Posts

Showing posts with the label அபிவிருத்தி

“ஐ-ரோட்” திட்ட வீதிகளை துரிதமாக செப்பனிடுமாறு

Image
கிழக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் “ஐ-ரோட்” வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணிகளை துரிதப்படுத்துமாறும், குறிப்பாக காத்தான்குடி டீன் வீதி, மத்திய வீதி மற்றும் முகைதீன் பள்ளிவாசல் வீதி  ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடுமாறும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இருந்த போது குறித்த அமைச்சின் “ஐ-ரோட்” வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகளை உள்ளடக்கியிருந்ததோடு அதற்கான நிதியினை கொந்தராத்து நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்திருந்தார்.  ஆட்சி மாறியுள்ள இந்நிலையில் குறித்த வேலைத்திட்டங்களை விடயப்பரப்புக்க

காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஆண்கள் சிகிச்சை விடுதி திறப்பு

Image
காத்தான்குடி தளவைத்தியசாலையில் அமைக்கப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது மட்டக்களப்பு காத்தான்குடி தளவைத்தியசாலையில் அவசியத் தேவையாக காணப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி பாத்திமா பௌண்டேசனின் அணுசரணையில் அமைக்கப்பட்டு இன்று பொது நோயாளிகளின் பயண்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. காத்தான்குடி தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று இவ் வைத்தியப்பிரிவினை திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பாத்திமா பௌன்டேசனின் பணிப்பாளர் சஹாப்தீன் இக்ராம் சமூக செயற்பாட்டாளர் பிரோஸ் நவாஸ் ,வைத்திய அதிகாரிகள் ,உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு காத்தான்குடி தளவைத்தியசாலையினால் அவரின் சேவைகளைப்பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் செல்வவெளி விவசாய அமைப்புடனான கலந்துரையாடல்

Image
(அகமட் எஸ். முகைடீன்) பொத்துவில் செல்வவெளி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் செல்வவெளி விவசாய அமைப்புடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (11) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.எம். அஹமட் நசீல், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக், எம்.எச். கியாஸ், ஏ.எல். ஜுனைதா உம்மா, எஸ்.ரி. சபூறா உம்மா, எஸ். பகூர்டீன் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். ஜனூஸ், சட்டத்தரணி எம்.சி. பைசல், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் இளைஞர் அமைப்பாளர் பி. பசூர்கான், செல்வவெளி விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  செல்வவெளி விவசாய காணி அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள

கல்முனையில் சொப்பிங் மோல் அமைக்கும் திட்டத்திற்கான வரைபட தயாரிப்பு தொடர்பான கள விஜயம்

Image
(அகமட் எஸ். முகைடீன்)       கல்முனை மாநகரத்தில் நான்கு தளங்களைக் கொண்ட சொப்பிங் மோல் அமைக்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் திட்டத்திற்கான வரைபட தயாரிப்பு தொடர்பான கள விஜயமும் கலந்துரையாடலும் இன்று (11) வெள்ளிக்கிழமை கல்முனை பொதுநூலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனத்தின் (சி.ஈ.சி.பி) பொறியியலாளர் எம்.ஏ.எம். றிஸ்கான் உள்ளிட்ட பொறியியலாளர்கள் உள்ளிட்ட கட்டட வடிவமைப்பாளர்கள் குழு மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், கணக்காளர் ஏ.எச். தஸ்தீக், கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்முனை பொதுநூலக அமைவிடத்தில் சொப்பிங் மோல் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. தற்போதுள்ள பொதுநூலக கட்டடத்தை தரைமட்டமாக்கிவிட்டு அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை உள்ளடக்கியதாக குறித்த சொ

இராஜாங்க அமைச்சரின் அதிரடி நடவடிக்கையினால் கல்முனை மாநகர சபைக்கு 31 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன எல்.ஈ.டி தெருமின்விளக்குகள் அன்பளிப்பு.

Image
(அகமட் எஸ். முகைடீன்)   கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீபினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் கல்முனை நகரை ஒளியூட்டும் செயற்திட்டத்திற்கு தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனம் 31 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்குகளை கல்முனை மாநகர சபைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.  மிகக் குறைந்த மின் நுகர்வினைக் கொன்ட இந்த நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்குகள் இலங்கையில் முதன் முதலாக கல்முனையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்தெருமின் விளக்குகள் அங்கீகரிக்கப்பட்டவர்களின் செல்லிடத் தொலைபேசி ஊடக இதன் இயக்கப்பாட்டை செயற்படுத்தக் கூடிய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும்.  அன்பளிப்புச் செய்யப்பட்ட இத்தெருமின் விளக்குகளை பொருத்தும் பணி கொரிய நாட்டிலிருந்து வருகைதந்துள்ள பொறியியலாளர்களின் கண்காணிப்பில் இன்று (9)

கல்முனையில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த 02 டம்ப் ட்ரக் கொள்வனவு

Image
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்காக மாநகர சபையினால் இரண்டு Dump Truck (டம்ப் ட்ரக்) கனரக வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக சபையின் சொந்த நிதியில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா எட்டு இலட்சம் ரூபா செலவில் இவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஒரு சில தினங்களில் இவை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் முதல்வர் செயலகம் தெரிவித்துள்ளது. திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற பாரிய சவாலை வெற்றி கொண்டு, விணைத்திறன் மிக்க சேவையை முன்னெடுக்கும் பொருட்டு, முதல்வர் பதவியை பொறுப்பேற்றது தொடக்கம் அவர் மேற்கொண்டு வருகின்ற மூலோபாய திட்டத்தின் முதற் கட்டமாகவே இவ்விரு வாகனங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 04 கியூப் அளவு கொண்ட இந்த ஒரு டம்ப் ட்ரக் லொறியில் ஒரு தடவையில் எட்டு தொண் குப்பைகளை சேகரிக்க முடியும் எனவும் இவை நீண்ட தூரம் சென்று குப்பைகளை கொட்டுவதற

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

Image
(அகமட் எஸ். முகைடீன்)   கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நேற்று (8) செவ்வாய்க்கிழமை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.   இவ்வுயர்மட்ட கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப நகரங்கள் திட்டத்தின் ஆலோசகர் செட்டி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.பி.ஏ.பி. பொறலஸ்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் கருத்திட்டங்களுக்கான மேலதிகச் செயலாளர் எம்.எம். நயிமுடீன், இலங்கை நிர்வாக சேவையில் ஓய்வு பெற்ற உத்தியோகத்தரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான அப்துல் மஜீட், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார் ஆகியோர் கலந்துகொண்டனர்.   இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுடைய அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி ம

கல்முனை தமிழ் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Image
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் கல்முனை தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (30) இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான நடராசா நந்தினி, ஏ.ஆர். செலஸ்டினா, கே. புவனேஸ்வரி, சுமித்ரா ஜெகதீசன்  ஆகியோர் கலந்துகொண்டனர். இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி தமிழ் பிரதேசங்களில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் அபிவிருத்திப் பணிகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்தவகையில் கல்முனை தமிழ் பிரதேசத்தின் அபிவிருத்தி தேவைப்பாடுகளை இனங்கான வேண்டியுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவ்வபிவிருத்திகளை இனம்காண்பதற்காகவும் அவற்றை சிறப்பாக செயற்படுத்துவதற்காகவும் குழு ஒன்றை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  அதற்கமைவாக கோவில் தர்ம கர்தாக்கள், கல்விமான்கள் மற்றும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளான கல்முனை ம

கல்முனை மாநகர சபை உறுப்பினர் அ .விஜயரத்னத்தின் முயற்ச்சியில் பாண்டிருப்பில் நூலகம்

Image
தேசிய ஒருமைப்பாடு அரசகரும  மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின்  நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தில் பாண்டிருப்பு பொது நூலகத்துக்கான அடிக்கல்  நடு வைபவம் நேற்று முன்தினம் (30) மறுமலர்ச்சி சனசமூக நிலைய தலைவர் பா.செ .புவிராஜா தலைமையில் நடை பெற்றது  அதிதிகள் வரவேற்கப்படுவதையும் பிரதம அதி கல்முனை மாநகர சபை உறுப்பினர் அ .விஜயரத்னம் கல்முனை உதவிப் பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜ்  ஆகியோர்  உட்பட  அதிதிகள் அடிக்கல்  நடுவதையும் கலந்துகொண்டவர்களையும்  காணலாம்

பாண்டிருப்பு கடற்கரை வீதிக்கான அடிக்கல் நாட்டு விழா

Image
(அகமட் எஸ். முகைடீன்) நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் 86 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு கடற்கரை வீதி அபிவிருத்திப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீ. புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ;ட சட்டத்தரணி ஏ.ம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், பொறியியலாளர் ரீ. சர்வானந்தன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ; உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

கல்முனை மாநகரத்தை ஒளியூட்டும் செயற்திட்டம் திறந்துவைப்பு

Image
(அகமட் எஸ். முகைடீன், ஜபீர்)   இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதான வீதியில் பொருத்தப்பட்ட நவீன தெருமின்விளக்கு தொகுதியினை மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து குறித்த தெருமின்விளக்கு தொகுதியினை ஒளியூட்டி திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக பதவியேற்ற ரவூப் ஹக்கீமையும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எச்.எம்.எம். ஹரீஸையும் வரவேற்கும் முகமாக கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவட்டத்திலிருந்து கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற 'எழுச்சிபெற்று எழுவோம்' எனும் தொணிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்ட மேடைக்கு அவர்களை ஊர்வலமாக பெருந

இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அபிவிருத்திப் பணிகள் அம்பாறையில் ஆரம்பம்

Image
(அகமட் எஸ்.முகைடீன், றியாத் ஏ. மஜீத்)  குடுவிலில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட காணியினை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸினால் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குடுவில் அமைப்பாளர் எம். சுபைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெமீல் காரியப்பர், எம். முஸ்மி, எம். நைசர், நிர்மலா மற்றும் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் யூ.கே. ஜபீர் மௌலவி உள்ளிட்ட பிரதேசவாசிகள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்தபோது அவரின் பணிப்புரைக்கு அமைவாக அவ்வமைச்சின் கீழுள்ள இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபன இறக்காம தொழிற்சாலைக்கு சொந்தமான குடுவில் பிரதேசத்திலுள்ள 4 ஏக்கர் காணி அப்பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வழங்கப்பட்டது.  அக்காணியின் பற்றைகளை சுத்தம் செய்யும்

சாய்ந்தமருதில் திரிஷ பியச வீடமைப்பு புதிய பணிப்பாளர் பயனாளிக்கு வழங்கி வைப்பு

Image
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில்  பெற்றோரை இழந்த யுவதி ஒருவருக்கு  திரிஷ பியச வீடமைப்பு திட்டத்தின்கீழ்  நிர்மாணிக்கப்பட்ட  வீடு கையளிக்கும் நிகழ்வு சமீபத்தில்  இடம் பெற்றது . சாய்ந்தமருது சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளரின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளரின் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில்  அம்பாறை மாவட்ட  சமுர்த்தி பணிப்பாளர் MSM.சப்றாஸ்  கலந்து கொண்டு  பெற்றோரை இழந்த யுவதிக்கு நிர்மாணிக்கப்பட்ட வீட்டைக் கையளித்தார் . நிகழ்வில்  சமுர்த்தி அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் 

ஐந்தாவது தடவையாகவும் நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க கல்முனை மக்களுக்கு வழங்கிய கடலை நிரப்பியேனும் கல்முனையை பாரிய அபிவிருத்தி செய்வேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா?

சமுர்த்தி வெற்றியாளர்களுக்கு சாய்ந்தமருதில் காசோலை கையளிப்பு

Image
சாய்ந்தமருது பிரதேசத்தில்  சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கிடையிலான  சமுர்த்தி  வீட்டு  சீட்டிழுப்பில்  வெற்றிபெற்றவர்களுக்கான  காசோலை கையளிக்கும்  நிகழ்வு  சமீபத்தில்  சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்  தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். ஸாலிஹ் தலைமையில்  நடை பெற்றது.  வெற்றியாளர்கள் இருவர்களுக்கான தலா 200000/- பெறுமதியான காசோலைகளை   சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம் .றிகாஸ்  வழங்கி  வைத்தார்