலக நிகழ்ச்சி திட்ட உதவியாளர்கள் ,முகாமைத்துவ உதவியாளர்கள்  பங்கு பற்றிய இச்செயலமர்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசீமின்  கட்டளைக்கு அமைய கல்வி அபிவிருத்திக்கான  பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்   தலைமையில் இந்த பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது. 

சிறுபான்மையினருக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் நிகழக்கூடாது!

Image
சிராஸ் மீரா ஸாஹிப் சிறுபான்மை இனத்தவரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் இடம் பெறக்கூடாது என அரசாங்கத்தை கோருகின்ற பிரேரணையொன்று கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் இன்றைய (09) சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டது. ஜேஆர்- ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின் மூலம் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதே 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம் ஆகும். இதில் கைவைப்பது என்பது சிறுபான்மை இன மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும். ஆகவே இந்த 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதில் எடுக்கும் நடவடிக்கையினை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி இந்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இப்பிரேரணை மீதான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தார். ஏனைய மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்து இப்பிரேரணை நிறைவே

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞா பகார்த்த வைத்திய சாலையில் தன்னியக்க ஸ்டெப்ளர் மெசின் சத்திர சிகிச்சை

Image
  கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக சம்மாந்துறை அன்வர்  இஸ்மாயில் ஞா பகார்த்த  வைத்திய சாலையில்  தன்னியக்க  ஸ்டெப்ளர்  மெசின் பயன் படுத்தப்பட்டு  இன்று (09.07.2013 )நோயாளி ஒருவருக்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சை  பூரண  வெற்றியளித்துள்ளதாக  மருதமுனை கிராமத்தை சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்  டாக்டர் ஏ.டபிள் யு .எம்.சமீம்  தெரிவித்தார் . இந்த சத்திர சிகிச்சை சற்று நேரத்துக்கு முன்னர் சம்மாந்துறை அன்வர்  இஸ்மாயில் ஞா பகார்த்த  வைத்திய சாலையில் இடம் பெற்றது.  சத்திர சிகிச்சை நிபுணர்  டாக்டர் ஏ.டபிள் யு .எம்.சமீம் மேலும் தெரிவிக்கையில்  இவ்வாறான சத்திர சிகிச்சை கிழக்கு மாகாணத்தில் நடை பெறுவது இதுவே முதல் தடவையாகும்  மேலத் தேய நாடுகளில் குறிப்பாக  சகல வசதிகளும் கொண்ட வைத்திய சாலைகளே  இவ்வாறான சத்திர  ச்கிச்சைகளை செய்கின்றன . எனினும்  பிரபலமான  எமது நாட்டு வைத்திய சாலைகளில்  தற்போது இவ்வாறான சத்திர  ச்கிச்சைகள்  செய்யப்படுகின்றன . ஆனால்  வளப்பற்றாக்குறை யுடன் சம்மாந்துறை அன்வர்  இஸ்மாயில் ஞா பகார்த்த  வைத்திய சாலையில்  எம்மால் செய்யப்பட்ட   இவ்வாறான சத்திர சிகிச்சை பெரும் பிரயத்த