மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்
முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினை அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டியதோ ,கட்சிகள் நிறங்கள் சார்பாக பார்க்க வேண்டிய விடயமோ அல்ல . இது ஒரு சமுதாயத்தின் உரிமைப் பிரச்சினை மறிச்சிக்கட்டியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஆபத்து இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லீம்களையும் பாதிக்கக்கூடியது .எமது போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்ற அதே வேளையில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கட்சி நிறம் பார்த்து பிரித்து செயற்ப்படுவது சமுகத்திற்கே வெட்க கேடான விடயம் .
இவ்வாறு முசலி பிரதேச அபிவிருத்தி குழு ஆலோசகர் M.L.S.அலிகான் ஷரீப் தெரிவித்தார் மறிச்சிக்கட்டியில் கடந்த 20 நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பலர் இணைந்து கொண்டனர் .
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் C.M.முபீத் தலைமையில் சென்ற குழுவினர் அந்த மக்களுடன் இணைந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர் .
அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அலிகான் ஷரீப் மேற்கண்டவாறு பேசினார் அவர் அங்கு மறிச்சிக்கட்டி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
வட மாகாணத்திலுள்ள 26 பிரதேச செயலக பிரிவுகளின் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேசமாக முசலி பிரதேச செயலக பிரிவு காணப்படுகிறது
இங்கு 16000 முஸ்லிம் வாக்காளர்களும் 1200 தமிழ் வாக்காளர்களும் வாழுகின்ற ஒரு பிரதேசம்
எல்லா காலங்களிலும் அரசிற்கும் அரசு சார்பான கட்சிகளுக்கும் வாக்களிக்கும் மக்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் உடுத்த உடுப்புடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள்
1990இல் வெளியேற்றப்பட்டதன் பின்னர் 2006ஆம் ஆண்டு ஊரைப்பார்க்கும்
சந்தர்ப்பம் எமது மக்களுக்கு கிடைத்தது அந்த சந்தர்ப்பத்தில் எமது மக்களுக்கு குடியேறும் வாய்ப்பு இருக்கவில்லை அந்த நேரம் வீடுகள் ,பாதைகள் எல்லாமே காடாகவே காட்சி அளித்தது மீண்டும் 2009ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது நாளாந்தம் மக்கள் பிரதேசத்திற்குள் படிப்படியாக வரத்தொடங்கினார்கள் அவ்வாறு குடியேற்றப்பட்டதன் பின்னர் 2012ஆம் ஆண்டு ஒரு வர்த்தமானி அறிவித்தாலும் 2017இல் ஒரு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன வெளியிடப்பட்ட இந்த 2 அரச வர்த்தமானிகளும் முசலி பிரதேச மக்களை பொறுத்தவரை மிக பெரிய பயங்கரமானது.
முசலி பிரதேசத்தில் இருக்கின்ற மரிச்சிக்கட்டி உட்பட 1இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பை வன இலாகாவிற்கு அரச வர்த்தமானியில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெரும் நிலப்பரப்பில் முசலி பிரதேச மக்களுடைய வதிவிடங்கள்,வயல் நிலங்கள்,மேட்டு நில பயிர்ச்செய்கை காணிகள் ,கால்நடைக்கான மேய்ச்சல் தரை ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன
குறித்த வதிவிடங்கள் வயல் நிலங்கள் ,மேட்டு நில பயிர்ச்செய்கை காணி ,மேய்ச்சல் தரை என்பன வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருப்பதனால் மீண்டும் நாங்கள் அகதி வாழ்க்கைக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது எமது பிரதேசத்தில் குறித்த 4 விடயங்களும் இல்லாமல் போவதனால் இங்கு நாங்கள் வாழ்வதிலும் எந்த பிரயோசனமும் இல்லை
2017இல் மீண்டும் ஊரு அகதி வாழ்வு வாழ்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அறிவிப்பாடும் என்று அலிகான் ஷரீப் தெரிவித்தார் .1990ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த எமது வாழ்விடங்களும் வதிவிடங்களும் ,மேய்ச்சல் தரைகளும் எம்மிடம் வழங்கப்பட வேண்டும். 2012ஆம் ஆண்டிலும் 2017ஆம் ஆண்டிலும் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் முசலி பிரதேசத்தில் 7980 குடும்பத்தை சேர்ந்த 30000 மக்கள் தான் குடியேறி இருக்கிறார்கள் இன்னும் சரி பாதி மக்கள் வெளி மாவட்டங்களில் வாழ்கின்றார்கள் அவர்களுக்கான காணிகள் இன்னும் வழங்கப்படவில்லை அவர்களுக்கான வீட்டு திட்டமும் இல்லை அதனால் அவர்கள் தொடர்ந்தும் வெளி மாவட்டங்களிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் அந்த மக்களுக்கு இப்போது இந்த நல்லாட்சி அரசினால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்று வரை குடியேறியவர்களுக்கும் குடியேற இருப்பவர்களுக்குமான உட் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற 3 கோரிக்கைகளையும் முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது
இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பொது மக்கள் பொது அமைப்புக்கள் கலந்து கொண்ட போதிலும் இந்த விடயத்தை முஸ்லீம் அரசியல் தலைமைகள் இன்னும் கவனத்தில் எடுக்காதது கவலையாக உள்ளது. முஸ்லீம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தை யதார்த்தமாக புரிந்து கொள்ள வேண்டும் எங்களின் இந்த அவல நிலையை கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டு பாராளுமன்றத்தில் கதிரைகளை சூடாக்குவதன் மூலம் அல்லல் படும் மக்களின் பிரச்சினை தீர போவதில்லை இந்த விடயத்தை முதலில் முஸ்லீம் அரசியல் தலைமைத்துவங்கள் தெளிவாக புரிந்து கொண்டு செயலிறங்க வேண்டும்
பாராளுமன்றத்தில் இருக்கின்ற 22 பாராளு மன்ற உறுப்பினர்களுல் 5 பேர் மட்டுமே எம்மிடம் வந்து சென்றுள்ளனர் இந்த நாட்டில் ஆட்சியை நாங்கள் தான் மாற்றி அமைத்தோம் என்று தம்பட்டம் அடிக்கும் பெரும் கட்சி தலைவர்கள் இன்னும் எங்களது விடயத்தை கவனத்தில் எடுக்காதது எமக்கு கவலை அளிக்கிறது
எமது முசலி பிரதேச மக்களின் விடயத்தை பொறுத்தவரை அரசியலாகவோ ,கட்சிகளாகவோ ,நிறங்களாகவோ பார்க்க வேண்டாம் இது இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் சமூகத்தினுடைய உரிமை போராட்டம் இந்த நாட்டில் வாழும் 20இலட்சம் முஸ்லீம்களுடைய பிரச்சினை முசலி பிரதேச மக்களின் மரிச்சிக்கட்டியை விட்டுக்கொடுப்போமாக இருந்தால் இந்த நாட்டில் முஸ்லீம்கள் வாழும் பிரதேசம் எங்கும் இதே நிலை உருவாகும்
இந்த பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்து இந்த விடயத்தை முறியடிப்பதற்கான முதல் பணியாக மரிச்சிக்கட்டி பள்ளி வாசல் முன்பாக இந்த போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம் அதற்கு முஸ்லீம் அரசியல் தலைமைத்துவங்கள் அழைக்காமல் எங்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்று தர வேண்டும் ஆனால் பாராளுமன்றத்தில் உள்ள 16 தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் இங்கு வந்து எமக்கு ஆதரவு வழங்கி உள்ளனர் எமது பிரச்சினையை பாராளுமன்றத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்து செல்வோம் உங்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருவோம் என்று உறுதி வழங்கி உள்ளார்கள் . இந்த விடயம் தொடர்பாக எமது போராட்டம் விரிவு படுத்தப்படும் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் கொழும்பு வரை எடுத்து செல்லப்படும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் நீதி நியாயம் கோரி உயர் நீதி மன்றம் வரை சென்று மக்களின் துயர் துடைப்போம் என்றனர் .
Comments
Post a Comment