Posts

Showing posts from September, 2014

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் வாணி விழா

Image
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நவராத்திரி விழாவையொட்டிய வாணி விழா கடந்த  செவ்வாய்க்கிழமை நடை பெற்றது . வலயக்கல்வி அலுவலக  நலன் புரிச்சங்கம் ஏற்பாடு செய்துள்ள  நவராத்திரி விழாவின் வாணி விழா நிகழ்வூகள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் இடம் பெற்றது  இந்நிகழ்வூகளில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாககலந்து கொண்டார் பாண்டிருப்பு  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய குரு  சிவஸ்ரீ  மு.கு.சபாரத்தினம் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் இடம் பெற்றதுடன்  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை இ உவெஸ்லி உயர்தர பாட சாலை  மாணவிகளின் நடன நிகழ்வூகளும் இடம் பெற்றன.  மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும்இஉதவிக் கல்விப் பணிப்பாளர்களும் இ கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும் இஆசிரிய ஆலோசகர்களும்மற்றும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்

வாழ்வாதார பயிற்சியில் பங்குபற்றியோருக்கு சான்றிதழ்

Image
கிழக்கு மாகாண முதலமைச்சின் நிதியில் கிராம அபிவிருத்தித் திணைக்களம் நடாத்திய வாழ்வாதாரப் பயிற்சி நெறிகளில் கலந்து கொண்ட யுவதிகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் . அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கே. அருந்தவராஜா உரையாற்றுவதையும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ. எல். ஏ. அஸீஸ். அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச். கலீலுர் ரஹ்மான் ஆகியோர்  சான்றிதழ் வழங்குவதையும், நிகழ்வில் கலந்து கொண்டயுவதிகளையும் படங்களில் காணலாம்

ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சர் , உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு!

Image
ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் நாளை 30ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியாபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். ஊவா மாகாண சபை தேர்தலில் 96,619 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய சசேந்திர ராஜபக்ஷ இம்முறையும் ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக் கொள்வார். ஊவா மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது குறித்து இன்று 29ஆம் திகதி நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியன் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற ஊவா மாகாண சபை தேரிதலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில்  19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கரவாகான் காசிம் ஜீ எங்கள் அன்பன்

Image
கரவாகான் காசிம் ஜீ எங்கள் அன்பன் காலமெல்லாம் வரலற்றுப் பொய்கையில் ஊறி வரலாற்று நூல் பல எழுதி இவ்வூர் வாழும் மக்களுக் களித்தான் ஆதாரமாக குலத்திலும் அவன் மேலான அன்பன் குணத்திலும் அவன் தூய மேலாளன் பண்டைக் கால கரவாகுவின் வரலாறு சேர்த்தான் பண்பாளன் கலாபூஷணம் காசிம் ஜீக்குப் சோபனமே ஏடு பலதேடி எங்கெல்லாம் சென்றானோ இன்று ஏணிதனில் ஏறி அவன் வீட்டில் ஏடுகளைப் பார்க்க வைத்தான் இரவு பகலாக ஏடுகளைப் பாதுகாத்தான் இன்று அவன் பணி பாரெல்லாம் போற்றுகிறதே அப்பன் பெயருக்கப்பால் அடுத்த சந்ததி அறியாத இவ்வூர் மக்களின் பூர்வீகம் பற்றி  ஏழு தலைமுறை விளக்கி வைத்தான் அவர்கள் என்றென்றும் மறக்காத செயல் என்றும் மாறாதே காரியப்பர் வம்சம் காலம் காலமாக எம்  கல்முனையில் வாழ்ந்தார்கள் என்பதை கனவிலும் நான் கண்டதில்லை. இதை காட்டித் தந்தவன் காசிம் ஜீ கண்டி மன்னர்களை காலமெலாம் காத்தவர்கள் எம் கல்முனை மக்கள் என்று வரலாற்றுண்மையை எமக்குரைத்தவன் வரலாற்று மேலாளன் காசிம் ஜீதான் என்பதை மறக்கத்தான் முடியுமா இன்னுமின்னும் எத்தனையோ சங்கதிகளை இன்று எழுத்தில் வடித்தவன்

மெட்ரோ பொலிடன் கல்லூரியின் பரிசு மழை நிகழ்ச்சி

Image
(அகமட் எஸ். முகைடீன்) மெட்ரோ பொலிடன் கல்லூரியின் பரிசு மழை நிகழ்ச்சி அண்மையில் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகிழ்வில் ஓய்வுபெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளா் மணிப் புலவர் மருதூர் ஏ மஜீட், வர்ணம் தொலைக் காட்சியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் என்.ஹிசாம் முகம்மட், சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த தோமஸ், பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  மெட்ரோ பொலிடன் கல்லூரியின் அனுசரணையில் வர்ணம் தொலைக்காட்சியில் அண்மையில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. மேற்படி திரைப்பட ஒளிபரப்பின்போது கேட்கப்பட்ட வினாவிற்கு குறுஞ்செய்தியின் (SMS) மூலம் சரியான விடையினை அனுப்பி வைத்தவர்களுக்கு குலுக்கல் முறையின் மூலம் மெகா பரிசு உள்ளிட்ட ஆறுதல் பரிசில்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்பட்ட மாணவனுக்கு மெகா பரிசான ஒரு இலட்சம் ரூபா பரிசுக் கூப்பன் வழங்கிவைக்கப்பட்

கல்முனை காணிப் பதிவக மற்றும் மாவட்ட பதிவக அலுவலகத்தில் வாணி விழா

Image
கல்முனை காணிப்பதிவாளரும், மேலதிக மாவட்டப் பதிவாளரும்,  அலுவலக உத்தியோகத்தர்களும், சட்டத்தரணிகளும், பிரசித்த நொத்தாரிசுமார்களும் இணைந்து  வருடா வருடம்  உவப்புடன் நடாத்தப்படும் வாணி விழா எதிர்வரும் புதன் கிழமை 2014.10.01 ஆம் திகதி முற்பகல் 11:30 மணிக்கு காணிப் பதிவக மற்றும் மாவட்ட பதிவாக  அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.  கல்முனை காணிப்பதிவாளரும்,மேலதிக மாவட்டப் பதிவாளருமான  சதிக் ஜே.முஹம்மது  தலைமையில் இடம் பெறும்  இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும், சட்டத்தரணிகளும், பிரசித்த நொத்தாரிசுமார்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் ஏற்பாடு செய்த மூன்று நாள் சாரணர் பாசறை

Image
கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் ஏற்பாடு செய்த மூன்று நாள் சாரணர் பாசறை சது/அல்-மதீனா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜெளபர் தலைமையில் 26,27,28 ஆகிய மூன்று தினங்களும் இடம்பெற்றன. மூன்று நாள் சாரணர் பாசறைக்காக அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம், கிறிஷ்தவ மாணவர்களடங்கிய பாடசாலைகள் பங்கு பற்றியதுடன் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆரம்ப நிகழ்வு அக்கரைப்பற்று/ கல்முனை மாவாட்ட கெளரவ ஆணையாளரும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆரம்ப கால சிறந்த உதைப்பந்தாட்ட மற்றும் விளையாட்டுத்துறை வீரருமான எம்.ஐ.முஸ்தபா பிரதம அழைப்பாளராகவும் பாசறைத்தலைவராகவும் கலந்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இரண்டாம் நாள் நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் புத்தி ஜீவிகள் பலரும் கலந்து கொண்டதுடன் இரவு நிகழ்ச்சியான சாரணர்களின் மேலதிகத் தகமையான நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக மேலதிக நீதிமன்ற நீதிபதியும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதியுமான கெளரவ பஷீல் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்து சாரண மாணவர்களின் நிகழ்வுகளைக் கண்டுகளித்ததுடன்

கல்முனை வலயக்கல்வி அலுவலக வாணி விழா

Image
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நவராத்திரி விழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடை பெறவுள்ளது . வலயக்கல்வி அலுவலக  நலன் புரிச்சங்கம் ஏற்பாடு செய்துள்ள  நவராத்திரி விழாவின் வாணி விழா நிகழ்வுகள் பியாதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் தலைமையில் இடம் பெறவுள்ளது  இந்நிகழ்வுகளில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் , ஓய்வு பெற்ற தபாலதிபர்  கலா பூசணம்  வ.ஞான மாணிக்கம்  சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொள்ளவுள்ளதாக வலயக்கல்வி அலுவலக் நலன் புரிச்சங்க தலைவர் யு.எம்.இஸ்ஹாக்  தெரிவித்தார். பாண்டிருப்பு  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய குரு  சிவஸ்ரீ  மு.கு.சபாரத்தினம் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் இடம் பெறவுள்ளதுடன்  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை , உவெஸ்லி உயர்தர பாட சாலை  மாணவிகளின் நடன நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதுடன்  மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும்,உதவிக் கல்விப் பணிப்பாளர்களும் , கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும் ,ஆசிரிய ஆலோசகர்களும்மற்றும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கல்முனை காசிம் ஜீ காலமானார்

Image
கல்முனை ஹனிபா வீதியைச் சேர்ந்த  கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின்  ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும் , கரவாகு வரலாற்று தொகுப்பாளருமான கலாபூசணம் எம்.எம். காசிம் ஜீ அவர்கள் இன்று ( 28)  காலமானார்கள். இன்னாலிலாஹி வஇன்னாயிலைஹி ராஜிஊன் . அன்னாரின் ஜனாசா இன்று பிற்பகல்  05.00  மணியளவில் கல்முனை நூறானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர். 

அசின் விராது தேரர் இலங்கை விஜயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்-சீற்றம்

Image
(ஹாசிப் யாஸீன்) மியன்மாரின்  969 இயக்கத்தின் தலைவரான அசின் விராது தேரர் இலங்கை விஜயத்திற்கு விசா வழங்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பலத்த கண்டத்தை தெரிவித்துள்ளார்  இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,  அசின் விராது தேரர் இன்று அதிகாலை இலங்கை வந்து சுகததாச உள்ளக அரங்கில் நாளை இடம்பெறவுள்ள பொதுபல சேனாவின் விஷேட கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியில் இந்த தேரர் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் எமது நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை முஸ்லிம்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேரருக்கு விசா வழங்கியதை முஸ்லிம் சமூகம் சந்தேக கண்கொண்டு பார்க்கின்றனர் . சமயத் தலைவர்கள் நாட்டுக்கு வருவதில் எவ்வித பிரச்சினையுமில்லை. இருந்த போதிலும் சர்ச்சைக்குரிய அசின் விராது தேரரின் விஜயத்திற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றனா;. மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டில் இவர்  பின்னணியாக இருந்து

அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக விதை நெல் வழங்கப் படும்

Image
அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜனாதியின் கட்டளைக்கு அமைவாக நிவாரணமாக விதை நெல் வழங்கப் படும் என்று விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். நேற்று காரைதீவூ பிரதேச செயலகத்துக்குட்பட்ட விவசாயப் பிரதி நிதிகளை அமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். தோழில் மற்றும் தொழில்உறவூ பிரதி அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவின் இணைப்பாளர் ஏ.எம். ஜாஹிரின் அழைப்பின் பேரில் வருகை தந்த விவசாய அமைச்சர் மாளிகைக்காடு அல்- ஹூசைன் வித்தியாலயத்தில் விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து விவசாயிகளின் குறைகளைக்கேட்டறிந்தார். விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளால் விவசாயிகளின் குறைபாடுகள் அமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது.  இதன் போதே வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த போகம் நெற் செய்கைக்கான விதை நெல் நிவாரணமாக வழங்கப் படும் என தெரிவித்த போது ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன உட்பட மாகாண சபை உறுப்பினர் டீ.வீரசிங்க உட்பட அமைச்சு அதிகாரிகளும்

கிழக்கு உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Image
(ஹாசிப் யாஸீன்) கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்களில் தற்காலிகமாக கடமையாற்றிய ஊழியர்களில் 650 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டத்தினை கிழக்கு மாகாண சபை முன்னெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றிய 110 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று சாய்தமதருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (27) நடைபெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில்    நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹஸன் அலி, கிழக்கு மாகாண அமைசர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, எம்.ஜ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், ஏ.எல்.எம்.நஸீர், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல.அஸீஸ் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், உயர

பொத்துவில் அறுகம்பையில் நடை பெற்ற சர்வதேச சுற்றுலா தினம்

Image
(  எம்.ஐ.எம்.அஸ்ஹர்) கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சு , சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் ஆகியன இணைந்து சர்வதேச சுற்றுலா தினத்தை இன்று பொத்துவிலிலுள்ள அறுகம்பையில் மிகவும் விமரிசையாக கொண்டாடியது. சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சர்வதேச கூட்டுறவு நிதி திட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம பிரதம அதிதியாகவும் , இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கின் கௌரவ அதிதியாகவும் , உணவு போசாக்கு அமைச்சர் பீ.தயாரெட்ன , தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் விஜயசேகர , கிழக்கு மாகாண ஆளுணர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம , கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் , கிழக்கு மாகாண சுற்றுலாதுறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் , பொ்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸர்ரத் , பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் , இராணுவ அதிகாரிகள் , கடற்படை உயர் அதிகாரிகள் , விமானப்படை உயர் அதிகாரிகள் , பொலிஸ அதிகாரிகள் , சுற்றுலாத்துறை சார் பிரமுகர்கள் என பலரும்