பாட சாலையில் வரவு குறைந்த மாணவர்களின் தகவல் பதிவு

கல்முனை கல்வி வலயம் 63 தமிழ் முஸ்லிம் பாடசாலைகளை கொண்டதொரு கல்விவலயமாகும் .இவ்வாலயத்தில்  உள்ள பாட சாலைகளில்  பல காரணங்களின் நிமிர்த்தம் காலப் போக்கில் மாணவர்களின் வருகை குறைவடைந்து வருவது அவதானிக்கப் பட்டு  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரினால்  இதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றது .

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசீமின்  கட்டளைக்கு அமைய கல்வி அபிவிருத்திக்கான  பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்  பாடசாலைகளில் வரவு குறைந்த மாணவர்களின் விபரங்களை திரட்டி வருகின்றார்.







இதன் முதற் கட்டமாக  பாட சாலையில் வரவு குறைந்த மாணவர்களின்  தகவல் பதிவு தொடர்பான  செயலமர்வு  இன்று 2013.07.12 கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் நடை பெற்றது.

வலயக்கல்வி அலுவலக நிகழ்ச்சி திட்ட உதவியாளர்கள் ,முகாமைத்துவ உதவியாளர்கள்  பங்கு பற்றிய இச்செயலமர்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசீமின்  கட்டளைக்கு அமைய கல்வி அபிவிருத்திக்கான  பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்   தலைமையில் இந்த பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது. 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்