பள்ளிவாசல் கதீப், முஅத்தின்மார்களின் நலன் பேண விஷேட திட்டம்; நீதி அமைச்சு பரிசீலித்து வருகிறது என்கிறார் ரவூப் ஹக்கீம்
பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கும் இமாம் மற்றும் கதீப் ஆகியோருக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று பற்றியும், பேஷ் இமாம் போன்றோருக்கு நியமனக் கடிதம் வழங்குதல் பற்றியும் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கை பொறுப்பு, வக்பு சட்டம் போன்றவற்றில் ஏதோ ஒரு வகையில் அவற்றை உட்புகுத்தி ஓர் ஏற்பாட்டை செய்யலாம். ஆனால் அது பற்றி விரிவாக பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. இவற்றை குறைந்த பட்சம் சட்ட வலுவுள்ள ஒரு ஒழுங்கு விதியாகவாவது நடைமுறையிலுள்ள சட்ட மூலமொன்றில் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
Comments
Post a Comment