Posts

Showing posts from November, 2016

நற்பிட்டிமுனை ஹிஜா கல்லூரியின் O/L தின விழா

Image
நற்பிட்டிமுனை கிராமத்தின்  கல்வி நிலையை  பாதுகாத்து வரும்  ஹிஜா  கல்லூரியின் O/L தின விழா செவ்வாய்க்கிழமை (29)  நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா  மகா வித்தியாலய  ஆராதனை மண்டபத்தில் நடை பெறவுள்ளது . கல்லூரியின் அதிபர் W.ஐயூப்கான்  தலைமையில் நடை பெறவுள்ள  நிகழ்வில் நற்பிட்டிமுனை  உலமா சபை தலைவரும்  கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி  அதிபருமான மௌலவி ULA. கபூர்  பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக ALM.இப்ராஹீம் ,A.ஆப்துல்  கபூர் ஆகியோரும், விசேட அதிதிகளாக  ஓய்வு பெற்ற  நிருவாக உத்தியோகத்தரும்  நற்பிட்டிமுனை  முஸ்லிம்களின்  வரலாற்று நூல் ஆசிரியருமான S.அஸீஸூல்லாஹ் , ஆசிரிய ஆலோசகர் YAK.தாஸீம் , முகாமைத்துவ உதவியாளரும்  , ஊடகவியலாளருமான U.முகம்மது இஸ்ஹாக் ஆகியோரும்  விசேட அழைப்பாளர்களாக ஆசிரியர்களான IM.ஸூபி ,AA.நிமைரி ,KLA.கபூர்,CM.பலாஹி ,NM.சர்ஹான், மெளலவி ARM.ஜஹூபர் ஆகியோருடன்  கெளரவிப்புக்கான மாணவர்களான MIM.இஸ்பாக் ,MSM.சபீத் ,MF.சஷினி ,MS.அஸ்கா,ASF.ஷமா ,R.ஜஸானா ,S.நிருத்தனா  ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்  

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் நியமனம்

Image
(எம்.எம்.ஜபீர்) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்று பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் எதிர்வரும் 1ம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். நிர்வாகத்துறையில் சிரேஷ்ட அதிகாரியான இவர் 1995 ஆண்டு நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் உதவி ஆணையாளராக பணியாற்றினார்.அக் காலப்பகுதியில் குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தில் உதவி கட்டுப்பாட்டாளராக நீண்ட காலம் கடமையாற்றினார்.அத்துடன் உதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் சுவிஸ்சர்லாந்திலுள்ள ஜெனீவா தூதரகம்,கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு -குடியகல்வு திணைக்களத்திலும் உதவி கட்டுப்பாட்டாளராகவும் செயற்பட்டார்.பின்னர் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சில் உதவி செயலாளராக பணியாற்றினார். அரச தகவல் திணைக்கள பிரதிப்பணிப்பாளராக சில காலம் பணிபுரிந்த நேரம் இவர் சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலாளராக நியமனம் பெற்று சுமார் 10 வருடங்கள் கடமையாற்றினார். சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக

பொருட்கள்வி லை அதிகரித்தால் முறையிடலாம்

Image
கொண்டாட்ட காலம் ஆரம்பித்துள்ளதையடுத்து, ஒரு சில பொறுப்பற்ற வர்த்தகர்களால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்தார். எனவே, இவ்வாறானவர்களை கண்காணிக்கும் வகையில், உடனடி சுற்றிவளைக்கும் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களை தெளிவூட்டும் வகையிலான, நடமாடும் விளிப்பூட்டல் பிரிவொன்றையும் அமைத்துள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, விழாக்கால வேளையில்  முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட முறைப்பாடு சேவையையும் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அறிவுரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பின்வரும் தொலைபேசிகளின் மூலம் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார். மாகாணம்        தொலைபேசி இலக்கம் மேல்        0771088914/0771088907 தென்        0771088903 வடக்கு     0771088914 ஊவா

முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையும் பாராட்டப் படவேண்டியதே!!

Image
முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையும் பாராட்டப் படவேண்டியதே  என  மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நேற்று நடை பெற்ற  கிட்ஸ் வேர்ல்ட் முன்பள்ளி மாணவர்களின்  வருடாந்த கலை நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்து கொண்ட ஊடகவியலாளரும் கல்முனை வலயக் கல்விப்  பணிமனையில் கடமையாற்றுகின்ற சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான நளீம் எம் பதூர்டீன் தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியை திருமதி தஸ்னீம் பானு பௌஸ்  தலைமையில் நடை பெற்ற  பாலர் கலை விழாவில்  தொடர்ந்து  நளீம் எம் பதூர்டீன் உரையாற்றுகையில்  கடந்த காலங்களில் முன்பள்ளி பற்றிய தேடல் காணப்படவில்லை. இன்று இது பற்றிய தேடல் அதிகரிக்கப்பட்டு முன்பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு  வருகின்றன . இது காலத்தின் தேவையாகும்  பாலர்களின் பல திறமைகளை இனங்காண்பதற்கும் அத்திறமைகளுக்கு சரியான அத்திவாரத்தையிட்டு அரங்கேற்றுவதற்கும் நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்துவதற்கும் ஏற்ற இடமாகவும் தரம் ஒன்றுக்கு  மாணவர்களை தயார் படுத்தும் இடமாகவும் இன்று முன் பள்ளிகள் திகழ்கின்றன . இதனால்தான்   இன்று அரசின் கவனமும் இதன்பால்   ஈர்க்கப் பட்டு வருகின்றன . வீடுகளில் களியோடு விளையாடிய பிள்ள

புதிய அரசியல் கட்சியான ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதல் ஊடக சந்திப்பு

Image
ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது ஊடகச் சந்திப்பு இன்று இடம்பெற்றது. பத்தரமுல்லையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சி காரியாலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மலர் மொட்டு சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஜீ.எல். பிரிஸ் கலந்து கொண்டிருந்தார் என்பதோடு, கட்சியின் முதலாவது உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது கருத்து தெரிவித்து அக்கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ், தமது கட்சியில், முதல் கட்டமாக 100 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உறுப்புரிமைய அட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தங்களது கட்சியின் உறுப்புரிமை வழங்கும் நடவடிக்கை, நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதாக பசில் ராஜபக்‌ஷ  தெரிவித்தார்.

குருநாகல் , தல்ககஸ்பிடிய மாணவி பேச்சுப் போட்டியில் முதலிடம்

Image
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சிங்கள மொழி மூலம் நடைபெற்ற பேச்சிப் போட்டியில் குருநாகல் , தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி பாத்திமா இம்ரா இம்தியாஸ் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இம்மாணவி தல்கஸ்பிடியைச் சேர்ந்த ஆர்.எம். இம்தியாஸ் சம்சத் பேகம் ஆகியோரின் செல்வப் புதல்வியுமாவார். 

ஊடகவியலாளரின் புதல்வருக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பாராட்டு

Image
கல்முனை வலயக் கல்வி  அலுவலக  சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் நளீம் எம்.பதூர்டீன் ஆசிரியை மிஹ்றூனா ஆகியோரின்   புதல்வரான  ,     பதூர்டீன் மிஷால் அஹமட்  172 புள்ளிகளைப்  பெற்று  இவ்வருடம் தரம் ஐந்து  புலமைப் பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்துள்ளார் . அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  நிருவாக சபை உறுப்பினரான  நளீம் எம்.பதூர்டீன் அவர்களின் புதல்வர் மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலய மாணவரான . இவரை  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனமும் வாழ்த்துகின்றது. அத்துடன்  பயிற்றுவித்த ஆசிரியர்களையும் ,நிருவாகத்தையும் பாராட்டுகின்றோம் 

புத்தர் சிலைகளும் சிறுபான்மைவரலாற்றுக் கட்டுரையாளர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் யினரின் எதிர்காலமும்

Image
வரலாற்றுக்  கட்டுரையாளர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்  இலங்கை நாட்டில் பௌத்தர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவருகின்றார்கள் என்ற விடயம் அனைவரும் அறிந்த விடயமாக இருக்கிறது. ஆதலால் இதனை மீண்டும் அழுத்தமாக சொல்லவேண்டிய தேவையில்லை. கடந்த சில ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதக்குழுக்கள் முஸ்லிம்களைக் குறிவைத்து தமது தீவிரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. இலங்கை சிங்களவர்களின் நாடு என அழுத்திச் சொல்லும் அதேவேளை முஸ்லிம்களை இந்நாட்டைவிட்டு துரத்துவோம் அல்லது அழித்தொழிப்போம் எனவும் துவச வார்த்தைகளைக் கொண்டு காயப்படுத்தி வருகின்றார்கள்.  உண்மையில் இலங்கை சிங்களவர்களின் நாடு அல்ல. இது சிங்களவர்கள்இ தமிழர்கள்இ முஸ்லிம்கள்இ கிறிஸ்தவர்கள்இ இந்தியத் தமிழர்கள்இ மலேஇ பேகர் மற்றும் ஏனைய மதத்தவர்கள் என பல்லினம் வாழும் ஒரு நாடாகும். இப்பல்லினத்தவர்களில் பௌத்தர்கள் பெரும்பான்மையினர் என்பதே உண்மையாக இருக்கின்றது. பௌத்தர்கள் பெரும்பான்மை என்பதால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. இம்முதன்மைத் தான

கல்முனை இலங்கை வங்கியில் பண வைப்பு தன்னியக்க இயந்திர சேவை (CDM) ஆரம்பம்

Image
40 வருடங்களுக்கு  முற்பட்ட கல்முனை  இலங்கை வங்கி கிளை கட்டிடம்  புனரமைப்பு செய்யப் பட்டு  நவீன வசதிகளுடன்  இயங்க ஆரம்பித்துள்ளது. 35ஆயிரம்  வங்கி வாடிக்கையாளர்களுடன் இயங்கும் கல்முனை  இலங்கை வங்கி கிளை கல்முனை பிரதேசத்தில்  வாடிக்கையாளர்களின்  நன்மை கருதி 24 மணி நேரமும்  இயங்கக் கூடிய வகையில் பணபரிமாற்ற  சேவையும்  முதல் தடவையாக  கல்முனை பிரதேசத்தில்  பண வைப்பு தன்னியக்க  இயந்திர சேவையும்    (CDM) இலங்கை வங்கி கிளையில்   இன்று  (10) ஆரம்பித்து வைக்கப் பட்டது. கல்முனை  இலங்கை வங்கி கிளை முகாமையாளர்  எம்.ஏ.சத்தாரின்  வழி காட்டலில் பண வைப்பு தன்னியக்க  இயந்திர சேவை ஆரம்ப விழா  முகாமையாளர் ஐ.எம். முனவ்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப் பட்டன .அம்பாறை மாவட்டப்  பிராந்திய முகாமையாளர்  ஜீ.ஏ.எல்.ரத்னஜீ  மற்றும் பிரதம முகாமையாளர்  ஜெ.எம்.ஜீ.பண்டார  ஆகியோர்  அதிதிகளாக கலந்து கொண்டு  இயந்திரத்தை  திறந்து ஆரம்பித்து வைத்தனர்.  பணம் மீள பெறும்  இயந்திரம் (ATM) கல்முனை வங்கி கிளையில் மேலதிகமாக  இரண்டு   பொருத்தப்  பட்டு இயங்கவுள்ளதுடன்,  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை வளாகத்தில்

நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை சாதனையாளர்களுக்கு கெளரவிப்பு

Image
நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் தலைவரும் ,அமைச்சர் றிசாத் பதியுதீனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான சி.எம்.ஹலீம்   விடுத்த  அழைப்பை ஏற்று  நற்பிட்டிமுனைக்கு  இன்று  வருகை தந்த  கல்வி ராஜாங்க அமைச்சர்  வீ. ராதா கிருஷ்ணன்   தரம் ஐந்து  புலமை பரீட்சையில்  நட்பிட்டிமுனையில் சித்தி பெற்ற  10 புலமையாளர்களையும்  பாராட்டும்  மகிழ்ச்சி விழாவில்  கலந்து கொண்டு   புலமாயாளர்களுக்கு  பதக்கம் அணிவித்து  சான்றிதழ் வழங்கி  கற்றல் உபகரணமும் வழங்கி வைத்தார் . அத்துடன்   நற்பிட்டிமுனையில் சித்தியடைந்த 10 மாணவர்களையும்  அடுத்த மாதம்  பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு  கொழும்புக்கு  அவரது செலவில் அழைத்து வருமாறும்  அவர்களுக்கு கல்வி அமைச்சில்  பகல் போசனம்  ஒன்றை  ஏற்பாடு செய்வதாகவும்  மாணவர்களிடம் தெரிவித்தார்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் தலைவரும் ,அமைச்சர் றிசாத் பதியுதீனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான சி.எம்.ஹலீம் தலைமையில்  அவரது

நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும் நூல் வெளியீட்டு விழா

Image
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் கவிஞர் எம்.எல்.ஏ.கையூம் எழுதிய நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும் நூல் வெளியீட்டு விழா  கடந்த சனிக்கிழமை (05) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது . நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை தலைவரும் அட்டாளைச் சேனை கல்வியற்கல்லூரி விரிவுரையாளருமான மௌலவி ஏ.எல்.ந ஸீர் கனி தலைமையில் நடை பெற்ற  நூல் வெளியீட்டு விழா வைபவத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார் . நூலின் முதல் பிரதியை நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான சி.எம்.ஹலீம் பெற்றுக் கொண்டார் . நிகழ்வில் கெளரவ அதிதிகளாக  மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ,அடடாளைச்சேனை கல்வியற் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஆகியோரும் . விசேட அதிதிகளாக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலை தர நிர்ணய வைத்திய அதிகாரி எம்.சி.எம்.மாஹிர்  ,ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , தென்

மருந்து பொருட்களின் விலை தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

Image
மருந்து பொருட்களின் விலைகளில் ஏதேனும் குளறுபடிகள் இடம்பெற்றால், அதுகுறித்து பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விலைகள் குறைக்கப்பட்ட 48 வகை மருந்துகளின் விலைகளில் ஏதேனும் குளறுபடிகள் இடம்பெற்றால், அதுகுறித்து முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களை சுகாதாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தொலைபேசி இலக்கங்களான  0113 071 073  அல்லது  0113 092 269  ஆகியவை மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம். இந்தத் தொலைபேசி இலக்கங்கள் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை செயற்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவு இந்த முறைப்பாடுகளை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கைகளை எடுக்கும் என்று நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

MANS சமூக சேவை அமைப்பின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற நற்பிட்டிமுனை மாணவர்கள் 10 பேரை கெளரவிக்கும் நிகழ்வு

Image
இவ்வருடம் நடை பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற நற்பிட்டிமுனை மாணவர்கள் 10 பேரை கெளரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (04) நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது .  MANS சமூக சேவை அமைப்பின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான AHHM.நபாரின் வழிகா ட்டலில் MANS சமூக சேவை அமைப்பின் தலைவர் JM.அயாஸ் தலைமையில் நடை பெற்ற  இப்பாராட்டு விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் MS.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் , கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அதியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ,கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே .லியாகத் அலி ,கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி ,சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் , நற்பிட்டிமுனை உலமா சபை தலைவரும் கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி அதிபருமான யு.எல்.ஏ.கபூர் மௌலவி,  ஆகியோர் நிகழ்வில் கெளரவ அதிதிகளாகவும் கலந்து  கொண்டனர் 

இவரைக் காணவில்லை கண்டவர்கள் உதவுங்கள்

Image
நிந்வூர் - 3, இல 97,வைத்திசாலை வீதி, எனும் முகவரியை சேர்ந்த 34 வயதையுடைய சம்சுடீன் முகமட் முக்தார் (தௌபீக்) என்பவர் இன்று (04.11.2016) காலை 11.00 மணியளவில் கல்முனை வடக்கு ஆதார  வைத்தியசாலையில்  சிகிச்சை  பெற்று  வந்த  நிலையில் காணாமல் போயுள்ளார்.  இவரை காண்பவர்கள் தயவு செய்து உடன் இத் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தரவும் 773615080 / 755597974 / 771586011

சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எம்.இஸ்ஹாக் சமாதானத் தூதுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) ஊடகத்துறையின் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எம்.இஸ்ஹாக்கின் ஊடக சேவையை கௌரவித்து இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையம் “சமாதானத் தூதுவர்”  விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருது வழங்கிய நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (28-10-2016) கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தின் பிரதம நிறைவெற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட சுவிட்சலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  தூதுவர் கலாநிதி ஹெயின்ஸ் வொக்கர்  நெடர்கோண் இவருக்கான விருதை வழங்கி கௌரவித்தார். நற்பிட்டிமுனையைச் சேர்ந்த உமறுகத்தா ஆசியா உம்மா தம்பதிக்கு 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் மகனாகப் பிறந்தவர்  முகம்மட் இஸ்ஹாக். இவர் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியைக் கற்று பின்னர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் உயர் கல்வியைக் கற்றார். உய

நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும் நூல் வெளியீட்டு விழா

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் கவிஞர்  எம்.எல்.ஏ.கையூம் எழுதிய நெற்பிட்டிமுனையின்   வரலாறும் பண்பாட்டியலும்  நூல் வெளியீட்டு விழா  நாளை மறுதினம்  சனிக்கிழமை (05) நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெறவுள்ளது . நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை தலைவரும் அட்டாளைச் சேனை  கல்வியற்கல்லூரி  விரிவுரையாளருமான மௌலவி ஏ.எல்.நஸீர் கனி தலைமையில்  நடை பெறவுள்ள  நூல் வெளியீட்டு விழா வைபவத்தில்  கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார் . நூலின் முதல் பிரதியை நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின்  தலைவரும்  சமூக சேவையாளருமான சி.எம்.ஹலீம் பெற்றுக் கொள்வார் . நிகழ்வில் கெளரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் , மட்டக்களப்பு  கல்வியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ,அடடாளைச்சேனை கல்வியற் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஆகியோரும் . விசேட அதிதிகளாக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்திய

கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடை பெற்ற கௌரவிக்கும் நிகழ்வு

Image
அஸீம் கிலாப்தீன்  அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (OBA) ஏற்பாடு செய்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் , இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு  கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடை  பெற்றது இந் நிகழ்வில்   அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இணைப்பாளர் டாக்டர் ஷாபி ஆகியோர்  கலந்துகொண்டனர் 

சர்வதேச இளைஞர் பரிமாற்ற நிகழ்வில் பங்கேற்க சாய்ந்தமருதைச் சேர்ந்த ஸமான் முஹம்மட் ஸாஜித் பங்களாதேஷ் பயணம்

Image
(எம்.எம்.ஜபீர்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின் சர்வதேச இளைஞர் தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இளைஞர் பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கையிலுந்து 16 இளைஞர்கள் கலந்து கொள்ளுகின்றனர். இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சாய்ந்தமருதைச் சேர்ந்த ஸமான் மொஹமட் ஸாஜித்  தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 16ம் திகதி பங்களாதேஷ் பயணமாகவுள்ளார்.பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் 16ம் திகதி முதல் 24ம் வரை நிகழ்வு இடம்பெறும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து  இளைஞர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இவர் சாய்ந்தமருது ஜீனியஸ் 7 இளைஞர் கழகத்தின் தலைவரும் சர்வதேச பொது நலவாய  இளைஞர் மன்றத்தின் உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் இளைஞர் தன் ஆர்வாளர்கள் அமைப்பின் பிரதிநிதியுமாவார். இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் பலவேறு  நிகழ்வில் பங்கேற்றவர்.வியாபார முகாமைத்துவ பட்டதாரியுமான இவர் .கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.  இவர் ஸமான் பைரோஸ் இன் புதல்வரும் ஆவர்.

"நமுனை தசாவதார முத்துக்களுக்கு" நற்பிட்டிமுனையில் பாராட்டு விழா

Image
இவ்வருடம்  நடை பெற்ற  தரம் 5 புலமைப் பரிசில்  பரீட்சையில்  சித்தி பெற்ற  நட்பிட்டிமுனை  மாணவர்கள் 10 பேரை  கெளரவிக்கும்  நிகழ்வு  நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (04)  நற்பிட்டிமுனை அல் - அக்ஸா  மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில்  நடை பெறவுள்ளது.  பல சமூக சேவைகளைப்  புரிந்து வரும் MANS  சமூக சேவை அமைப்பின்  தவிசாளரும் முன்னாள் கல்முனை  மாநகர சபை உறுப்பினருமான AHHM.நபாரின்  வழிகாட்டலில்  MANS  சமூக சேவை அமைப்பின் தலைவர் JM.அயாஸ்  தலைமையில்  நடை பெறும்  இப்பாராட்டு விழாவில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் MS.அப்துல்  ஜலீல் பிரதம அதிதியாகவும் ,  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை  வைத்திய அதியட்சகர்  வைத்திய கலாநிதி  ஆர்.முரளீஸ்வரன் ,கல்முனை மாநகர சபை  ஆணையாளர் ஜே .லியாகத் அலி ,கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட்  கனி ,சம்மாந்துறை  உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் , நற்பிட்டிமுனை உலமா சபை  தலைவரும் கல்முனை அல் -ஹாமியா  அரபுக் கல்லூரி அதிபருமான  யு.எல்.ஏ.கபூர்  மௌலவி, சம்மாந்துறை  தொழில் நுட்ப கல்லூரி அதிபர் எம்.எம்.ஹசன் ஆகியோர்  நிகழ்வில் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவு

புதிய அரசியலமைப்பு வரைபு: இடைக்கால அறிக்கைகள் அடுத்த மாதம் வெளிவருகிறது

Image
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் இடைக்கால அறிக்கைகள் இரண்டு அடுத்த மாதம் வெளிவர உள்ளது. அடுத்த மாதத்தின் நடுப் பகுதியில் முதலாவது அறிக்கையும் மாதத்தின் இறுதியில் இரண்டாவது அறிக்கையும் வெளிவர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த மாதத்தின் நடுப் பகுதியில் உப குழுக்களின் தொகுக்கப்பட்ட அறிக்கையும் மாதத்தின் இறுதியில் வழிநடத்தல் குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட உள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் அரசியலமைப்பு நிர்ணயச் சபையாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 6 உப குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழி நடத்தல் குழுவும் அமைக்கப்பட்டது. உப குழுக்கள் 6 இனதும் அறிக்கைகள் தொகுக்கப்பட்டு முதலாவது இடைக்கால அறிக்கை அடுத்த மாதத்தின் நடுப் பகுதியான 16 ஆம் திகதி அளவிலும், வழி நடத்தல் குழுவில் ஆராயப்பட்ட அதிகாரப் பகிர்வு நாட்டின் தன்மை, தேர்தல் முறைமை, நிறைவேற்று அதிகாரம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை மாதத்தின் இறுதியிலும் வெ