Posts

Showing posts from July, 2014

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அமைப்பு அங்குரார்ப்பண வைபவம்.

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அமைப்பு அங்குரார்ப்ப ண   வைபவம். நாளை இடம் பெறவுள்ளது. இப்பாடசாலையின் வரலாற்றில்  பழைய மாணவர்கள் அமைப்பு அங்குரார்பணம்  இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும். பாடசாலையின் புதிய அதிபர் யு.எல்.எம்.அமீன் அவர்களின் வழிகாடலில் நாளை வெள்ளிக்கிழமை (2014.08.01)  பி.ப.4.30 மணியளவில்  பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம் பெறவுள்ள இந்நிகழ்வில் இப் பாடசாலையில் கல்வி கற்று விடுகைப்பத்திரம் பெற்ற அனைத்து ஆண் மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பழைய மாணவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். தெடர்புகளுக்கு  - 778366313 / 752838219 - நிப்றாஸ் சுலைமா  லெவ்வை,                             777855411 / 758614149 - ஜெஸ்னி பரித்.

கணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்!

Image
கல்வி அமைச்சின் சுற்று நிருபம் வெளியாகியது 2 013இல் க.பொ.த.(சா/த) தோற்றியவர்களும் உள்வாங்கப்படுவர் க. பொ. த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாவிட்டாலும் க. பொ. த. உயர்தரம் கற்பதற்கு வசதி செய்யும் வகையிலான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கும் இரண்டு வருட காலத்துள் இரண்டு தடவைகள் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி கணித பாடத்தில் சித்திபெற வேண்டும் என்ற அடிப்படையின் கீழ் உயர்தரம் கற்க வாய்ப்பு வழங்கப்படும். அத்துடன் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாமல் போகும் மாணவர்களை தொடர்ந்தும் பாடசாலை கட்டமைப்புக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்குடன் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனாவின் ஆலோசனைக்கமைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இப்புதிய சுற்று நிருபத்துக்கு அமைவாக 2013 ஆம் ஆண்டில் க. பொ. த. சாதாரணதரத்துக்கு தோற்றி உயர்தர வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்ட கலைப் பிரிவு அல்லது உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்ப பாடநெறிகளுக்கு உட்பட்ட பாடநெறிகளை கற்க விரும்பும் மாணவர்களும் உள்வாங்கப்படுவார்கள். என்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த

சேர்மன் எல்.உதுமாலெவ்வை சம்பியன் வெற்றிக்கேடய மென் பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி

Image
நோன்பு பெருநாளை முன்னிட்டு நற்பிட்டிமுனை மென்ஸ் சமுக சேவை அமைப்பு ஏற்பாடு செய்த சேர்மன் எல்.உதுமாலெவ்வை சம்பியன் வெற்றிக்கேடய மென் பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் நற்பிட்டிமுனை மென்ஸ் கழகம் சம்பியனாக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தின் சமுக முன்னோடி மர்ஹூம் லெவ்வைக் கனி உதுமாலெவ்வை நினைவாக நடாத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நோன்பு பெருநாளை முன்னிட்டு   நற்பிட்டிமுனை தலைவர் அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் மென்ஸ் சமுகசேவை அமைப்பின் தலைவர் ஏ.எச்.எச்.எம். நபார் தலைமையில் நடை பெற்றது.  இறுதிச் சுற்றுக்கு தெரிவாகிய நற்பிட்டிமுனை ஹீரோ விளையாட்டுக் கழகத்துக்கும்  மென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே நடை பெற்ற போட்டியில்  ஹீரோ விளையாட்டுக் கழகம் 10ஓவரில் சகல விக்கட்டுக்களையூம் இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றது. எதிர்த்து விளையாடிய மென்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டு விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 95 ஓட்டங்களைப் பெற்று சேர்மன் எல்.உதுமாலெவ்வை சம்பியன் வெற்றிக்கேடயத்தை பெற்றுக்

ஜப்பான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம்

Image
இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி அணுகுண்டு துயர சம்பவங்கள் மறக்க முடியாத, யாராலும் அழிக்க முடியாத துயர சம்பவமாகும். கடந்த 1945–ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் திகதி  ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், 9 ஆம் திகதி  நாகஷாயி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. அதில் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகஷாயில் 80 ஆயிரம் பேரும் மடிந்தனர். அதன் பின்னர்தான் இண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் அதன்பின்னர் அந்த இரு நகரங்களிலும் ஏற்பட்ட துயர சம்பவங்கள் எண்ணிலடங்காதவை ஆகும். உலக வரலாற்றில் அழிக்க முடியாத இந்த துயர சம்பவத்தில் அமெரிக்காவின் ‘எனோலா கே’ என்ற விமானிகள் குழு மறக்க முடியாத அங்கமாக உள்ளது. ஜப்பானின் ஹிரோஷி மாவில் அணுகுண்டு வீசிய அக்குழுவில் 24 வயது நிரம்பிய தியோடர் வன்கிர்க் என்ற விமானியும் இடம் பெற்றிருந்தார். நெதர்லாந்தை சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். தற்போது ஜார்ஜியாவில் குடும்பத்துடன் தங்கியிருந்த அவர் தனது 93 வயதில் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது மகன் தோம் வன்கிர்க் தெரிவித் துள்ளார். அவரை இரண்டாம் உல

கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா எதிர் வரும் 2014.08.02 சனிக்கிழமை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் ஆராதனை  மண்டபத்தில் இடம் பெவுள்ளது. இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்,நிழல் கல்வி பிரதியமைச்சருமான ஏ.எம்.எம்.முஜிப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள்  அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பிரதம அதிதியாகவும் , பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளா , கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலில்  உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

கல்முனை பிரதேசத்தில் இடம் பெற்ற நோன்பு பெருநாள் தொழுகைகள்

Image
படங்கள்-எஸ்.எம்.ரம்ஸான் 

லண்டன் மில்ட்டன் கீன்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.

Image
மீரா அலி ரஜாய்  புனித ரமழான்  மாதத்தில் பசித்திருந்தும்,தாகித்திருந்து ம்  இறைவனின் இந் அருளை வேண்டி ஐம் புலன்களையும்  அடக்கியாண்டு அல்லாஹுக்கு தன்னை தியாகம் செய்து கொண்ட முஃமின்கள் யாவரும் இன்று புத்தாடை அணிந்து  நறு மனம் கமல தொழுகை  திடலுக்கு சென்று தொழுகை மேற்க்  கொண்டு உற்றார், உறவினர் நண்பர்களோடும் மற்றும்  அறிமுகம் இல்லாத அன்பர்களோடும் "முசாபஹா"  செய்து  கொண்டு ஒருவருக்கொருவர் இதய பூர்வமான நல் வாழ்த்துக்களை வெளிபடுத்திக் கொண்டதை உள்ளங்களுக்கெல்லாம்  புத்துணர்வை ஏற்படுத்துவதாக  அமைந்திருந்தது.     உலகில் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம் மக்கள் புனித "ஈதுல் பித்ர்" நோன்பு பெருநாளை கொண்டாடி  வருகின்றனர் அதனடிப்டையில்,     லண்டன், மில்டன் கீன்ஸ் நகரில் வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர். இதில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மௌலவி எம். கலாமுல்லாஹ் அவர்கள் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தையும் நடத்தினார்.       உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் சாந்தி, சமாதானமாக வாழ வல்ல இறை

பொருநாள் வாழ்த்து

Image
எமது ஊடக வளர்ச்சியில் எம்முடன் இணைந்து உழைத்த எமது ஊடக சொந்தங்களுக்கு இனிய பொருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது ஊடகப் பணி வளர்ச்சியில் உங்களின் பங்களிப்புக்களை மென்மேலும் எதிர்பார்த்தவர்களாக ...... ஆசிரியர் எங்கள் தேசம் 77,Dematagoda Road,  Colombo-09 0778927350 0112 689 324 Email:  news@engalthesam.lk WEB:  www.engalthesam.lk

புனித நோன்புப் பெருநாள் செவ்வாய்க்கிழமை

Image
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் தலைப் பிறை நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மாலை தென்படாமையினால் புனித ரமழான் மாதத்தினை 30 நாட்களாக நிறைவு செய்யுமாறு  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்தது. இதனால் புனித நோன்புப் பெருநாளை செவ்வாய்க்கிழமை இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டாடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது. புனித ஷவ்வால் தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன்போது தலைப் பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் தென்படாமையினால் புனித ரமழான் மாதத்தினை 30 நாட்களாக நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ கவுன்ஸில், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இணையத்தள பெருநாள் வாழ்த்து

Image
உங்கள் பெருநாள் வாழ்த்துக்கள்  எமது இணைய தளத்தில்  பிரசுரிக்க விரும்பினால்  தங்களின் வாழ்த்துக்களையும்  புகைப்படத்தையும்  எமது இணையதளதின்  முகவரிக்கு அனுப்பி வைக்கவும்( இரு தினங்களுக்கே வாழ்த்து சேவை இடம் பெறும் )

கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலை பழைய மாணவர்களின் இப்தார்

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலையின் 78 – 82 பழைய மாணவர்களின்  அமைப்பின்  ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் இப்தார் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலையின் 78 – 82 பழைய மாணவர்களின்  அமைப்பின்  ஏற்பாட்டில்  பாடசாலையின் நுளைவாயில் திறத்தல், ஒன்று கூடல், கலைநிகழ்ச்சி, கௌரவித்தல், நினைவு மலர் வெளியீடல் என பல்வேறு நிகழ்வுகளை நடாத்தி வரும் ஒழுங்கில் பழைய மாணவர்களின் அமைப்பின் சக நன்பர்களான   முஸ்லிம்  மாணவர்களையும் அங்கு தற்போது கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களையும் புனித ரமழான் மாதத்தில் கௌரவிக்கும் பொருட்டு பாடசாலை வளாகத்தில் இப்தார் நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்தனர். 

கல்முனை மாநகர சபையின் இப்தார் வைபவம்!

Image
கல்முனை மாநகர சபையின் வருடாந்த இப்தார் நிகழ்வு, மாநகர சபை வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது.  கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வை.எல்.சலீம் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.  தமிழ், முஸ்லிம் இன நல்லுறவுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த இந்த இப்தார் நிகழ்வில், மாநகர சபையின் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபையின் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். நிகழ்வின் இறுதியில் விசேட துஆபிரார்த்தனையும் இடம்பெற்றது. 

கல்முனை காணி மாவட்ட பதிவக இப்தார் நிகழ்வு

Image
கல்முனை காணி மாவட்ட பதிவக  நலன் பேணும் அமையம் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு   காணிப் பதிவாளரும்,மேலதிக மாவட்டப் பதிவாளருமான   எம்.ஏ.ஜமால் முஹம்மத்  தலைமையில் 2014.07.23 ஆந்  திகதி  புதன் கிழமை  5.30 மணிக்கு  அலுவலக வளாகத்தில் நடை பெற்றது . நிகழ்வில் சட்டத்தரணிகள் ,மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலதரப் பட்ட தமிழ் முஸ்லிம் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .

பரீட்சை உத்தியோகத்தர்கள் பங்குபற்றும் முக்கிய கூட்டம்

Image
கல்விப் பொதுத்தராதர உயர்தரபரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள கல்முனை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (26) காலை 8.00 மணிக்கு அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மஹா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கல்முனை கல்வி மாவட்டத்தில் உள்ள கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடவுள்ள இணைப்பாளர்கள், உதவி இணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்கள் என சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவித் தார். பரீட்சை திணைக்களத்தின் பிரதி பரீட்சை ஆணையாளரினால் நடத்தப்படும் இவ் அறிவுறுத்தல் கூட்டத்துக்கு தவறாது கலந்து கொள்ளுமாறு சகல உத்தியோ கத்தர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின் றனர். கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களும் தாமதமாகி சமுகமளிப்பவர்களும் பரீட்சை கடமையிலிருந்து தாமாகவே விலகியதாக கருத்திற் கொள்ளப்படுவர்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை 30 முதல் டியூசன்களுக்கு தடை

Image
பரீட்சை முடியும் வரை தடை அமுலில் க.பொ.த உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட் சைகள் முழுமையாக முடிவடையும் வரை டியூசன் வகுப்புக்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முற்றாக தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கையின்படி, பிரத்தியேக வகுப்புக்கள், குழு வகுப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தல், பரீட்சைக்கு வரக்கூடிய கேள்விகளை தொகுத்து வழங்குதல், போஸ்டர்கள், பெனர்கள் ஓட்டுதல் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், வகுப்புக்கள் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரம் செய்தல் ஆகிய அனைத்து விடயங் களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. புஸ்பகுமார தெரிவித்தார். இத்தடையை மீறி செயற்படும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. பிரதேச செயலக ஊழியர் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் மேலதிக அரசாங்க அதிபர் கே்.விமலநாதன் கல்முனை பிரதேச செயலாளர் ஏ.மங்களவிக்ரமாராச்சி பிரதேச செயலாளர்களான ஐ.எம்.ஹனீபா ஏ.எல்எம்.சலீம்.மற்றும் கணக்காளர்கள் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் உட்பட மாற்றுமத நன்பர்கள்  பலர் கலந்து கொணடனர்.