கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரி சங்க வருடாந்த ஒன்று கூடலும் கெளரவிப்பு விழாவும்

கல்முனை வலயக் கல்வி அலுவலக  நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த ஒன்று கூடலும் கெளரவிப்பு விழாவும் நாளை திங்கட் கிழமை இரவு  வலயக் கல்வி அலுவலக திறந்த வெளியரங்கில் நடை பெறவுள்ளது.

வலயக்  கல்விப்  பணிப்பாளரும் நலன்புரி சங்க  போசகருமான எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெறவுள்ள நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர்  எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கல்முனை வலயக்  கல்வி அலுவலக கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்ஸரின் வழிகாட்டலுடன்  இடம் பெறும்  நிகழ்வில்  கலை  கலாச்சார நிகழ்வுகளும் மின்னொளி  விருந்தோம்பலும் நடை பெறவுள்ளது .

நிகழ்வில்  ஓய்வு பெற்ற  04 உத்தியோகத்தர்களான   முகாமைத்துவ உதவியாளர்களான திருமதி அலிபா ,  லத்தீப்  ஆகியோரும்  தொழில் நுட்ப மேற்பார்வை அதிகாரி அஸீஸ் ,அலுவலக  உதவியாளர் நாகேஸ்வரன்  ஆகியோரும்  இடமாற்றம் பெற்று சென்ற  பிரதிக் கல்விப்  பணிப்பாளர்  முக்தார்,கணக்காளர் சாலிதீன் ஆகியோரும்  அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவமலர் , அலுவலக உதவியாளர் நிமலன்  ஆகிய 04 உத்தியோகத்தர்களும்  பாராட்டி கெளரவித்து  நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப் படவுள்ளனர்  என்று கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரி  சங்க தலைவரும்  முகாமைத்துவ உதவியாளரும்  சிரேஷ்ட ஊடகவியலாளருமான யு.முகம்மது இஸ்ஹாக் தெரிவித்தார்
நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக் கல்வித் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வித் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் ,கல்முனை வலயத்தில் உள்ள 65 பாடசாலைகளின் அதிபர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி