Posts

Showing posts from February, 2017

இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நடுவர் போட்டிப் பரீட்சையில் நற்பிட்டிமுனை றிலாஸ் சித்தி

Image
இலங்கை கிரிக்கட்  கட்டுப்பாட்டு  சபையினால்  நடாத்தப் பட்ட கிரிக்கட் நடுவர்களுக்காகன  போட்டிப் பரீட்சையில்  (UMPIRE) நற்பிட்டிமுனையை  சேர்ந்த றிலாஸ் முகம்மட் சித்தியடைந்துள்ளார் . விளையாட்டு துறையில் ஆர்வங் கொண்ட இவர்  தான் பிறந்த நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் . மேலும் பல திறமைகள் பெற்று சாதனைகள் பல புரிய கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துகிறது 

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம்.சமீம் அவர்களுக்கு பிரியாவிடை கெளரவிப்பு

Image
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையில்  கடந்த 07 வருடங்களுக்கும் மேலாக சத்திர சிகிச்சை நிபுணராக  பணியாற்றி பல சத்திர சிகிச்சைகளை  வெற்றிகரமாக  செய்து முடித்து  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு  இடமாற்றம் பெற்றுள்ள சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்  ஏ.டபிள்யு.எம்.சமீம் அவர்களுக்கு வைத்தியசாலை வைத்திய  அத்தியட்சகர்  மற்றும்  வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்களால் பிரியாவிடை  வைபவம்  சம்மாந்துறை  அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் நடாத்தப் பட்டது. சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் அவர்களுக்கு வைத்திய  அத்தியட்சகர் பொன்னாடை போர்த்தி  கெளரவித்தார் . வைத்தியர்கள் தாதி உத்தியோகத்தர்கள் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர் . 80க்கும்  மேற்பட்ட  வைத்தியசாலை வைத்திய  அத்தியட்சகர்  மற்றும்  வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்  ஏ.டபிள்யு.எம்.சமீம்  நினைவு சின்னம் வழங்கி வைத்தார் . 

விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக ஹரீஸ் நியமனம்.

Image
(அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளதால் பிரதி அமைச்சர் ஹரீஸ் விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எடுத்த காரியத்தை மிகவும் சிறப்பாகச் செய்யும் ஆற்றலையும் திறமையையும் கொண்டவர் மாகாணப் பணிப்பாளர் எம்.சி.அன்சார்

Image
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  (பி.எம்.எம்.ஏ.காதர்)  மருதமுனை மண்ணின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலே கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற எம்.சி.அன்சார் அவர்களின் சேவை இந்த மாகாணத்திலே பிரதிபலிப்பதென்பது மருதமுனை மண்ணுக்கு கிடைத்த பெருமையாகும். மருதமுனை மண் பலதரப்பட்ட அறிவியலாளர்களை உருவாக்கியிருக்கின்றது இதில் நானும் ஒருவன் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.அந்த வகையில் இந்த இப்போது கிடைத்திருக்கின்ற இந்தப் பதவியின் மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சேவை வழங்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது  என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹமட் கனி தெரிவித்தார். மருதமுனை கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற மருதமுனைச் சேர்ந்த எம்.சி.அன்சாருக்கான வரவேற்பும், கௌரவிப்பும் ஞாயிற்றுக்கிழமை மாலை(12-02-2017)பேரவையின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்றது  இதில் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டு உ

கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரி சங்க வருடாந்த ஒன்று கூடலும் கெளரவிப்பு விழாவும்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக  நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த ஒன்று கூடலும் கெளரவிப்பு விழாவும் நாளை திங்கட் கிழமை இரவு  வலயக் கல்வி அலுவலக திறந்த வெளியரங்கில் நடை பெறவுள்ளது. வலயக்  கல்விப்  பணிப்பாளரும் நலன்புரி சங்க  போசகருமான எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெறவுள்ள நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர்  எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். கல்முனை வலயக்  கல்வி அலுவலக கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்ஸரின் வழிகாட்டலுடன்  இடம் பெறும்  நிகழ்வில்  கலை  கலாச்சார நிகழ்வுகளும் மின்னொளி  விருந்தோம்பலும் நடை பெறவுள்ளது . நிகழ்வில்  ஓய்வு பெற்ற  04 உத்தியோகத்தர்களான   முகாமைத்துவ உதவியாளர்களான திருமதி அலிபா ,  லத்தீப்  ஆகியோரும்  தொழில் நுட்ப மேற்பார்வை அதிகாரி அஸீஸ் ,அலுவலக  உதவியாளர் நாகேஸ்வரன்  ஆகியோரும்  இடமாற்றம் பெற்று சென்ற  பிரதிக் கல்விப்  பணிப்பாளர்  முக்தார்,கணக்காளர் சாலிதீன் ஆகியோரும்  அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவமலர் , அலுவலக உதவியாளர் நிமலன்  ஆகிய 04 உத்தியோகத்தர்களும்  பாராட்டி கெளரவித்து  நினைவுப் பரிசுகளும் வழங்கி

கல்முனையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக   சுதந்திர தின விழா    கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல் தலைமையில் 69வது சுதந்திர தின விழா நடை பெற்றது . கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை   சுதந்திர தின விழா  இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிழ்வுகள் இன்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடை பெற்றது  வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஏ.எல்.எப்.ஏ.றஹ்மான் தலைமையில்.ந்டை பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .இதே வேளை இவ்வைத்தியசாலையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு   கல்முனை மக்கள் வங்கி கிளையால் வங்கிக்கணக்கு புத்தகங்கள் வழ்ங்கி வைக்கப்பாட்டதுடன் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் மக்கள்  வங்கியின் பிராந்திய உதவி முகாமையாளர் ஏ.அஸீஸ் உட்பட   ஊழியர்களும் கலந்து கொண்டனர்  கல்முனை பிரதேச செயலக  சுதந்திர தின விழா  69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏட்பாடு செய்யப்படட நிகழ்வுகள் இன்று (04) கல்முனை பிரதேச செயலக வளாக