Posts

Showing posts from December, 2010

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட போட்டிகள் 31 இல்

Image
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் இம் மாவட்டத்திலுள்ள ஏ பிரிவு உதைபந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் மெரிகோல்ட் கிண்ண சுப்பர் லீக் சுற்றுப் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாக வுள்ளதாக அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. எம். இப்ராஹிம் தெரி வித்தார். மெரிகோல்ட் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை முஸ்லிம் விளையாட்டுக் கழகம், மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம், மருதமுனை கோல்மைன்ட் விளையாட்டுக் கழகம், கல்முனை சனிமவுண்ட் விளையாட்டுக் கழகம், கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது பிளைன்ஸ் கோஸ் விளையாட்டுக்கழகம் ஆகிய உதைபந் தாட்டக் கழகங்கள் விளையாடவுள்ளன. மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டுத்திடலில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அரபு கல்லூரி மண்டப திறப்பு விழா

Image

கல்முனை விதாதா வளப் பயிற்சி நிலையத்தில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

Image
கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவுக்கான விதாதா வள மத்திய பயிற்சி நிலையத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த வள நிலையத்தில் இளைஞர்,யுவுதிகளுக்கான கணினிப் பயிற்சி,தையல் பயிற்சி,அலங்கார வேலைகள் என்பன இடம்பெற்று வருகின்றன. அண்மையில் கணினிப் பயிற்சியை முடித்த 40 இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த வள நிலையம் கடந்த வியாழக்கிழமை இரவுவேளை உடைக்கப்பட்டு அங்கிருந்த கணினிகள் மற்றும் கணினிகளுக்கு பயன்படுத்தும் உதிரிப்பாகங்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக வள நிலையத்துக்கு சுமார் நான்கு இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் விகிதாசார முறைப்படிதான் நடைபெறுமாம்

Image
உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட மூலம் ஜனவர் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசாரத் தேர்தல் முறையில்தான் உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டு என்று என்று தெரிய வருகின்றது . ஏற்கனவே பல தடவை பிற்போடப்பட்ட உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய உள்ளுர்ராட்சி தேர்தல் முறைக்கு அமைவாக விகிதாசார மற்றும் வட்டார கலப்பு தேர்தல் நடாத்து வதற்கு அரசு திட்டமிட்டுள்ளபோதும் குறுகிய காலத்துக்குள் வட்டார எல்லைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றி இருப்பதால் விரிவாக பார்க்க மேற்படி சட்ட மூலத்தை ஜனவரியில் பாராளுமன்றத்தில் அரசுடன் இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சட்டமாக்குவதற்கு ஆளும் ஐக்கிய தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளன போதிலும் உடன் நடைமுறை படுத்துவதில் பல சிக்கல்களை எதிர் கொள்வதாக தெரிகின்றது இதனால் உள்ளுர்ராட்சி

தோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸா மீண்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது !!

Image
கடந்த புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்ட அப்துல் மனாப் நிஜாமியாவின் மரணம் தற்கொலை என மட்டக்களப்பு சட்ட வைத்திய நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்ததனை தொடர்ந்து ஜனாஸா மீண்டும் பழைய இடத்தில் அன்றைய தினமே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது இரண்டு மாதங்களுக்கு முன் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது . 21 வயதான திருமணமாகி 14 மாதங்கள் கடந்த நிஜாமியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் கணவரின் தந்தை கல்முனை பொலிஸாருக்கு செய்திருந்த முறைப்பாட்டின் பிரகாரம் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எம்.றிஸ்வியின் உத்தரவின் விரிவாக பார்க்க பேரில் ஜனாஸா பரிசோதனைக்காக கடந்த புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பரிசோதனை செய்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்கள் பெண்ணின் மரணம் தற்கொலையென அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது

சுகி சுகாதார சஞ்சிகையின் வெளியீடு

Image
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முத்திங்கள் வெளியீடான சுகி சஞ்சிகையின் 2 வது இதழ் வெளியீட்டு விழா வைத்திய அத்தியட்சகர் டாக்டர் றகுமான் தலைமையில் வைத்தியசாலையில்    கடந்த செவ்வாயன்று    நடைபெற்றது .   அங்கு   முதற்   பிரதிகளை டாக்டர் றகுமான் கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா டாக்டர் ஜெமீல் ஆகியோர் வழங்கி வைப்பதையும் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர்   பாறுக் அமர்ந்திருப்பதையும் ;  கலந்துகொண்டவர்களையும்     படங்களி ல் காணலாம்

துப்பாக்கி வைதிருந்தவற்குகு ஆயுட்கால சிறைத்தண்டனை

Image
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்ட பட்ட ஒருவருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த வியாழக்கிழமை இந்தத்தீர்ப்பினை வழங்கியுள்ளார் சுலைமான் முகம்மத யூசுப் றியாஸ் என்பவர் மீது அனுமதிப்பத்திரமின்றி 2006.6.24 ஆம் திகதி T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி ஒன்றைத் தன் உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது விரிவாக பார்க்க மேற்படி வழக்கு விசாரணையின் போது கூண்டிலிருந்து அளித்த வாக்கு மூலம் நம்பகத்தன்மையில்லாதது என்று நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார் என்று அறிய முடிகின்றது

65 காதி நீதவான் நீதிமன்றப் பிரிவுகளுக்கும் முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகள்

Image
நாட்டின் சகல காதி நீதவான் நீதிமன்றப் பிரிவுகளுக்கும் தனித்தனியான முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகளை நியமிக்க நீதியமைச்சர் ரவூப் ஹகீம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது தற்போது இலங்கையில் உள்ள 65 காதி நீதிமன்றப் பிரிவுகளுக்கும்  முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரி கள்  நியமிக்கபடவுள்ளனர் என்பதுடன் முஸ்லிம் பெண் சமாதன நீதவான்களை  நியமிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகின்றது விரிவாக பார்க்க முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகள் போதாமையால் ஜனாக் சகளை உரிய நேரத்தில் அடக்கம் செய்வதிலும் அவற்றை வைத்திய சாலைகளில் இருந்து பெற்று கொள்வதிலும் பெரிதும் சிரமங்கள் எதிர்கொள்வதை தவிர்க்கும் முகமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது மேலும் கணவனை இழந்த ‘இத்தா’ இருக்கவேண்டிய மனைவியர் எதிர்கொள்ளும் சிக்கல்களை தவிர்க்கும் முகமாக  முஸ்லிம் பெண் சமாதன நீதவான்களை  நியமிக்கவும் நடவடிக்கைகளை நீதியமைச்சர் ரவூப் ஹகீம் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது

கல்முனையில் ஜனாஸா தோண்டி எடுத்து வைத்திய சோதனைக்கு அனுப்பி வைப்பு

Image
Add caption கடந்த அக்டோபர் மாதம்  03 ஆந் திகதி சாய்ந்தமருது வீட்டு திட்டத்தில்  கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட பெண்ணின் சடலம் கணவன் மற்றும் மாமனாரின் சந்தேகத்தை அடுத்து  கல்முனை நீதிவான் நீதி மன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய   இன்று தோண்டி எடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு வைத்திய பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

Image
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை நேற்று சனிக்கிழமை காலை சந்தித்து பேசியுள்ளது இந்த சந்திப்பு கொழும்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், பஷீர் சேகுதாவூத், ஹரிஸ் மற்றும் அஸ்லம் ஆகியோரும் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்  விரிவாக பார்க்க இந்தச் சந்திப்பு குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்;இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களை ஒதுக்கி விட்டுத்தீர்வொன்று காண முடியாது. அரசுக்கும் தமிழ்த் தரப்புக்குமிடையே பேச்சுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையை சரியான தளத்தில் கொண்டு செல்வதற்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்துக்குமிடையே நேற்று மாலை சந்திப்பொன்று நடைபெற்ற நிலையில் அதற்கு முன்பாக தமிழ்த் தேச

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நடைபெற்ற க.பொ.த.சாதாரணதர மாணவர் தினவிழா

Image
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நடைபெற்ற க.பொ.த.சாதாரணதர மாணவர் தினவிழாவின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பைசல் காசிம் ,கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் மற்றும் சாய்ந்தமருதுகோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்எம்.முபாறக் மௌலவி ஆகியோர் உரையாற்றுவதனையும் அதிதிகள் வரவேற்றுஅழைத்து வரப்படுவதனையும் முதல்நிலை மாணவன் றியாஸத் அலிக்கு பிரதம அதிதி தங்கப்பதக்கம்அணிவிப்பதனையும் கலந்து கொண்ட ஆசிரியர்களையும் மாணவர்களையும் படங்களில் காணலாம்.

கல்முனையில் நிர்மானிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகள் விரைவில் கையளிக்கப்படும்

Image
மசூர்மௌலான   கல்முனை பஸ் நிலையத்தில் USAID நிறுவனத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானா தெரிவித்துள்ளார். சுனாமியால் அழிவடைந்த வர்த்தக கடை தொகுதிகளை புதிதாக நிர்மாணிக்க 2007 ஆண்டு  கல்முனை மாநகர சபையின் முயற்சியாலும்  USAID நிதியுதவியாலும் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 19 கடைத்தொகுதிக்கும் 2008 ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது. இக் கடைகளை மக்களுக்கு வழங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் நிலவியதால் கடைகளை வழங்குவதில் பல தாமதங்கள் ஏற்பட்டன விரிவாக பார்க்க கடைகளின் பெறுமதியை மதிப்பிடுவதற்காக மதிப்பிட்டு திணைக்களத்திற்கு அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளது. மதிப்பீட்டு அறிக்கை கிடைத்ததும் பகிரங்க கேள்விப் பத்திரம் மூலம் இக்கடைத்தொகுதிகள் வழங்கப்படவுள்ளதாக மேயர் மேலும் தெரிவித்தார்

சாய்ந்தமருது பிரதேசதிற்கு நிதியொதுக்கீடு

Image
H.M.M.Harees (MP) திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இவ்வாண்டிற்கான தனது வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகளுக்காக 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

1,42,381 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி; 22 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் அதிவிஷேட சித்திகளைப் (3ஏ) பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வகையில் நாடளாவிய ரீதியில் 4,384 பரீட்சார்த்திகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும் பாடசாலை ரீதியாக 3908 பரீட்சார்த்திகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ள அதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 476 பேர் 3 ஏ பெற்றுள்ளனர்.உயிரியல் விஞ்ஞான பாடத்தில் அகில இலங்கை ரீதியாக 367 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 286 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 81 பேரும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர் விரிவாக பார்க்க கணித பாடத்தில் நாடளாவிய ரீதியில் 404 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் 385 பேர் பாடசாலை மட்டத்திலும் 19 பேர் தனிப்பட்ட ரீதியிலும் 3 ஏ ஐப் பெற்றுள்ளனர். வர்த்தக பாடத்தில் அகில இலங்கை ரீதியாக 1576 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், அவர்களில் 1496 பேர் பாடசாலை ரீதியாகவும் 80பேர் தனிப்பட்ட ரீதியாகவும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். கலைப்பாடத்தில் நாடளாவிய ரீதியில் 2037 பேர் 3 ஏ சித்திகள

கல்முனையில் இருந்து சர்வமத தலைவர்கள் பாத யாத்திரை

Image
கல்முனையில் இருந்து  சர்வமத தலைவர்களின் சமாதான  பாத யாத்திரை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இப்பாத யாத்திரையில் நாட்டின் பல பாகங்களில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட மத தலைவர்கள் இந்த யாத்திரையில்  கலந்து கொண்டனர். கல்முனையில் இருந்து  ஆரம்பிக்கப்பட்ட இப்பாத யாத்திரை மட்டக்களப்பு வரை செல்லும் என கல்முனை சுபத்திரா ராமைய விகாராதிபதி ரண்முத்து கல  சங்கரதின தேரர் கல்முனை இணைய தளத்திற்கு தெரிவித்தார்.

ரிஷான நபீக்கிற்கான தீர்ப்பு இடைநிறுத்தம்

Image
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸான நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க சவுதி அரேபிய மன்னர் தீர்ப்பினை இடைநிறுத்தியுள்ளதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தி கேட்டு  ரிசானாவின் பெற்றோர் சவூதி மன்னருக்கும் ,ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்

பிர்லியன்ட் கழகத்திற்கு கல்முனையில் பாராட்டு

Image
அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய டிவிசன்-2 பிரீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தை பாராட்டி கெளரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்முனை வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றது. கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே. எம். சாபி ஹாதிம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வெற்றிபெற்ற கழகத்திற்கு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட துறை வரலாற்றில் தேசிய மட்டத்தில் ஒரு விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.

மூதூரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிய பதிவுகள்

Image
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிய பதிவுகள் மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3.25மணி வரை இடம்பெற்றுள்ளது இந்த ஆணைக்குழுவின் அமர்வில் 201 பேர் சாட்சியமளித்துள்ளனர். மூதூர் பிரதேசதிலிருந்து முஸ்லிம்கள் 2006 ஆண்டு வெளியேற்றப்பட்டமை குறிபிடத்தக்கது இது தொடர்பான சாட்சியங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது இன்றைய மூதூர் பிரதேச செயலகத்தில் 93 சாட்சியங்கள் காணாமல் போனோர் தொடர்பிலும் 60 சாட்சியங்கள் தடுப்பு காவலில் உள்ளேர் தொடர்பிலும் 19 சாட்சியங்கள் கடத்தி செல்லப்பட்டோர் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 29 சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை முன்னாள் அதிபர் பொன் முருகையாவுக்கு பாராட்டு

Image
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை முன்னாள் அதிபர்  பொன் முருகையாவுக்கு   கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமைல் நேற்று பிரியாவிடை வைபவம் நடாத்தப்பட்டது. இவ்வைபவத்தில் கல்முனை பிரதேச கல்விமான்கள் ,புத்தி ஜீவிகள் , கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்முனை நகரில் இருந்து பேண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்ட  முன்னாள் அதிபர் பாராட்டி  கௌரவிக்கப்பட்டார்.

கல்முனையில் பஸ் அம்பிலன்ஸ் மோதல்

Image
Rfhjhu jpizf;fsj;jpw;Fupa NtDk; ,yq;if Nghf;Ftuj;J rigf;F nrhe;jkhd g];tz;bAk; Nkhjpf;nfhz;l rk;gtnkhd;W ,d;W gp.g.3.30kzpastpy;   mf;fiug;gw;W fy;Kid tPjpapy; ,lk;ngw;wJ. mk;giwapypUe;;J fy;Kidia Nehf;fp gazpj;j g];tz;Ak; fhiujPtpypUe;J fy;Kidia Nehf;fpgazpj;j NtDk; m~;ug; Qhgfhh;j;j itj;jparhiyf;F md;ikapYs;s gpujhd tPjpapy; Nkhjpf;nfhz;ljpy; xUth; rpW fhaj;jpw;Fs;shdJld; g];]{k; NtDk; Nrjkile;Js;sd. rk;gt ,lj;jpw;F tUifje;j fy;Kid nghyp]hh; gazpfis NtWthfdj;jpy; khw;wpaDg;gpaJld; Nghf;Ftuj;ijAk; rPh;nra;jdh;.   ,e;j gpuNjrj;jpy; njhlh;r;rpahf kionga;J tUtjdhy; Nghf;Ftuj;J neupry; Vw;gl;Ls;sik Fwpg;gplj;jf;fJ.

கல்முனையில் பொலிஸ் ஜீப் வண்டி லொறி மோதல்

Image
nghyp]; [Pg;tz;bAk; fdufnyhwp xd;Wk; fy;Kid kl;lf;fsg;G tPjpapYs;s ghz;bUg;G re;jpapy; ,d;W khiy 5.00kzpastpy; NeUf;F Neh;Nkhjpf;nfhz;ljpy; %d;W nghyp]; cj;jpNahfj;jh;fs; gLfhakile;jdh;.               kUjKid gpuNjrj;jpypUe;J fy;Kid nghyp]; epiyaj;ij Nehf;fp gazpj;j nghyp];[Pg;tz;bAk; fy;KidapypUe;J kl;lf;fsg;ig Nehf;fp gazpj;j fdufnyhwpAk; Nkhjpf;nfhz;ljpNyNa 4nghyp]; cj;jpNahfj;jh; rk;gtj;jpy; khl;bf;nfhz;ldh;. ,th;fspy; xUth;kpfTk; Mgj;jhdepiyapy; kl;lf;fsg;G Nghjdh itj;jparhiyf;F nfhz;Lnry;yg;gl;lJld; ,Uth; fy;Kid Mjhu itj;jparhiyapy; jPtpurpfpr;ir gpuptpy; mDkjpf;fg;gl;Ls;sdh;. NkYk; xUth; rpWfhaaq;fSf;Fs;shfpAs;shh;. 

கல்முனை கல்வி வலயத்தில் சேவை நலன் பாராட்டு விழா

Image
கல்முனை கல்வி வலயத்தில் நீண்ட காலமாக முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா   வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக் தலைமையில கல்முனை கல்வி வலயத்தின் கூட்டமண்டபத்தில் நடை பெற்றது . பிரதி கல்விப் பணிப்பாளர் வீ.சிவப்பிரகாசம் ,கணக்காளர் எச்எம்.எம்.றஸீட் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் எம்.என்.எம்.பதுறுதீன் ஆகியோர்  உட்பட  பாராட்டி கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட்ட முகாமைத்துவ உதவியாளர் சரஸ்வதி சுப்பரமணியம் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஏ.செல்லத்துரை ஆகியோர் உத்தியோஸ்தர்களுடன் நிற்பதனையும் படங்களில் காணலாம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் திங்கட்கிழமை

Image
      இவ்வருடம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது. திணைக்களத்தின் அதிகாரியொருவர் சற்றுமுன் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நூர் தீன் மசூர் வபாத்

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்   நூர் தீன் மசூர் மாரடைப்பு காரணமாக இன்று காலை  வபாதானார் அவரது ஜனாஸா இன்று இரவு கொழும்பில் அடக்கம் செயப்படும் . i