ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சர் , உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு!

ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் நாளை 30ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியாபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.
ஊவா மாகாண சபை தேர்தலில் 96,619 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய சசேந்திர ராஜபக்ஷ இம்முறையும் ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக் கொள்வார்.

ஊவா மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது குறித்து இன்று 29ஆம் திகதி நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியன் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற ஊவா மாகாண சபை தேரிதலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில்  19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி