கல்முனை மாநகர பிரதேசத்தில் கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும்
அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரன நிலமையினை கண்டித்து முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் இன்று (25.03.2013) கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்தக நிலயங்கள் மற்றும் பொதுச் சந்தை என்பன மூடப்பட்டு காணப்படுகிறது. அத்தோடு வீதியில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது.
பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பின் மத அடக்கு முறைக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இவ் அமைதியான எதிர்பு நடவடிக்கை மேற்கௌளப்படுகிறது.
இந்த கடையடைப்பு ஹர்த்தாலுக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment