Posts

Showing posts with the label கடையடைப்பு

கல்முனை மாநகரம் முழுவதும் பூரண துக்க தினம்

Image
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இந்த சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் கல்முனை மாநகர பொதுச்சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண துக்க தினம் இன்று (23) செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது  கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம்,கல்முனை வர்த்தக சங்கம் மற்றும் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக நிலையம் இணைந்து இந்த துக்க தின கடை அடைப்பிற்கான அழைப்பை விடுத்தனர்  கல்முனை மாநகரம் முழுவதும் வர்த்தக நிலையங்கள்,பொதுச்சந்தை மூடப்பட்டு இருந்ததால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது  குண்டு தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் வர்த்தக நிலையங்களில் வெள்ளை கொடி கறுப்பு கொடி பறக்கவிடப்பட்டிருந்தன. அரசினால் பிரகடனப்படுத்தபட்டிருந்த துக்க தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று கல்முனையிலுள்ள அரச,அரச சார்பற்ற நிறுவனங்களில் காலை 8.30 தொடக்கம் 8.33 வரை மரணித்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு அரச...

மட்டக்களப்பு ஹர்த்தால் தொடர்பாக விசாரணை

Image
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இடம்பெற்ற ஹர்த்தாலையிட்டு மட்டக்களப்பு நகர் பகுதியில் பூட்டப்பட்டிருந்த இரு அரசாங்க வங்கிகள் மற்றும் பூட்டப்பட்ட கடைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் தலைப்பில் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இன்று 11ம் திகதி பூர்ண ஹர்தாலுக்கு துண்டுப்பிரசூரம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது  இதனைடைுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய இரு அரச வங்கிகள் மூடப்பட்டுள்ளது.  இது தொடர்பாகவும் மற்றும் பூட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கிண்ணியடி பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது 

திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு

Image
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க கோரி எதிர்வரும் திங்கட்கிழமை காலை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கூறியுள்ளார்.  இன்று (23) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.  அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும், மக்களுடைய சக்தி வௌிக்காட்டுவதற்காகவும் இந்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறியுள்ளார்.  நிதிச் செயலாளர், தொழில் அமைச்சர காமினி லொக்குகே மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியோரின் பங்களிப்பில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், எனினும் முதலாளிமார் சம்மேளனம் 600 ரூபா விலேயே இருப்பதாகவும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கூறியுள்ளார்.  எனினும் நாங்கம் 1000 ரூபா வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அதனை வலியுறுத்தும் விதமாக திங்கட்கிழமை காலை போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.  அன்றைய தினம் அனைவரும் வர்த்தக நிலையங்களையும் மூடி கருப்பு கொடியை தொங்கவிட்டு தமது எதிர்ப்பை வௌியிடுமாறு அமைச்சர் ஆறுமுகம்...

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிராக மருதமுனையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
மியன்மாரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகம் உலகையே உலுக்கி விட்டிருக்கும் நிகழ்வாகவே நோக்க முடிகிறது.  இதுவரையில் சிறுவர், பெண்கள் உள்ளிட்ட ஐயாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்ய்பபட்டிடருக்கின்றனர். இந்த வெறித்தனத்தைக் கண்டித்து இன்று(08) மருதமுனையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. மருதமுனை மஸ்ஜிதுல் நூர்  பள்ளி வாசலில் இன்று வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றிய பெருந் தொகையான முஸ்லிம்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் முன்பாக இருந்து ஆரம்பித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மருதமுனை மசூர் மௌலானா வீதி சந்தி வரை  பதாதைகளை ஏந்த எதில்ப்பு கோசங்களுடன் சென்ற ஆர்ப்பாட்டக் காரர்கள் வீதியை மறித்து சற்று நேரம் வீதி போக்குவரத்தை தடை செய்து எதிர்ப்பை வெளியிட்டனர் ரோஹிங்கிய மாநிலத்தில் இன்று இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனைக் கட்டுப்பாடடுக்குள் கொண்டுவர எவராலும் முடியாது என்ற அவலமே காணக்கூடியதாகவிருக்கின்றது. உயிர்ப் பாதுகாப்புக்காக தப்பிச் ...

நாட்டின் நிலை கருதி வேலைநிறுத்தத்தில் குதிக்க வேண்டாம்

Image
டெங்கு, சீரற்ற காலநிலை, போன்றவற்றால் நாடு முழுவதிலும் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், வேலைநிறுத்தத்தில் குதிப்பது நியாயமானதா என்பது தொடர்பில் மேலும் ஒரு முறை சிந்திக்குமாறு பாவனையாளர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.   அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் குறித்த வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.   சைட்டம் (SAITM) தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால்  நாளை (05) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கோரும் விதத்தில், குறித்த எழுத்து மூலமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க வைத்தியசாலைகள் அனைத்திலும், கட்டில் ஒன்றை பெற முடியாத அளவிற்கு, டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், தனியார் வைத்தியசாலைகளும் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிவதாகவும், அச்சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.   எனவே, நாட்டில் தற்போது காணப்படும் நிலையை கருத்தி...

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அப்பகுதி தமிழர்கள் எதிர்ப்பு

Image
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை கல்முனை நகரில் தமிழர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் அழைப்பின் பேரில் ஆனைக்குட்டி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழ் பிரிவு பிரதேச செயலகம் வரையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு பேரணியில் ததேகூவின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக மேற்கு பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வயல் நிலங்களில் பெரும்பாலானவை தமிழர்களுக்கு சொந்தமானவை எனறு கூறும் ஆர்ப்பாட்டகாரர்கள், நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்களை அபகர...

கோவணம் அணிந்து கொழும்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Image
வரவு செலவுத் திட்டத்தில், உர மானியம் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கோவணம் அணிந்து இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   கொழும்பு நகரில் இடம்பெற்ற இவ்வார்ப்பட்டம்  அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.   இதன்போது, விவசாயிகள் தங்களது விவசாய உபகரணங்களுடன், கோவணம் (கச்சை) அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், வரவு செலவுத் திட்டத்தில், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு கோசங்களை எழுப்பினர். அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரான நாமல் கருணாரத்ன இது குறித்து தெரிவிக்கையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உரமானியத்திற்கு பதிலாக வரவு செலவுத் திட்டத்தில் வருடாந்தம் ரூபா 25,000 வழங்குதவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூபா 7,000 நஷ்டத்தை விவசாயிகள் எதிர்நோக்குகின்றனர். மேலும், விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவில் ரூபா 50 குறைக்கப்பட்டுள்ளதோடு, விவசாயக் காணிகள், பன்னாட்டு நிறுவன...

கல்முனை இலங்கை வங்கி கிளையும் மூடப்பட்டு ஊழியர்கள் தொழில் சங்க போராட்டத்தில்

Image
அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்டத்தில் கூறப்பட்ட விடயங்களால் வங்கிகளின் வலையமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், இன்று செவ்வாய்க்கிழமை (15) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.  நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டிலேயே வங்கி வலையமைப்பு பாதாளத்துக்குள் சென்றுவிட்டது. மேலும், உள்நாட்டு தனியார் வங்கிகளுக்கு வரவு - செலவுத்திட்டத்தால் மரண அடி வீழ்ந்துள்ளதாகவும், ஊழியர் சேம இலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகிய கொள்ளையடிப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டதாகவும் வங்கிகளின் தொழிற்சங்கம் கூறியுள்ளது.  மேலும், அரசாங்கம் ஓய்வூதியத்தில் சுத்திரிப்பு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது

Image
பதிப்பு 02 நாளை (15) அரச மற்றும் தனியார் துறையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தேசிய தொழிற்சங்கங்களின் சம தலைவரும், ஒருங்கிணைப்பாளரும், அரசாங்க தாதியர்கள் சங்கத்தின் தலைவருமான சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.   பதிப்பு 01 நாளை (15) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்திலிருந்து தாங்கள் விலகுவதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ரயில் சேவை சங்கம் மற்றும் ஐ.தே.க.வின் தேசிய தொழிலாளர் சங்கம் என்பன அறிவித்துள்ளன.   தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாலேயே தாங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.   புகை பரிசோதனைக் கட்டணம் மற்றும் வாகன அனுமதிப்பத்திர கட்டணம் ஆகியவற்றை குறைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (14) ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   குறித்த விடயங்கள் உள்...

மூதூரில் கைவிடப்பட்டுள்ள வீதிகளை புனரமைக்கக் கோரி வெடித்தது மக்கள் போராட்டம் !!

Image
பிந்தி கிடைத்த செய்தி  ஆர்ப்பாட்ட இடத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான மஹ்ரூப் அளித்த வாக்குறுதிக்கமைய  ஆர்ப்பாட்டம்  கைவிடப் பட்டுள்ளதாக  அறிய முடிகிறது  மூதூரில்   கைவிடப்பட்டுள்ள   வீதி   விஸ்தரிப்புப்   பணியை   துரிதப்படுத்துமாறு   கோரி   இன்று   திங்கட்   கிழமை   முதல்   கால   வரயரை   இன்றிய     கவனயீர்ப்புப்   போராட்டமொன்று     இடம்பெற்று   வருகின்றது மூதூர்   நத்வதுல்   உலமா   அரபுக்   கல்லூரி   சந்தியில்   இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு   போராட்டத்தில்   நூற்றுக்கதிகமானோர்   கலந்து கொண்டு   இரண்டு   வருடகாலமாக   கைவிடப்பட்டிருக்கும்    பெரிய   பால சந்தியிலிருந்து    நகரத்தை    நோக்கிச்   செல்லும்   வீதி   விஸ் தரிப்புப் பணியை   துரிதப்படுத்துமாறு   கோரிக்கை   விடுத்தனர் . ...

150 தொழிற்சங்கங்கள் நாளை அடையாள வேலை நிறுத்தம்

Image
ரயில்வே, தனியார் பஸ்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு வரவு- செலவு திட்டத்தை எதிர்த்து 150 தொழிற்சங்கங்கள் நாளை (15) நாடு தழுவிய அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன. அரச, தனியார் மற்றும் அரச சார் துறைகளைச் சேர்ந்த மேற்படி தொழிற்சங்கங்களே நாளை வேலை நிறுத்தம் செய்யவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் சந்திப்பு சாதகமாக முடிவடையாததையடுத்தே ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் குதிக்கவிருப்பதாக தொழிற்சங்கங்களின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்ன பிரிய நேற்று தெரிவித்தார். இதனடிப்படையில், சுகாதாரத்துறை, தபால், அரச மற்றும் தனியார் வங்கிகள், அரச அச்சகம், அரசாங்க தொழிற்சாலைகள் என்பன நாளை (15)காலை 7 மணி முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளன. இதேவேளை, ரயில் மற்றும் தனியார் பஸ் சேவைகள் இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் தமது பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்க இருப்பதாகவும் சமன ரத்னபிரிய கூறினார். அரச, அரச சார்பு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள். கடந்த சனிக்கிழமை (12) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி ...

வடக்கு - கிழக்கில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு

Image
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை  வடக்கு - கிழக்கு இணைந்த பகுதிகளில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.  இந்தத் தகவலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இணைந்த வடக்கு - கிழக்கு பூராகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.   வர்த்தக சங்கங்கள், தனியார் போக்குவரத்துச் சங்கம் ,மற்றும் முஸ்ஸிம் மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.   குறிப்பாக வடக்கு கிழங்கில் உள்ள மீனவ சங்கங்கள், பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றினைந்து எமது அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒரு நாள் ஹர்த்தாலை இணைந்த வடக்கு கிழக்கு பூராகவும் நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்ற...

நாளை மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் - துண்டுபிரசுரங்கள்

Image
"புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா ஈனத்தனமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்கள் எதிர்ப்புக்களை வெளிக்காட்ட நாளை ஹர்த்தால் , கடையடைப்பு பணி பகிஸ்கரிப்பு என்பவற்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம் " என குறிப்பிட்டு துண்டுபிரசுரங்கள் மட்டக்களப்பின் பல பிரதேசங்களில் நாம் திராவிடர் அமைப்பினரால் விநியோகிக்கப்பட்டுள்ளது .

நிந்தவூரில் பதற்றம்: ரயர் எரிப்பு ஹர்த்தால் அனுஸ்டிப்பு

Image
நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.  அத்துடன், பிரதேசத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தல் மற்றும் கொள்ளையர்களை கண்டுபிடித்தல் தொடர்பில் விசேட விழிப்பு குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. இதன் பிரகாரம் இரவு 9 மணிக்கு பின்னர் வீடுகளிலிருந்து வெளியே செல்கின்றவர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துசெல்லவேண்டும் என்று அந்த குழு தீர்மானித்து. அந்த தீர்மானத்தை பள்ளிவாயில்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தது. இந்நிலையில், விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த நான்கு அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நேற்றிரவு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையா...

கல்முனை மாநகர பிரதேசத்தில் கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும்

Image
அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்க ளு க்கு ஏற்பட்டுள்ள அசாதாரன நிலமையினை கண்டித்து முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் இன்று (25.03.2013)  கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும் இடம்பெற்று வருகின்ற து. இதற்கமைவாக கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்தக நிலயங்கள் மற்றும் பொதுச் சந்தை என்பன மூடப்பட்டு காணப்படுகிறது. அத்தோடு வீதியில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது.   பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பின் மத அடக்கு முறைக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே   இவ்  அமைதியான எதிர்பு நடவடிக்கை மேற்கௌளப்படுகிறது. இந்த கடையடைப்பு ஹர்த்தாலுக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு   அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.