நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும் நூல் வெளியீட்டு விழா


நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் கவிஞர் எம்.எல்.ஏ.கையூம் எழுதிய நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும் நூல் வெளியீட்டு விழா  கடந்த சனிக்கிழமை (05) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது .

நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை தலைவரும் அட்டாளைச் சேனை கல்வியற்கல்லூரி விரிவுரையாளருமான மௌலவி ஏ.எல்.நஸீர் கனி தலைமையில் நடை பெற்ற  நூல் வெளியீட்டு விழா வைபவத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார் .
நூலின் முதல் பிரதியை நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான சி.எம்.ஹலீம் பெற்றுக் கொண்டார் .
நிகழ்வில் கெளரவ அதிதிகளாக  மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ,அடடாளைச்சேனை கல்வியற் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஆகியோரும் . விசேட அதிதிகளாக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலை தர நிர்ணய வைத்திய அதிகாரி எம்.சி.எம்.மாஹிர்  ,ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.நளீர் ,மட் டக்களப்பு கணக்காய்வு அதியட்சகர் பீ.ஏ.ஜெரோஸ் , மட்டக்களப்பு ஸ்ரீ லங்கா டெலிகொம் முகாமையாளர் ஏ.அன்பாஸ் , சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் 
தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா  நூலின் நயவுரைகள் வழங்கினார் .இதே வேளை நட்பிட்டிமுனை கிராமத்தின் பண்பாட்டியலை வெளிப்படுத்தும் வகையில் கிராமிய நாட்டிய நாடக காலை நிகழ்வுகளும் அரங்கேற்றப் பட்டன .












Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது