Posts

Showing posts from February, 2014

8வயது பாலகிக்கு 53 கிழவனால் பாலியல் துன்புறுத்தல்

Image
53 வயது முதியவரால்  8வயது சிறுமி  பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்ட சம்பவம் கல்முனை பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலை ஒன்றில் சிகிச்சைக்குட்படுதப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் நேற்று  கல்முனையில் இடம் பெற்றுள்ளது . பாலியல் குற்றம் புரிந்தவர் என்ற சந்தேகத்தில் 53 வயதான அந்த முதியவர் கல்முனை பொலிசாரினால்  கைது செய்யப்பட்டு விச்சாரணையின் பின்னர் இன்று  வியாழக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கல்முனை மாநகர சபையில் சுகாதார தொழிலாளியாக பணி  புரிகின்றவர் என தெரிவிக்கப் பட்டுள்ளது

.கல்முனையில் புதிய நிருவாகிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் வாழ்த்து

Image
கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக கடமையேற்றுள்ள ஐ.எம்.ஹனீபா அவர்களுக்கு திகாமடுல்ல  மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்  கல்முனைத் தேர்தல் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, எமது பிரதேச அபிவிருத்தியிலும் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதிலும் அதிக அக்கறை கொண்டு செயற்படுவர் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா. இவர் கல்முனை மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் முழு அர்ப்பணிவுடன் செயற்படுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள டாக்டர் ஏ.எல் அலாவுதீன் அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கல்முனை கரையோர மாவட்ட பிரதேச சுகாதார மேன்பாட்டுக்காக இவர் செயற்படுவார் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. என்னால் கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இவ்வ

தபால் வாக்காளர்களுக்கு நாளை மறுதினம் வாக்காளர் அட்டை விநியோகம்

Image
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் நாளை மறுதினம் 28ஆம் திகதி விநியோகிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு மார்ச் 13ஆம், 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. 125,000 அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இம்முறை தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி மார்ச் முதலாம் திகதி வரை நீடிப்பு!

Image
குளியாப்பிட்டியில் மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக்கண்காட்சி மேலும் இரண்டு நா ட் களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 27ம் திகதியுடன் நிறைவு பெறவிருந்த தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி மார்ச் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள், விஷேடமாக பாடசாலை மாணவ மாணவிகளின் வேண்டுகோளை அடுத்தே, தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக்கண்காட்சியை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஊடக சங்கமம்

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  ஊடக சங்கமம் ஓன்று கூடல் நிகழ்ச்சி எதிர்வரும் 01.03.2014  சனிக்கிழமை  காலை 8.00 மணிக்கு மருதமுனை அல் -மதீனா வித்தியாலயத்தில்  நடை பெறவுள்ளது. கடந்த 2013.12.01 ஆந்திகதி நடை பெறவிருந்த  இந்த நிகழ்வு கல்விப் பொது தராதர பரீட்சை காரணமாக பிற்போடப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம்  மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில்  இடம் பெரும் நிகழ்வில் ஊடக குடும்பத்தவர்களின் விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள் நடை பெறவுள்ளன . அன்றைய தினம் சம்மேளனத்தின் மாதாந்த கூட்டம் மு.ப.11.00 மணி முதல் 12.00 மணி வரை நடை பெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் ஐ.எல்.எம். ரிஸான்  தெரிவித்துள்ளார் . சங்கம நிகழ்வில் காலை உணவு ,மதிய உணவு, இருநேர தேநீர் உபசரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஊடக சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் தங்களது குடும்பத்தவர்களின் விபரங்களை சம்மேளன பொருளாளர் பீ.எம்.எம்.ஏ.காதரிடம் 0772612095 இலக்க  தொலை பேசி மூலம் உறுதிப் படுத்திக் கொள்ளுமாறு சம்மேளனத்தின் செயலாளர் ரிஸான்  கேட்டுள்ளார்.

சாய்ந்தமருது கடற்கரையில் மர்மப் பொருள்

Image
சாய்ந்தமருது கடற்கரையில் (பௌசி மைதானம் அருகில்) இன்று காலை மர்மப் பொருள் ஒன்று மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது. சிலிண்டர் வடிவில் காணப்பட்ட குறித்த பொருளின்மூடியின் உட்பாகத்தில் அடைக்கப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டு காணப்பட்டதனால் இது ஒரு வெடிக்கும் பொருளாக இருக்கலாமென சந்தேகித்த மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கல்முனை பொலிசாரும், மருதமுனை  விசேட அதிரடிப்படையினரும் குறித்த பொருள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

தொழில் நுட்ப சமுக சீர்கேடு

Image
அறிவாற்றலை அபிவிருத்தி செய்யப் பயன் படுத்தப்படுகின்ற தகவல் தொழில் நுட்பம் உயிரை மாய்க்கின்ற சாதனமாகவூம் கொள்ளை கொலைக்கான ஆயூதங்களாகவூம் பயன் படுத்தப்படுவது கவலை தருவதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தெரிவித்தார். நாட்டில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தும் வகையில் சிவில் பாதுகாப்பு குழுக்களை உசார் நிலையில் வைத்திருப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில் கல்முனை பொலிஸ் பிரிவூக்குட்பட்ட  கல்முனைஇசாய்ந்தமருதுஇகல்முனைக் குடிஇநற்பிட்டிமுனை இசேனைக் குடியிருப்பு இபாண்டிருப்புஇ மருதமுனை இபெரியநீலாவணை கிராமங்களில்  இயங்கும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வூ இன்று 25.02.2014 கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் பொலிஸ் நிலையத்தில் நடை பெற்றது. அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பிள்ளைகளை வழிகெடுப்பதில் பெற்றௌரின் பங்கு அதிகம் காணப்படுகிறது. பிள்ளைகளுக்கு கையடக்க தொலைபேசியை பெற்றௌரே கொடுக்கின்றனர் அதன் மூலம் பிள்ளைகள் தவறான வழியை சென்றடைந்த பின்னர் கவலை படுவதில் அர

மரம் வீழ்ந்து குடும்பஸ்தர் பலி

Image
கல்முனயிலிருந்து மகியங்கணைக்கு  சென்ற  தொழில் நுட்ப உத்தியோகத்தர்  பயணித்த மோட்டார் சைகள் மீது மரம் வீழ்ந்து ஸ்தலத்தில் மரணமான சம்பவம்   இன்று பகல் மகியங்கன  சேரன்கட எனும் இலத்தில் இடம்   பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியானவர் காரை தீவை பிறப்பிடமாகவும் நட்பிட்டிமுனயை வசிப்பிடமாகவும் கொண்ட மகியங்கன வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமைக்கு சென்ற நாகராஜா சதீஸ் குமார் (35)ஆகும் . கல்முனையில் இருந்து மகியங்கணை  அலுவலகத்துக்கு ep -MF -1781 இலக்க  மோட்டார் சைக்களில்  சென்று கொண்டிருந்த போது  பதியத்தலாவ சேரன்கட  எனும் இடத்தில்  வீதி அருகில் இருந்த பாரிய மரம் சரிந்து வீழ்ந்து மோட்டார்  சிகளில் சென்றவர்களை நசிக்கயுள்ளது  மரத்துக்குள் அகப்பட்ட தொழில் நுட்ப உத்தியோகத்தர் அவ்விடத்திலேயே உயிர் இழந்துள்ளார் . இவருடன் பயணித்த மயில்  கிருஷ்ணமூர்த்தி  தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் . வீதியில் வீழ்ந்த மரத்தை அப்புறப்படுத்தி வீதி  போக்குவரத்தை சீர் செய் வதற்கு ஒருமனிதியாலதுக்கும் அதிகமான நேரம் கழிந்தது சம்பவம் தொடர்பாக பதியத்தலாவ பொலிசார் விசாரணை செய்கின்றனர்

வட கிழக்கு காணி பிரச்சினைகளுக்கு மத்தியஸ்த குழு!

Image
வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நீதியமைச்சு ஒரு விசேட காணி மத்தியஸ்த குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதனூடாக காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும் என குறிப்பிட்ட நீதியமைச்சரும் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் , இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதற்கு ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் முன் வந்திருப்பதாகவும் கூறினார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் சட்ட அமுலாக்கம் , நீதியைப் பெறும் வழிமுறைகள் மற்றும் சமூக இணைப்பைப் பலப்படுத்தல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு  சர்வதேச தொடர்புகளுக்கும் உபாயங்களுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெற்றது.  அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் உரையாற் றுகையில் கூறியதாவது:      நாட்டில் செயற்திறன் மிக்கதும் , பாரபட்சமற்றதும் சகல சமூகத்தினருக்கும் பயன்தரத்தக்கதுமான நீதி முறைமையை நடைமுறைப்படுத்துவதில்  கூடுதல் கரிசனை செலுத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின

'524376' என்ற இலக்கத்தை கொண்ட 500 ரூபா எனின் உடன் தெரிவியுங்கள்

Image
பியகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 500 ரூபா பெறுமதியான 530 போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடம் விசாரணை மேற்கொண்டவேளை சுமார் 9 லட்சம் ரூபா பெறுமதியான 1800 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 524376 என்ற இலக்கத்தை கொண்ட நாணயத்தாள் கிடைக்கும் பட்சத்தில் அதனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (21) மாலை இடம்பெற்ற சுற்றிவளைப்பின்போது சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் ஜனாதிபதிக்கு எதிராக ‘காகிதக் குண்டு’

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள நிகழ்வொன்றில் குண்டு வெடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட கடிதம் போலியானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத் ரோஹண தெரிவித்துள்ளார் .  ஜனாதிபதியின் தலைமையில்  புத்தளம் ஷாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூட்டம் திறக்கும் நிகழ்வில் குண்டு வெடிக்கவுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு தமிழ் மாணவன் ஒருவனின் பெயரில் நேற்று (21) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இது குறித்த மாணவனை வம்பில் மாட்டிவிடும் நோக்கில் எழுதப் பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் . அதேவேளை இது சில மாணவர்களை மத்தியில் நிலவிய தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கடிதம் எழுதப் பட்டிருகிறது என குறித்த பாடசாலையின் ஏனைய மாணவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். குறித்த கடிதத்தை மதுரங்குளி, கடயாமோட்ட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 13இல் கல்வி  பயிலும் சக மூன்று மாணவர்கள்  எழுதிருக்கலாம்  எனவும்  பொலிசார் சந்தேகிக்கின்றனர்.எனினும் இந்த மாணவர்கள் தமது வீடுகளில் இல்லாமையால்   மேலதிக விசாரணைகளை பொல

கல்முனை பிராந்தியத்தில் கலாநிதி ஏ. எல். அலாவுதீன் வருகை சுகாதார துறைக்கு இனி பொற்காலம்

Image
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, கிழக்கு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியக் கலாநிதி ஏ. எல். அலாவுதீன்   அவர்கள் 21. 02. 2014 வெள்ளிக்கிழமையன்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது இடமாற்றத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.  அக்கரைப்பற்றைப்; பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதில் திருமணமும் முடித்துள்ள இவர,; பல்வைத்திய நிபுணராக தனது கடமையை ஆரம்பித்து, தனது அயராத முயற்சியினால் இந்த நிலையை எட்டியுள்ளார். அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய பல்வைத்திய நிபுணராக கடமையாற்றிய இவர், சுகாதார நிருவாக சேவைக்குள் நுழைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகராக தனது நிருவாக சேவையை திறம்பட வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதிக்குள் இவர் சிறிது காலம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தற்காலிக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இடமாற்றத்தை வரவேற

18ஆவது சார்க் மாநாடு நேபாளில்

Image
18ஆவது சார்க் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் நேபாளில் நடைபெறவுள்ளது. மாலைதீவில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் 35ஆவது மாநாட்டில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் இலங்கை - இந்தியா- பங்களாதேஷ்- பூட்டான்- மாலைதீவு- பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் நேபாள பிரதிநிதிகள் குழுவுக்கு சங்கர் தாஸ் பயராஹி தலைமைத் தாங்கினார். வர்த்தகம்- முதலீடு- வறுமையை ஒழித்தல்- எரிசக்தி- உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக இந்த வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. 2014 மார்ச் முதலாம் திகதி தொடக்கம் மூன்று வருடங்களுக்கு சார்க் பொதுச்செயலாளராக நேபாள் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் அர்ஜூன் பகதூரை நியமிக்க இம்மாநாட்டில் அனுமதி வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களின் தலைமையில் 8வது ‘தேசத்திற்கு மகுடம்’ தேசிய அபிவிருத்தி கண்காட்சி நேற்று மாலை குளியாபிட்டியில் கோலாகலமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Image

இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனுடன் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் பேச்சுவார்த்தை

Image
அகமட் எஸ். முகைடீன்; கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய பிரதி முதல்வரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது சமகால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மெற்றோபொலிடன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களை பட்டப்படிப்பின் இறுதி ஆண்டிற்காக மலேசிய நாட்டு பல்கலைக் கழகங்களில் இணைப்பது என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் விலங்குகள் அறுக்கும் செயற்பாட்டை வழமை போன்று முன்னெடுக்க முடியும்

Image
முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர்     அம்பாறை மாவட்டத்தில் விலங்குகளை அடுத்த மூன்று மாத காலத்திற்கு அறுக்க முடியாது என தடை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக  இன்று 21.02.2014 வெள்ளிக்கிழமை வதந்தி பரப்பப்பட்டது. இதனால்  இன்று இறைசிக் கடைகள் வழமைக்கு மாறாக தாமதித்தே திறக்கப் பட்டன . அம்பாறை மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை அடுத்த மூன்று மாத காலத்திற்கு அறுக்க முடியாது என தடை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபை எல்லைக்குள் விலங்குகள் அறுக்கும் செயற்பாட்டை வழமை போன்று முன்னெடுக்க முடியும் என்றும் அதற்கு கல்முனை மாநகர சபை  எவ்வித தடையும்  விதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.   விலங்குகளுக்கு நோய் பரவுமென கண்டறியப் பட்டால் அதற்கு எடுக்கப்பட வேண்டிய  முனெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவே வர்த்தமானி  அறிவித்தல் ஒன்று வெளிவந்துள்ளது. அதன் பிரகாரம

நாளை மின்சார தடை இல்லை .குடிநீர் ???

Image
நாளை 22.02.2014 இலங்கை மின்சாரசபை கல்முனைப் பிராந்திய பொறியியலாளர் பிரிவுக்குள் அமுல் படுத்தவிருந்த  மின் வெட்டு கட்டளை  நீக்கப் பட்டுள்ளதாகவும் மின்சாரம் தொடர்ந்து இயங்கும் எனவும்  கல்முனை பிராந்திய பொறியியலாளர் எம் .ஆர் .எம்.பர்ஹான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நாளை மின்சாரம்  காலை 7.30 தொடக்கம் மாலை 6.00 மணி வரை திருத்த வேலை காரணமாக தடைப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. மின்சார தடை  இடம் பெறாது என  இன்று மாலை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம். வானொலிக்கு  மின் பொறியியலாளர் எம் .ஆர் .எம்.பர்ஹான் அறிவித்தல் வழங்கி இருந்தார். இதே வேளை மின்சாரம் தடைப்பட்டால் குழாய் நீர் விநியோகமும் தடைப்படும் என நீர் வழங்கல்  அதிகார சபை  அறிவித்தல் விடுத்தது  எனினும் இதுவரை அவர்களது மறு அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

தேசத்துக்கு மகுடம்' கண்காட்சி இன்று ஆரம்பம்!

Image
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சி இன்று மாலை 5.00 மணிக்கு குளியாபிட்டியில் கோலாகலமாக ஆரம்பமாகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். “உன்னதமான சமாதானத்தின் ஊடாக வளமான தேசம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை 8ஆவது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை பார்வையிட வருகை தரவுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கண்காட்சிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். இன்று மாலை ஆரம்பமாகவுள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டியவில் அமைந்துள்ள வடமேல் மாகாண பல்கலைக்கழகம், தொழில்நுட்பக்கல்லூரி, குளியாபிட்டிய மத்திய மகா வித்தியாலயம் ஆகிய இடங்களை உள்ளடக்கிய 162 ஏக்கர் காணியில் இக்கண்காட்சி இடம்பெறுகிறது. ஜன

கற்பனை என்பது இறைவனின் கொடை

Image
கற்பனை என்பதை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமாக கொடுத்துள்ளான் . அந்த  வித்தியாசமான கற்பனையில் உருவான  ஒரு ஆக்கமே  இந்த வாத்து உருவமாகும் . கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமை புரிகின்ற . எஸ்.கிளமன்  என்பவர்  அலுவலகத்தில்  வீசப்பட்ட கழிவுக் கடதாசிகளை பயன்படுத்தி   தனக்கு கிடைத்த ஒய்வு நேரத்தில்   இந்த அழகான  வாத்து உருவத்தை   செய்து முடித்துள்ளார்   ஒரு கிலோ கழிவு கடதாசி இதற்கு  பயன்படுத்தி உள்ளதாகவும் மூன்று நாட்கள்  தேவைப் பட்டதாகவும்    கிளமன் கூறுகிறார்.

கல்முனை அஷ்ரப் வைத்திய சாலைக்கு உள்ளே தடைகள் ஏதும் இல்லை

Image
வைத்திய அத்தியட்சகர் நஸீர்  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு வைத்தியசாலை நிருவாகமோ அபிவிருத்திக் குழுவோ ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். நேற்று  மாலை வைத்தியசாலையின் சிறுவர் பராமரிப்புக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வைத்தியசாலைக் குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே வைத்திய அத்தியட்சகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு வைத்திய அத்தியட்கராகிய நானும் அபிவிருத்திக் குழுவும் தடையாக இருப்பதாக இணையத் தளங்களிலும் தினசரிப் பத்திரிகையிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. இச்செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. ஒருவர் தொடர்பாகவோ அல்லது ஒரு நிறுவனம் தொடர்பாகவோ குற்றச்சாற்றுகள் முன்வைக்கப்படுமாயின் அது தொடர்பான சரியான தகவல்கள் மற்றும் கருத்துக்கள் உரிய தரப்பிடமிருந்து பெறப்பட்ட பின்பே அது தொடர்பான செய்திக

வேட்பாளர் விபரப்பட்டியல் 4ம் திகதி விநியோகம்

Image
தென் மற்றும் மேல்மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான உத்தியோகபூர்வ வேட்பாளர் விபரப் பட்டியல்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. தேர்தல்கள் செயலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதுதவிர, வாக்கு அட்டைகளை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படவுள்ள நிலையில், மார்ச் 16 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பிரிவிற்கு 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

Image
நவீனத்துவ வளர்ச்சியின் பிடியில் கலாச்சாரத்தையும் மாணவர்களையும் காத்துக்கொள்வது பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாக இருக்கிறது . என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ . எம் . பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார் . கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும் , புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் புலமைப்பூக்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார் . அவர் மேலும் தெரிவித்ததாவது , பறக்கத்துள்ளாஹ்   மேலும் தெரிவித்ததாவது, இன்றைய நவீன காலத்தின் ஓட்டம் அனைவரையும் சுறுசுறுப்புடன் இயங்க வழியேற்படுத்தும் அதே வேளை அந்த நவீனத்துவங்களை சரியாக விளங்கிக் கொள்ளாமல் தவறான வழியில் கையாள்கையில் எம்மை பிழையன முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றது . ஒருமனிதனை இன்னொரு மனிதனைத் தொடர்பு கொள்வதற்கான ஊடகங்கள் எதுவ