Posts

Showing posts from September, 2011

15 வாகனங்களை மோதி சரக்கு லொறி விபத்து

Image
ஆட்டோவை மோதிவிட்டு தப்பிசென்ற லொறி மீண்டும் விபத்தில் சிக்கியது கல்முனை, அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் மாளிகைக்காடு பிரதேசத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 12 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார் மற்றும் பிக்கப் வாக னம் என்பன சேதத்திற்குள்ளாகியுள்ளன. கல்முனையிலிருந்து அம்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த கென் டைனர் லொறியொன்று பாதையைவிட்டு விலகி மாளிகைக்காடு பிரதேசத்தில் பிரபலமான தேனீர் கடை ஒன்றின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்த 12 மோட்டார் சைக்கிள், ஒரு கார் மற்றும் பிக்கப் வாகனம் என்பனவற்றின் மீது மோதுண்டதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தேனீர் கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருந்ததால் பாரிய உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றப்பட்டதோடு வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த கென்டைனர் வாகனம் பாண்டிருப்பு பிரதேசத்தில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை மோதிவிட்டு மிக வேகமாக அம்பாற

சேனைகுடி கணேசா மாணவிகளுக்கு பாராட்டு

Image
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள சேனை குடி கணேச மகாவித்தியாலயத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த  இருமானவிகளுக்கு கல்லூரி அதிபர் கே.சந்திர லிங்கம் தலைமையில் இன்று பாட சாலையில் பாராட்டு நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் மற்றும் கலாநிதி எம்.ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்களிப்பு இன்று

Image
u எதிர் வரும்  எட்டாம் திகதி  நடை பெறவுள்ள  உள்ளூராட்சி மன்றங்களுக்கான  தபால் மூல  வாக்களிப்பு  தேர்தல் நடை பெறும் அனைத்து    இடங்களிலும் நடை பெற்றது.  இதன் பிரகாரம் கல்முனை  போலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற  தபால் வாக்களிப்பு  இன்று  நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தலைமையில் நடை பெற்றது.  கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  பதினெட்டு  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இன்று  வாக்களித்தனர்.

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சந்திப்பு; கல்முனை அபிவிருத்திக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி

Image
கல்முனை மாநகர பிரதேசங்களை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமும் அக்கட்சியின் கல்முனை மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பரிடம் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றபோதே இவ்வுத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்சந்திப்பின்போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு மிகவும் தேவையானவை என தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ தான் இவற்றுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும், அத்துடன் நகர அபிருத்தி அதிகார சபையினால் கொழும்பு மாநகரத்தில் மேற்

தேசிய காங்கிரசின் தேர்தல் செயலகம் நட்பிட்டிமுனையில் திறந்து வைப்பு

Image
எதிர் வரும் எட்டாம் திகதி நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தேர்தல் செயலகம் நட்பிட்டிமுனையில் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலை சின்னத்தில் 2ஆம் இலக்கத்தில் போட்டி இடும் நற்பிட்டிமுனை அப்துல் கபூர் நௌசாத்  தலைமையில்  செயலகம் திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ்  நற்பிட்டிமுனை மதிய குழு தலைவர் எம்.ஐ.நூர்முகம்மது.,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஐ.எல்.ரவுப்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விசர் நாய் கடியால் வருடாந்தம் 2000 பேர் பாதிப்பு!

Image
இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம் இலங்கையில் வருடாந்தம் 2000 பேர் விசர்நாய்க்கடிக்கு இலக்காகின்றனர்.  விசர் நாய்க்கடிக்கு இலக்காகியவர்களுக்கு சிகிச்சையளிக்கவென அரசு வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. 2016 ஆம் ஆண்டு விசர்நாய்க்கடியினால் ஏற்படும் நீர் வெறுப்பு நோயற்ற நாடாக  இலங்கையை ஆக்குவதே எமது இலக்கு என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. உலக விசர்நாய்க்கடி எதிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை  முன்னிட்டு நாடுமுழுவதும் நோய் ஒழிப்பு தொடர்பாக மக்களுக்கு  தெரிவுபடுத்தும் பல செயற்திட்டங்களை அமைச்சு முன்னெடுத்துள்ளது. சுகாதார அமைச்சிடம் தற்போதுள்ள தரவுகளின்படி இலங்கையில் 30 இலட்சம்  நாய்கள் உள்ளன. வருடாந்தம் 2000 பேர் விசர்நாய்க்கடிக்கு ஆளாகின்றனர்.  வருடாந்தம் 32 பேர் மரணிக்கின்றனர். கொள்கையளவில் நாய்களை கொல்வதில்லை என அரசு தீர்மானித்துள்ள போதும்  நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருகிறது.  சத்திர சிகிச்சை மூலமும்- தடுப்பூசி மூலமும் கருத்தடை செய்யப்படுகிறது. கடந்த எட்டு மாதங்களில் விசர் நாய்க்கட

பள்ளிவாசல் கதீப், முஅத்தின்மார்களின் நலன் பேண விஷேட திட்டம்; நீதி அமைச்சு பரிசீலித்து வருகிறது என்கிறார் ரவூப் ஹக்கீம்

Image
பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கும் இமாம் மற்றும் கதீப் ஆகியோருக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று பற்றியும், பேஷ் இமாம் போன்றோருக்கு நியமனக் கடிதம் வழங்குதல் பற்றியும் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  நம்பிக்கை பொறுப்பு, வக்பு சட்டம் போன்றவற்றில் ஏதோ ஒரு வகையில் அவற்றை உட்புகுத்தி ஓர் ஏற்பாட்டை செய்யலாம். ஆனால் அது பற்றி விரிவாக பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. இவற்றை குறைந்த பட்சம் சட்ட வலுவுள்ள ஒரு ஒழுங்கு விதியாகவாவது நடைமுறையிலுள்ள சட்ட மூலமொன்றில் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

Image
ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதத்தில் உலகவாழ் அனைத்து இந்துக்களாலும்  கொண்டாடப்படும் ஒன்பது நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரி  எனப்படுகின்றது. உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே  நவராத்திரியின் அடிப்படைத் தத்துவமாகும். இந்த நாட்களில் அன்னை ஆதிபரா சக்தியை ஒன்பது நாட்களும் வெவ்வேறு  ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர். அந்தவகையில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைதேவியையும், அடுத்த  மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும்  பூஜித்து விரதமிருந்து வழிபடுதல் மரபாகும் . துர்க்கையை வழிபடுவதால் வீரமும், மகாலக்ஷ்மியை வழிபடுவதால் செல்வமும்,  சரஸ்வதியை வணங்குவதால் கல்வியும், அறிவும் நம்மை வந்து பேரும் என்பது ஐதீகம். மகிஷன் எனும் அசூரனை அழிக்க துர்க்கா தேவி ஒன்பது நாள் விரதம் இருந்து  ஆயுதபூஜை செய்து பத்தாம் நாள் அன்னை தனது மென்மையான கரங்களில் வாள்  ஏந்தி போர் முனையில் மகிஷாசூரனை அழித்து வெற்றிவாகை சூடினால் என நவராத்திரி  தொடர்பிலான வராலாற்றுக் கதைகள் கூறுகின்றன. தேவி விரதம் இருந்த ஒன்பது தினங்கள் நவராத்திரி எனவும் அசுரனை வென்ற பத்மாம் நாள்  வி

வேலையற்ற பட்டதாரிகள் மருதமுனையில் போராட்டம்

Image
மருதமுனையைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். மருதமுனை உள்வாரி பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மருதமுனை மக்கள் மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதியில் பட்டதாரிகள், ஜனாதிபதிக்கு முகவரியிட்ட மகஜர்களை தபாலிடடனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வாரா? - முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளா சவால்.

Image
கல்முனை   மாநகர   சபைத்தோ்தலில்   ஸ்ரீ   லங்கா   முஸ்லிம்   காங்கிரஸ்    வெற்றி   பெற்றால்   கிழக்கு மாகாண   சுகாதார   அமைச்சா்   எம் . எஸ் . சுபைர்     தனது   கிழக்கு   மாகாண   சுகாதார   அமைச்சுப் பதவியை   இராஜினாமா   செய்வாரா ?   என   கல்முனை   மாநகரசபை   ஸ்ரீ   லங்கா   முஸ்லிம்   காங்கிரஸ் வேட்பாளா்   சிராஸ்   மீராசாஹிப்    சவால்   விடுத்துள்ளார் . கல்முனை   மாநகர   சபை   தோ்தலில்   போட்டியிடும்   ஐக்கிய   மக்கள்   சுதந்திரக்   கூட்டமைப்பு வேட்பாளர்களை   ஆதரித்து   அண்மையில்   இடம்   பெற்ற   தோ்தல்   பிரசாரக்   கூட்டமொன்றில் கல்முனை   மாநகர   சபையை    ஸ்ரீலங்கா   முஸ்லிம்   காங்கிரஸ்   மீண்டும்    கைப்பற்றமாட்டாது . கைப்பற்றுவதற்கு   நாங்கள்   விடமாட்டோம்   என   அமைச்சா்   சுபைர்    கூறிய   கருத்திற்கு   கல்முனை மாநகர   சபை   வேட்பாளா்   ஸ்ரீ   லங்கா   முஸ்லிம்   காங்கிரஸ்   வேட்பாளர்   கலாநிதி   சிராஸ்   மீராசாஹிப்  ” மாறாக   கல்முனை   மாநகர   சபைத்தோ்தலில்   ஸ்ரீலங்கா   முஸ்லிம்   காங்கிரஸ்     வெற்றி   பெற்றால் கிழக்கு   மாகாண   சுகாதார   அமைச்சா்   சுப

தபால் மூல வாக்கெடுப்பு நாளையும் நாளை மறுதினமும்

Image
23 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு  நாளையும்(29) நாளை மறுதினமும்(30) இடம்பெறவுள்ளது. 17 மாநகர சபை, 1 நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகள் உட்பட்ட 23  உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பே இவ்வாறு இடம்பெறவுள்ளது. தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர்  அட்டைகள் கடந்த 9ம் திகதி முதல் 21ம் திகதி வரை விநியோகிப்பட்டன. இதன்படி தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அரச ஊழியர்கள்  நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்கலாம். குறித்த 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் வாக்கெடுப்பு  ஒக்டோபர் 8 ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Viewer Comments

காங்கிரஸ் இல்லையென்றால்

Image
= yq;fh K];ypk; fhq;fpu]; vd;id Ntl;ghsuhf mq;fPfupf;ftpy;iy. ,jdhNyNa ehd; If;fpa Njrpa fl;rpapy; Ntl;ghsuhfg; Nghl;bapLfpd;Nwd; vd fy;Kid khefu rig Ntl;ghsh; gsPy; ryPk; njuptpj;jhh;. K];ypk; fhq;fpu]; fl;rp K];ypk;fspd; cupikf;Fuy; vd;w epiyapy; jhq;fs; If;fpa Njrpa fl;rpapy; Nghl;bapLtjd; Nehf;fk; vd;d? vd vOg;gpa Nfs;tpnahd;Wf;F gjpyspj;J ciuahw;Wk;NghNj mth; Nkw;fz;lthW njuptpj;jhh;. mth; njhlh;e;Jk; fUj;J njuptpf;ifapy;> kpf ePz;l fhyk; If;fpa Njrpa fl;rpapy; ,Ue;j ehk; kh;`{k; m];uGld; ,ize;J nraw;gl;L te;Njhk;. jiytupd; kiwTf;Fg; gpwF Ngupay; mk;ikahUf;F MjuT toq;fp te;Njhk;. fle;j 2005k; Mz;L [dhjpgjp Njh;jypy; rha;e;jkUJ gFjpapy; xU $l;lk; $l itf;f Kbahky; ,Ue;j Ntisapy;> ngUk; rthy;fSf;F kj;jpapy; $l;lk; itj;J [dhjpgjpapd; ntw;wpapy; gq;nfLj;Njhk;. ,e;epiyapy>; vkJ Mjuthsh;fs;> cwtpdh;fspd; Ntz;LNfhspd;gb K];ypk; fhq;fpu]py; Nfl;f vj;jdpj;J fl;rpj; jiyikAld; 1 kzp Neuk; NgrpNdhk;. cs;Sh; murpay;thjpfs; mjid vjph;f;fpwhh;fs; vd;W $wp kWj;Jiuf;fg;gl;l

வறிய மாணவர்களுக்கு சிசுதிரிய புலமை பரிசு

Image
கல்முனை பிர தேச செயலக பிரிவில் இனம் காணப்பட்ட கல்வி கற்க்கும் வறிய மாணவர்கள் முப்பது பேருக்கு கல்முனை பிர தேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் நேற்று புலமை பரிசு வழங்கப் பட்டது.   சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாதின்   வலி காட்டலுடன் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர். ஸாலிஹ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை  பிர தேச செயலாளர் ரத்ன தீப எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து தெரிவு செயப்பட்ட மாணவர்களுக்கு புலமை பரிசு சான்றுகளை வழங்கி வைத்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ச கல்முனைக்கு விஜயம்

Image
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்ச அம்பாறை, கல்முனை, சாய்ந்தமருது பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்தார். கல்முனை மாநகர சபை தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்திலும் மற்றும் சில நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவதற்காகவே அவர் இங்கு விஜயம் செய்திருந்தார். சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில் அமைச்சர் விஷேட உரை நிகழ்த்தினார். வேட்பாளர் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் மஹிந்த சிந்தனையின் கீழ் ஜனசெவன தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் வசதிகளற்ற 100 குடும்பங்களுக்கு வீட்டு கடன் மற்றும் 60 பேருக்கு வீட்டு உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விமல் வீரவன்சவுடன்

சாதனைக்கு என் தந்தைதான் காரணம்

Image
வெளி ரியுசன் வகுப்புகள் எதற்கும் சென்று கல்வி கற்காமல்தான் நான் அல்லாஹ்வின் அருளால்  சித்தியடைந்தேன் என கல்முனை கல்வி  வலயத்திற்கு உட்பட்ட நிந்தவூர்  அல்.அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவன்   முஹம்மட் முர்சித் ஆத்திப் புலமைப்பரிசில்  பரிட்சையில்  192  புள்ளிகளைப்பெற்று கிழக்கு  மாகாணத்தில் முதலாமிடத்தையும் தேசிய  மட்டத்தில் நான்காமிடத்தையும் பெற்று சாதணை  படைத்தவர  தெரிவித்தார்.     அப்துல் றஹிம் ஹம்ஸத் தம்பதியரின் மூன்றாவது  புதல்வரான இவர மேலும் கூறுகையில்…………………………………………………… ………………………………………. நான் பாடசாலையில் எனது ஆசிரியர்கள் கற்றுத்  தருவதை வீட்டிலும் எனது தந்தையின் வழிகாட்டலில்  கற்றதோடு அதிக பயிற்சிகளையும் மீட்டல்களையும்  செய்து வந்தேன். எந்தவொரு வெளி மேலதிக ரியுஸன்  வகுப்புகளை நான் நாடவுமில்லை அதற்குச் செல்லவும்  இல்லை. ஆனால் எனது தந்தையின் வழிகாட்டல்  பாடசாலையில் ஆசிரியர களிடமிருந்து கிடைப்பது  போன்று கிடைத்தமைக்கு நான் பெறுமையடைகிறேன். எனது சக நண்பா்களும் பல ரியுஸன் வகுப்புக்கச்  செல்வதாகவும் என்னையும் வரும்படியும் அழைத்த  போதிலும

கல்முனையில் கடலரிப்பு மக்கள் அச்சம்

Image
கல்முனை பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.இதனால பல சேதங்களும  ஏற்ப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக கரையில் இருந்து பதினைந்து மீட்டார் தூரத்திற்கு கிராமப்பக்கம் கடல் நீர் புகுந்து பல அழிவுகளை ஏற்படுத்தி  உள்ளது.

தேர்தல்கள் தொடர்பில் 75 பேர் கைது: 64 முறைப்பாடுகள்

Image
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற  வன்முறைச் சம்பவங்களிடன் தொடர்புடைய 75 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட  பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.  மேலும், இவர்களில் அனேகமானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அத்தோடு தேர்தல் செயலகத்திலிருந்து தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான 64 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 10 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.