பொத்துவில் செல்வவெளி விவசாய அமைப்புடனான கலந்துரையாடல்
பொத்துவில் செல்வவெளி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் செல்வவெளி விவசாய அமைப்புடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (11) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ.எம். அஹமட் நசீல், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக், எம்.எச். கியாஸ், ஏ.எல். ஜுனைதா உம்மா, எஸ்.ரி. சபூறா உம்மா, எஸ். பகூர்டீன் மற்றும் பொத்துவில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். ஜனூஸ், சட்டத்தரணி எம்.சி. பைசல், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் இளைஞர் அமைப்பாளர் பி. பசூர்கான், செல்வவெளி விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செல்வவெளி விவசாய காணி அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள குளக்கட்டுக்கள் மற்றும் பாலங்கள் சிதைவடைந்;துள்ளதால் விவசாயிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவது தொடர்பில் இதன்போது இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து அக்குளக் கட்டுக்களையும் பாலங்களையும் புனரமைத்துத் தருவதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உறுதியளித்தார்.
Comments
Post a Comment