Posts

Showing posts with the label ஆய்வு

கல்முனையன்ஸ் போரத்தின் " விழித்தெழு " ஆய்வரங்கம்

Image
யு.எம்.இஸ்ஹாக்  கல்முனையன்ஸ் போரத்தின் சமகால கல்முனையை எடை போட்டுக் காட்டும்  கல்வி,சமூக பொருளாதார தகவல் திரட்டு 2016 இனது முடிவுகளை ஆய்வு செய்யும் " விழித்தெழு " ஆய்வரங்கம்  இன்று வெற்றிகரமாக நடந்தேறியது. ஆய்வரங்க நிகழ்வு இன்று காலை கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் நடை பெற்றது .கல்முனையன்ஸ் போரத்தின் உறுப்பினர் றிஸாட் ஷரீப் தலைமையில் நடை பெற்ற ஆய்வரங்கு நிகழ்வில் ஹமீட்  எஸ்.லெப்பை வரவேற்புரை நிகழ்த்தினார் . நிகழ்வில் கல்முனைக்கான தனி நபர் கல்வி களஞ்சிய செயலி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது . அதனை தொடர்ந்து தகவல் திரட்டு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு  குழுக் கலந்துரையாடலும் இடம் பெற்றது. குழுக்கலந்துரையாடலில் கல்வி அரங்கு,சுகாதார அரங்கு,சமூக கலாச்சார அரங்கு ,பொது வசதிகள் அரங்கு ,பொருளாதார அரங்கு என ஐந்து வகையாக விரிவாக ஆராயப்பட்டு கலந்து கொண்ட  அரசியல் பிரமுகர்கள் ,கல்விமான்கள் ,புத்திஜீவிகள்,வைத்தியர்கள்  முன்னால்  சமர்ப்பணம் செய்யப்பட்டது . அரசியலுக்கு அப்பால் கல்முனையின் உரிமையும் ,அபிவிருத்தியும்  நடந்தது ,நிகழ

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு 'நினைவின் நிழலில்' நிகழ்வு இன்று கல்முனையில் நடைபெற்றது.

Image
உலகறிந்த கவிஞர் ''சண்முகம் சிவலிங்கம்'' அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவாக   ''நினைவின் நிழலில்'' நிகழ்வு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை   (07.04.2017)  நடைபெற்றது. எழுத்தாளரும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஆலோசகருமான உமாவரதராஜன் தலைமையில் கல்முனை பாத்திமா தேசிய பாடசாலை கிளனி மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் தொடர்பாக பேராசிரியர் சி .மௌனகுரு அவர்களின்  ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு அரங்கு ஆய்வு கூடம் வழங்கிய  'அப்பா ' கவி நாடகம் மேடையேற்றப்பட்டதுடன், நினைவு சிறப்புரையை கவிஞரும் விரிவுரையாளருமான சோ .பத்மநாதன் வழங்கினார்.  அத்துடன் ர .ஜோயல் குழுவினரால் கவிஞரின் சில  கவிதைகள் உள்ளடங்கிய ஒளித் தொகுப்பான 'வரிகளும் வடிவமும் ' திரையிடப்பட்டது.  கல்முனை தமிழ் சங்கத் தலைவர் பரதன் கந்தசாமி அவர்கள் வரவேற்புரையும்,  கல்முனைநெற் ஊடக குழுவின் இயக்குனர் கோ.பிரசாந்  நன்றியுரையையும், நிகழ்ச்சி தொகுப்பை   க. டினீஸ்கரனும்  வழங்கினர்.  இன்றைய நிகழ்வில்  பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கும்

முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீடு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்)   மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளரும்ஊடகவியலாளருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா தொகுத்துள்ள முகநூல் கவிதைகளின் தொகுப்பான முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (31-03-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நூலாசிரியர் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னிலை அதிதி ஓய்வு  பெற்ற கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாகீம்எழுத்தாளர் உமாவரதராஜன்,  கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் . இங்கு இலக்கிய அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் செ.யோகராசாவிடமிருந்து நூலின் முதல் பிரதியை சறோ  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜூதீன் பெற்றுக் கொண்டார். எழுகவி ஜலீல் நாட்டார் கவி பாடினார்.நிகழ்வுகளை  பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், ஆசிரியர் எம்.எம்.விஜிலி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள் பெரும் அளவில் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

புத்தர் சிலைகளும் சிறுபான்மைவரலாற்றுக் கட்டுரையாளர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் யினரின் எதிர்காலமும்

Image
வரலாற்றுக்  கட்டுரையாளர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்  இலங்கை நாட்டில் பௌத்தர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவருகின்றார்கள் என்ற விடயம் அனைவரும் அறிந்த விடயமாக இருக்கிறது. ஆதலால் இதனை மீண்டும் அழுத்தமாக சொல்லவேண்டிய தேவையில்லை. கடந்த சில ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதக்குழுக்கள் முஸ்லிம்களைக் குறிவைத்து தமது தீவிரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. இலங்கை சிங்களவர்களின் நாடு என அழுத்திச் சொல்லும் அதேவேளை முஸ்லிம்களை இந்நாட்டைவிட்டு துரத்துவோம் அல்லது அழித்தொழிப்போம் எனவும் துவச வார்த்தைகளைக் கொண்டு காயப்படுத்தி வருகின்றார்கள்.  உண்மையில் இலங்கை சிங்களவர்களின் நாடு அல்ல. இது சிங்களவர்கள்இ தமிழர்கள்இ முஸ்லிம்கள்இ கிறிஸ்தவர்கள்இ இந்தியத் தமிழர்கள்இ மலேஇ பேகர் மற்றும் ஏனைய மதத்தவர்கள் என பல்லினம் வாழும் ஒரு நாடாகும். இப்பல்லினத்தவர்களில் பௌத்தர்கள் பெரும்பான்மையினர் என்பதே உண்மையாக இருக்கின்றது. பௌத்தர்கள் பெரும்பான்மை என்பதால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. இம்முதன்மைத் தான

நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும் நூல் வெளியீட்டு விழா

Image
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் கவிஞர் எம்.எல்.ஏ.கையூம் எழுதிய நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும் நூல் வெளியீட்டு விழா  கடந்த சனிக்கிழமை (05) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது . நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை தலைவரும் அட்டாளைச் சேனை கல்வியற்கல்லூரி விரிவுரையாளருமான மௌலவி ஏ.எல்.ந ஸீர் கனி தலைமையில் நடை பெற்ற  நூல் வெளியீட்டு விழா வைபவத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார் . நூலின் முதல் பிரதியை நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான சி.எம்.ஹலீம் பெற்றுக் கொண்டார் . நிகழ்வில் கெளரவ அதிதிகளாக  மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ,அடடாளைச்சேனை கல்வியற் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஆகியோரும் . விசேட அதிதிகளாக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலை தர நிர்ணய வைத்திய அதிகாரி எம்.சி.எம்.மாஹிர்  ,ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , தென்

மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனித். பி எழுதிய சமூகவியல் நூல் வெளியீட்டு விழா

Image
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக  பணியாற்றும் திருமதி ஜெனித். பி எழுதிய சமூகவியல் நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம்   நட்பிட்டிமுனையில் நடை பெறவுள்ளது. நட்பிட்டிமுனை நெடா அமைப்பின் அனுசரணையுடன்  நட்பிட்டிமுனை சிவசக்தி  மகா வித்தியாலய  அதிபர் எஸ்.சபாரெத்தினம்  தலைமையில்  ஞாயிற்றுக் கிழமை (25) மாலை நட்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா நடை பெறும் . நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன்,ரீ.கலையரசன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் ,கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ,கல்முனை வலயக்  கல்வி அலுவலக  பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில் வாகனம் ,நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  டீ.மோகனகுமார்  ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். மாகாண  சபை உறுப்பினர்கள் இருவர் முன்னிலையிலும் நூல் வெளியீடு இடம்பெறுவதுடன்  நூலின் அறிமுகவுரை  தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் சஞ்சீவி குமார் நிகழ்த்துவார் . தென் கிழக்குப் பல்கலை

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு!அம்பாறை மாவட்ட இலக்கிய முன்னோடிகளின் கருத்துக்கள்

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கொழும்பில் இவ்வருடம் டிசம்பர் மாதம் நடாத்தவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக மாவட்டம் தோறும் முஸ்லிம் இலக்கிய முன்னோடிகளின் கருத்துக்கள் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் முதலாவத சந்திப்பு அம்பாறை மாவட்ட இலக்கிய ஆர்வலர்களுடன் நடை பெற்றது. உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கவிஞர் சோலைக் கிளி தலைமையில் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (26.08.2016 )நடை பெற்றது. இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னா சரிபுத்தீன், செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இச்சந்திப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக கருத்துக்’கள் தெரிவித்தளனர். உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு டிசம்பர் மாதம் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் றிஸாத் பதியூதீன் தலைமையில் நடை பெறவுள்ளது. முஸ்லிம் படைப்பாளிகளால் ஆக்கப்பட