பொருட்கள்வி லை அதிகரித்தால் முறையிடலாம்
கொண்டாட்ட காலம் ஆரம்பித்துள்ளதையடுத்து, ஒரு சில பொறுப்பற்ற வர்த்தகர்களால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்தார்.
எனவே, இவ்வாறானவர்களை கண்காணிக்கும் வகையில், உடனடி சுற்றிவளைக்கும் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களை தெளிவூட்டும் வகையிலான, நடமாடும் விளிப்பூட்டல் பிரிவொன்றையும் அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, விழாக்கால வேளையில் முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட முறைப்பாடு சேவையையும் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அறிவுரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், பின்வரும் தொலைபேசிகளின் மூலம் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மாகாணம் தொலைபேசி இலக்கம்
மேல் 0771088914/0771088907
தென் 0771088903
வடக்கு 0771088914
ஊவா 0771088895
கிழக்கு 0771088899
வட மத்திய 0771088907
சப்ரகமுவ 0771088904
வட மேல் 0771088902
மத்திய 0771088905
அத்துடன் பொதுமக்கள், பொருட்களை கொள்வனவு செய்யும்போது, பின்வரும் நடைமுறைகளை கைக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
1. நம்பிக்கையான இடத்தில் பொருட்களை கொள்வனவு செய்தல்.
2. பொருளின் தரத்தை அவதானித்தல்.
3. பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை மாத்திரம் செலுத்தி அதற்கான கொள்வனவு சிட்டையை பெறுதல்.
4. இலத்திரனியல் மற்றும் மின் உபகரணங்கள் தொடர்பில், உத்தரவாத பத்திரத்தை பெறுதல்.
5. பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை வாசித்தல்.
கொண்டாட்ட காலத்தில், பற்றாக்குறையின்றி அத்தியவசியமான உணவுப் பொருட்களை பாவனையாளர்களுக்கு வழங்குவதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும்.
Comments
Post a Comment