உள்ளுராட்சி மன்ற தேர்தல் விகிதாசார முறைப்படிதான் நடைபெறுமாம்


உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட மூலம் ஜனவர் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசாரத் தேர்தல் முறையில்தான் உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டு என்று என்று தெரிய வருகின்றது .
ஏற்கனவே பல தடவை பிற்போடப்பட்ட உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய உள்ளுர்ராட்சி தேர்தல் முறைக்கு அமைவாக விகிதாசார மற்றும் வட்டார கலப்பு தேர்தல் நடாத்து வதற்கு அரசு திட்டமிட்டுள்ளபோதும் குறுகிய காலத்துக்குள் வட்டார எல்லைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றி இருப்பதால் விரிவாக பார்க்க
மேற்படி சட்ட மூலத்தை ஜனவரியில் பாராளுமன்றத்தில் அரசுடன் இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சட்டமாக்குவதற்கு ஆளும் ஐக்கிய தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளன போதிலும் உடன் நடைமுறை படுத்துவதில் பல சிக்கல்களை எதிர் கொள்வதாக தெரிகின்றது
இதனால் உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடாத்தப்பட்டு ஏப்பிரல் 16ஆம் திகதி புதிய அவைகளின் அமர்வுகள் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளதாள் வட்டார எல்லைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு சிக்கல்கள் தொன்றியுள்ளதாலும் எல்லைகளை வரையும் பணிகள் முற்று பெறாது இருப்பதாலும் அடுத்த ஆண்டில் நடைபெறபோகும் உள்ளுர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார முறையில்தான் நடைபெறும் என்று தெரிய வருகின்றது .
உள்ளுராட்சித் தேர்தல் முறை சீர்திருத்தச் சட்ட மூலம் தொடர்பான பல செய்திகளையும் கட்டுரைகளையும்  www.lankamuslim.org உங்களுக்கு வழங்கியுள்ளது என்பது குறிபிடத்தக்கது

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்