.கல்முனையில் புதிய நிருவாகிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் வாழ்த்து

கல்முனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக கடமையேற்றுள்ள ஐ.எம்.ஹனீபா அவர்களுக்கு திகாமடுல்ல  மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்  கல்முனைத் தேர்தல் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எமது பிரதேச அபிவிருத்தியிலும் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதிலும் அதிக அக்கறை கொண்டு செயற்படுவர் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா. இவர் கல்முனை மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் முழு அர்ப்பணிவுடன் செயற்படுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள டாக்டர் ஏ.எல் அலாவுதீன் அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கல்முனை கரையோர மாவட்ட பிரதேச சுகாதார மேன்பாட்டுக்காக இவர் செயற்படுவார் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.
என்னால் கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இவ்விரு உயா் அதிகாரிகளின் வருகை மேலும் வலுச்சோ்க்கும் என நம்புகின்றேன். என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்