Posts

Showing posts from March, 2014

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவக் குரல் என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் - ஹரீஸ் எம்.பி

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக என்றும் ஒலிக்கும் என்பதில் எம் சமூகம் நம்பிக்கை வைத்துள்ளதை இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டு அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடுகையில், நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்தில் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். 'அல்ஹம்துல்லாஹ்' இத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்காகவும், கட்சித் தலைமையினை பலப்படுத்துவதற்காகவும் வாக்களித்த கம்பஹா, கொழும்பு, களுத்துறை மற்றும் ஏனைய மாவட்ட முஸ்லிம் சகோதரர்கள், இளைஞர்கள், பெரியார்கள், உலமாக்கள், பெண்கள், கட்சிப் போரா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை நிராகரித்துள்ள களுத்துறை மாவட்ட மக்கள்!

Image
நடைபெற்று முடிந்த மேல் மாகாண சபையின் களுத்துறை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 337,924 ஆசனங்கள் - 13, ஐக்கிய தேசியக் கட்சி – 144,924 ஆசனங்கள் - 06, ஜனநாயக் கட்சி – 43,685 ஆசனங்கள் - 02 மக்கள் விடுதலை முன்னணி – 25,366 ஆசனங்கள் - 01, களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் ஒரு ஆசனத்தை இம்முறைத் தேர்தலில் எதிர்பார்த்திருந்தது. இருந்தபோதிலும் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸினை நிராகரித்துள்ளனர். குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை களுத்துறை மாவட்ட முஸ்லிம்களை கௌரவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை அஸ்லம் அவர்களுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் புதிய நிர்வாகிகளும்

Image
தேசிய காங்கிரஸின் 10வது பேராளர் மாநாடு இன்று (2014.03.30) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது. இம்மாநாடு இன்று காலை 10.30 மணியளவில் சிரேஷ்ட துணைச் செயலாளர் நாயகம் டாக்டர் ஏ.உதுமாலெப்பை அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனையடுத்து தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களினால் 2014ம் ஆண்டுக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட 15 மீயுயர்பீட உறுப்பினர்களையும் 19 அரசியல் பீடஉறுப்பினர்களையும் மாநாட்டின் எல்லாப் பாகங்களில் இருந்தும் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பேராளர்களின் அங்கீகாரத்துடன் பிரகடனம் செய்தார். மீயுயர் பீடஉறுப்பினர்கள் விபரம் வருமாறு; 01. அமைச்சர். ஏ.எல்.எம். அதாஉல்லா – தலைவர் 02. டாக்டர் ஏ. உதுமாலெப்பை – சிரேஷ்ட துணைச் செயலாளர் நாயகம் 03. ஐ.ஏ. ஹமீட் – பிரதிசெயலாளர் நாயகம் 04. எம்.எச்.ஏ. ஸமட் – உதவிச் செயலாளர் நாயகம் 05. எம்.எஸ். உதுமாலெப்பை – தேசியஅமைப்பாளர் 06. ஜே.எம். வஸீர் – தேசியப் பொருளாளர் 07. ஏ. அகமட் ஸகி – இளைஞர் அமைப்பாளர் 08. பொறியியலாளர். எம்.எஸ். நஸீர் – பணிப்ப

நிந்தவூர் கடற்கரையில் சடலம் மீட்பு

Image
நிந்தவூர் 9 ஆம் பிரிவுக் கடற்கரையில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலம் நிந்தவூர் 11 ஆம் பிரிவைச் சேர்ந்த செய்யது  இப்ராஹிம் முகம்மது பாகிர் (வயது - 39) என்பவரது என்று அவரது குடும்பத்தவர்களால் இனங்காட்டப்பட்டுள்ளது.  குறித்த சடலம் காணப்பட்ட இடத்தில் கிருமிநாசினி போத்தல் காணப்பட்டது என்றும் இது தற்கொலையாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த நபர் முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு ஒன்றுக்காக நேற்று காதி நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி: தெற்கிலும் மேற்கிலுமாக மொத்தம் 85 ஆசனங்கள்

Image
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி: தெற்கிலும் மேற்கிலுமாக மொத்தம் 85 ஆசனங்கள்

மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

Image
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -443,083 ஆசனங்கள்- 18 ஐக்கிய தேசியக்கட்சி -285,538 ஆசனங்கள்- 12 மக்கள் விடுதலை முன்னணி 74,437 ஆசனங்கள்- 03 ஜனநாயக்கட்சி 71,752 ஆசனங்கள் -03 ஜனநாயக மக்கள் முன்னணி ஆசனங்கள் 02 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20 ஒரு ஆசனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்- ஒரு ஆசனம் Name of the Party/Independent Group No. of Votes Received Percentage  % No. of Members Elected United People's Freedom Alliance 1,363,675 53.35 % 56* United National Party 679,682 26.59 % 28 Democratic Party 203,767 7.97 % 9 People's Liberation Front 156,208 6.11 % 6 Democratic Peoples Front 51,000 2.00 % 2 Sri Lanka Muslim Congress 49,515 1.94 % 2 All Ceylon Makkal Congress 15,491 0.61 % 1 Ceylon Worker's Congress (P.Wing) 8,216 0.32 % Jana Setha Peramuna 2,809 0.11 % Eksath Lanka Podujana Pakshaya 2,073 0.08 % Patriotic National Front 1,484 0.06 % Nawa Sama Samaja Party 1,290 0.05 %

தென் மாகாணம் ஐ.ம.சு.மு. வசமானது

Image
தென் மாகாணசபைத் தேர்தலின் இறுதி  முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தென் மாகாணசபையைக் கைப்பற்றியுள்ளது.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாக 699,408 வாக்குகளைப் பெற்று தென் மாகாணத்தில் 31 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.  ஐக்கிய தேசிய கட்சி மொத்தமாக 310,431 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 109,024 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.  முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி 75,532 வாக்குகளை மொத்தமாகப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Name of the Party/Independent Group No. of Votes Received Percentage  % No. of Members Elected United People's Freedom Alliance 699,408 58.06 % 33* United National Party 310,431 25.77 % 14 People's Liberation Front 109,032 9.05 % 5 Democratic Party 75,532 6.27 % 3 Eksath Lanka Podujana Pakshaya 1,623 0.13 % Sri Lanka Muslim Congress 1,419 0.12 % Eksath Lanka Maha Sabha 935 0.

வாக்களிப்பு முடிந்தது, 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும், நள்ளிரவில் முடிவுகள் வெளியாகும்

Image
தென் மற்றும் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. தென், மற்றும் மேல் மாகாணசபைகளுக்கு இன்று காலை 7 மணி தொடக்கம், வாக்களிப்பு இடம்பெற்று வந்தது.  மாலை 4 மணியுடன் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, வாக்குப்பெட்டிகளை முத்திரையிட்டு, வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.  தென் மாகாணசபைக்கு காலி, மாத்தறை, அம்பாந்தாட்டை ஆகிய மாவட்டங்களிலும், மேல் மாகாணசபைக்கு கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு இடம்பெற்றது.  மகிந்த ராஜபக்ச தமது சொந்த ஊரான, மதமுலான டி.ஏ.ராஜபக்ச மகா வித்தியாலயத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.  மேலும், முக்கிய அரசியல் தலைவர்களும் இன்றைய தேர்தலில் வாக்களித்துள்ளனர்.  இரவு 8 மணியளவில், வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டு, நள்ளிரவுக்கு முன்னர் முடிவுகள் தொகுதி ரீதியாக அறிவிக்கப்படும்.  இந்தத் தேர்தலில், சிறிலங்காவின் ஆளும்கட்சி ஜெனிவா தீர்மானத்தை முன்னிறுத்தியே பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தமது பாரியார் சகிதம் வாக்களிப்பு!

Image
  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மெதமுலன டி.ஏ. ராஜபக்‌ஷ வித்தியாலயத்தில் இன்று காலை தமது பாரியார் சகிதம் 7.45 அளிவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகின. இன்று நண்பகல் வரை அமைதியான வாக்களிப்பு நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் கல்முனை சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பிலான விசேட செயலமர்வு!

Image
கல்முனை மாநகர சபையின் சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பிலான விசேட செயலமர்வு ஒன்று ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று (27-03-2014) காலை தொடக்கம் சாய்ந்தமருது சீபிரீஸ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களது நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் கல்முனை மாநகர சபை எதிர்நோக்கும் சுகாதார ரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன. குறிப்பாக தின்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள், விலங்கறுமனை (மாட்டு மடுவம்) நிர்மாணம் மற்றும் பராமரிப்பு, சுகாதாரத் தொழிலாளர்களை வலுவூட்டுதல், சுற்றாடல் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.அப்துல் மஜீத், மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாருக், சுற்றாடல் அதிகார சபையின் கிழக்குப் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ

வாக்குச் சீட்டுகளும் பெட்டிகளும் சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு!

Image
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் இன்று காலை 7 மணி முதல் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். நான்காயிரத்து 253 நிலையங்களில் இம்முறை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 பேர் இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேல் மாகாணத்தில் 420 நிலையங்களிலும், தென் மாகாணத்தில் 188 நிலையங்களிலுமாக மொத்தம் 608  வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கல்முனையில் தேசிய காங்கிரஸ் கட்சியினரின் படங்களுக்கு கறுப்பு மை!

Image
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசல் வீதி நிர்மாணப்பணிக்குரிய பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டிருந்த அவ்வீதி நிர்மாணத்திற்குரியவர்களின் நிழற்படங்கள் இனந்தெரியாத நபர்களினால் மைபூசி அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெரிய வருவதாவது; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்; ‘மஹிந்த சிந்தனை’ எதிர்கால நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்முனைப்  ஸாகிறா கல்லூரி வீதி, கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளி வீதி, கடற்கரைப் பள்ளி வீதி, கடற்கரை வீதி ஆகிய நான்கு வீதிகள்  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் அமைச்சினால் 20 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் அழைப்பின் பேரில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியியோரினால் கடந்த 26ஆம் திகதி புதன் கிழமை மாலை இவ்வீதிகள் திறக்கப்பட்டு  மக்களின் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கப்பட்டன. இவ்வாறு திறந்து