Posts

Showing posts from August, 2012

ஹரீசுக்கு கொலை அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்குமாறு அக்கரைப்பற்று பொலிசுக்கு முன் சத்தியாக்கிரகம்!

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீசை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். இன்று மாலை 3 .00 மணியளவில் வேட்பாளர் தவத்தின் வீட்டில் மதிய விருந்து உபாசாரத்தில் கலந்து விட்டு வரும் போதே அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கபபடுகின்றது. இத்தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் மயிரிழையில் உயிர் தப்பியதொடு அவரது வாகனத்திட்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் அமைச்சர் அதாஉல்லாவின் நெறுங்கிய குண்டர்களாலேயே மேற் கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்தார். இச்சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரிஸ், எம்.ரி.ஹசனலி ஆகியோரும் வேட்பாளர்களான ஏ.எல்.தவம், நசார் ஹாஜி, ஜப்பார் அலி, ஏ.எல்.எம்.நசிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உதவித் தவிசாள

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அபேட்சகர்கள் சத்தியப்பிரமானம் (பைஅத்)

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டம் சார்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டி இடும் அபேட்சகர்கள் சத்தியப்பிரமானம் (பைஅத்) செய்து கொண்டனர். மேற்படி நிகழ்வூ சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் வியாழன் இரவூ ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நீதி அமைச்சருமான றவூ+ப் ஹக்கீம் தலைமையில் கட்சி சார்பான உலமாக்கள் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 17 பேர் சத்திய பிரமானத்தை வாசித்து தலைவர் மற்றும் உலமாக்கள் முன்னிலையில் உள்ள உலமாக்கள் சாட்சியாக தங்களின் ஒப்பங்களை இட்டு கையளித்துள்ளனர்.  இந்த சத்தியபிரமானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.  அல்லாஹ்வின் பேரருளால் எதிர்வரும் 08ம் திகதி நடைபெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அல்லாஹ்வின் அருளும் மக்களின் செல்வாக்கும் நிறைவாகப் பெற்றுஇத் தேர்தலில் வெற்றி பெற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன். இத்தேர்தலில் வெற்றிபெறுமிடத்து மாகாண சபைக்கு உள்ளும் வெள

வானில் இன்று நீல நிலா!

Image
 நோன்மதி தினமான இன்று  இரவு வானில்  தோன்றும் பூரண நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த ஒகஸ்ட் மாதத்தில் முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. கடந்த ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் முறையும்- இன்று  வெள்ளிக்கிழமை இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது நிலா நீலமாகத் தோற்றமளிக்குமாம். வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள் புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும்   என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நீல நிலா 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை நீல நிலா மாலை 6.13 மணிக்குத் தொடங்கி- இரவு 7.28 மணி வரை தோன்றும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என்.ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்.

3மாகாணங்களிலும் சகல பாடசாலைகளும் 7ம் திகதி மூடப்படும்!

Image
கிழக்கு ,சப்ரகமுவ ,வடமத்திய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலையொட்டி தேர்தலுக்கு முதல் நாள் (07ம் திகதி) வெள்ளிக்கிழமை இம்மூன்று மாகாண சபைகளிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. செப். 8ம் திகதி சனிக்கிழமை மாகாண சபைத் தேர்தல் நடைபெற விருக்கிறது. ஆகவே அத்தினத்திற்கு முதல் நாளான 7ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென்று தேர்தல் ஆணையாள ர் கேட்டுக்கொண்டதற்கிணங்க  கல்வியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. கல்வியமைச்சு கிழக்கு மாகாண கல்வியமைச்சினூடாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தலை நேற்று அவசரமாக அனுப்பியுள்ளது. சகல அதிபர்களுக்கும் இதனை தெரியப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் கல்முனையில் தபால் வாக்களிப்பு

Image
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான தபால் மூல  வாக்களிப்பு அம்பாறையின்  கல்முனை பிரதேசத்தில் இன்றும் இடம் பெற்றது   கல்முனை மாநகர சபை மற்றும் பிரதேச செயலக தபால் மூல வாக்காளர்கள்  மாநகர ஆணையாளர் லியாகத் அலி மற்றும் பிரதேச செயலாளர் நவ்பல் முன்னிலையில் வாக்களித்தனர் 

அமைச்சர் றிசாத் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதி!

Image
மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜூட்சனை தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று தொடர்பிர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமறு அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நீதிச் சேவை ஆணைக்குழவினால் நியமிக்கப்பட்ட மேலதி நீரதவான் ரங்க திசாநாயக்க விடுத்த அழைப்பாணையினை ஏற்றுக் கொண்டு இன்று அமைச்சர் மன்னார் மஜிஸ்திரேட் நீதமன்றில் ஆஜரானார். கடந்த 17 ஆம்,18 ஆம் திகதிகளில் அமைச்சர் நீதவானுக்கு தொலைபேசியில் தீர்பொன்று குறித்து அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் மஜிஸ்திரேட் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் மன்னார் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். இதனையடுத்து அமைச்சரை கைது செய்யுமாறு கோரி நாடு தழுவிய முறையில் நீதிமன்ற பகிஷ்கரிப்பை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் அமைச்சர றிசாத் பதியுதீன் இன்று சிரேஷ்ட சட்டதரணிகள் சகிதம் மன்றில் ஆஜரானார். சிரேஷ்ட சட்டதரணிகளான அனுர மெத்தேகொட,எம்.எம்.சுகைர்,எம்.சஹீட்,கஸ்ஸாலி ஹூசைன்,,ஹூனைஸ் பாருக்,எஸ்.எல்.ஏ.அஸீஸ்,திருமதி.ஆபிய்யா,எஸ்.பாஹிம்,அஹமட் முனாஸ்,ரோஷன்,ஏ.எம்.றபீக்,சிராஸ் நுார்தின்,ஏ.லதீப்,உட்பட 20 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிக

அம்பாறை தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி...

Image
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  கல்முனை கிறீன்பீல்ட் வீடமைப்புத் திட்ட வளாகத்தில்   இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். 

மாணவர்களுக்கு ஆசிர்வாதம்

Image
இன்று  நடை பெற்ற ஐந்தாம் தர புலமை பரிசு பரீட்சைக்கு தோற்றிய கல்முனை கர்மேல் தேசிய பாடசாலை மாணவர்களை கல்லூரி பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள் ஆசிர்வதிப்பத்தையும் பரீட்சை எழுத மாணவர்கள் தயார் நிலையில் இருப்பதையும் காணலாம் 

கிழக்கில் அமீர் அலியை முதலமைச்சராக நியமிக்குமாறு நாம் கோருவோம்

Image
கிழக்கு மாகாண தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர் அமீர் அலியை முதலமைச்சராக  நியமிக்குமாறு நாம் கோருவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்  அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் . அவரிடம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்ற விடயம் தொடர்பாக கேட்டகப் பட்டபோது பதிலளித்த அமைச்சர் இன்று  முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது , நான் இனவாத கருத்தை முன்வைக்க தயாராக இல்லை , ஆனால் மாகாணங்கள் என்றுவரும்போது கிழக்கில் 42 வீதம் முஸ்லிம்கள் வாழ்வாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அங்கு மட்டுமே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக முடியும். வடக்கை பொறுத்தவரை அங்கு எதிர்காலத்தில் ஒரு தமிழர் ஒருவர் எப்படியும் முதலமைச்சராக  வரப்போகிறார் . நாட்டின் ஏனைய ௬ மாகாணங்களில் சிங்கள முதலமைச்சர்கள்  இருகின்றார்கள் , கிழக்கில் ஏற்கனவே ஒரு தமிழர் முதலமைச்சராக இருந்துள்ளார். அங்கு சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வருவது பொருத்தமற்றது  அந்த வகையில் இந்த முறை முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பது தவறானது அல்ல. தேர்தலின் பின்னர் எமது வேட்பாளரும் முன்னாள் அமைச்சரு

'தன்மானமுள்ள முஸ்லிமால் ஸ்ரீ.மு.காவிற்கு வாக்களிக்க முடியாது'

Image
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்கின்ற ஒவ்வெரு வாக்கும் முஸ்லிம் சமுகத்தின் குரல்வளையை அறுப்பதற்கு வைக்கின்ற கூரிய கத்தி என்பதை நினைத்துச் செயற்பட வேண்டும். தன்மானமுள்ளதொரு முஸ்லிமால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இத்தேர்தலில் வாக்களிக்க முடியாது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுகின்ற தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அட்டளைச்சேனை பிரதான வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  க.ஆசுகவி அன்புடீன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, வேட்பாளர்களான முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஸ்ர

பஷீர் சேகுதாவூத் பிரதியமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார்: அது தொடர்பில் அறிக்கை

Image
கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகப் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், அரசாங்கத்தில் வகிக்கும் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (23.08.2012) காலை அனுப்பிய அதே நேரம், இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆழ்ந்த சிந்தனையின் பின் பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்ய மனச் சாட்சியின்படி முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தவிசாளர் பஷீர் சேகுதாவூத், இராஜினாமாச் செய்வதனூடாக, அரச வளங்கள் பாவிக்கப்படாத, தூய்மையான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக, எதிர்வரும் கிழக்கு மாகாணச் சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இந்த இராஜினாமா முடிவு, சமுதாயத்தையும் கட்சியையும் விட்டு விலகி, அமைச்சர

நோன்புக்கவிதை

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க எல்லா காங்கிரஸ் யாவாரிகளும் வந்துட்டாங்கய்யாää வந்துட்டாங்க மாகாண சபை தேர்தல் வந்திடுச்சா வந்துட்டாங்கய்யாää வந்துட்டாங்க இப்ப அவங்க வெறுங் கையுடன் வரலீங்களா சமூசாää ரோல்ஸ்ää கஞ்சியுடன் வந்துட்டாங்கய்யாää வந்துட்டாங்க இப்தாருக்கு ஒண்டும் இல்லீண்டீங்களா அவங்க அதெல்லாம் கொண்ணாந்துட்டாங்கய்யாää கொண்ணாந்துட்டாங்க ஊரெல்லாம் அவங்க இப்தார் நடத்த வந்திருக்காங்கய்யாää வந்திருக்காங்க உங்கள இப்தாருக்குக் கூப்பிடுட்டாங்களாää நீங்களும் போங்கய்யா போங்க இப்தாரை முடிச்சுட்டீங்கண்ணா அந்தக் கையோட உங்கட ஓட்டையும் கேப்பாங்க நீங்க ஓட்டக் கொடுத்தீட்டீங்கண்ணாää அவங்க வெண்டிடுவாங்கய்யாää வெண்டிடுவாங்க எலெக்சன்ல நிம்மதியே போச்சு எண்டீங்கல்ல அவங்க போயிடுவாங்கய்யாää போயிடுவாங்க இந்தப் பக்கம் வரவே மாட்டாங்க அடுத்த எலெக்சன் வரப்போவுது எண்டுடிச்சா திரும்பவும் வந்துடுவாங்கய்யாää வந்துடுவாங்க இவங்கதான் காங்கிரஸ் காரங்க ஐயா அவங்க ஒண்ணுமே பண்ணவும் மாட்டாங்கää செய்யவும் மாட்டாங்க அன்வர் 

மூதூரில் மாபெரும் இப்தார்

Image
முன்னாள் எம் .பீ  திடீர்  ஏற்பாடு  முன்னாள் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக்  ஏற்பாடு செய்துள்ள  மாபெரும்  இப்தார் நிகழ்வும் இஸ்லாமிய பேருரையும்  நாளை திங்கட் கிழமை  மூதூர் பெரிய பாலம் அ ல்  மினன்  மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது  .5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வில் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு திடீர் தௌபீக் அழைப்பு விடுத்துள்ளார்

செய்யுங்கள் அல்லது செய்பவர்களை விடுங்கள்

Image
அதாவுல்லா  பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இன்று அரசாங்கம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  திங்கட்ழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தை பிச்சைக்காரனின் காலில் ஏற்பட்ட புண்ணை போன்று முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்துகிறது.  பள்ளிவாசல்களுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இன்று அரசாங்கம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு குழுவினர் செய்யும் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது. வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது போல், கிழக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்ட முடியாது. இங்கு மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்து கிழக்கு மக்களுக்கு செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.  கடந்த கிழக்கு மாகா

சந்தான்கேணி பொது விளையாட்டு மைதானத்தை தனியார் அபகரிப்பதை தடுத்து நிறுத்து

Image
கல்முனை சந்தான்கேணி பொது விளையாட்டு மைதானத்தை தனியார் அபகரிப்பதை தடுத்து நிறுத்துமாறு  கோரி  இன்று  வெள்ளிகிழமை கல்முனையில் விளையாட்டு கழகங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின .மைதானத்தில் ஒன்று சேர்ந்தவர்கள் l ஊர்வலமாக சென்று கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி இடம்  மகஜர் கையளிப்பதை காணலாம் 

மருதமுனை கடற்கரையில் கழிவகற்றல் கிரமம்

Image
அன்மையில் மருதமுனை கிராமத்தில் கடற்கரையில் அகாஸ் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையினால் அமைக்ப்பட்ட குப்பைத் தொட்டியில் இருந்து மாநகர சபை கழிவகற்றும் வாகனத்தின் மூலம் கழிவுகள் அகற்றப்படுவதை அடுத்து அகாஸ் அமைப்பின் செயலாளர் ஏ.எல்.எம்.பாறுக் கல்முனை மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர், சுகாதாரப்பிரிவு உத்தியோகத்தர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார். 

வாக்காளர் அட்டைகள் 17-30 வரை விநியோகம்

Image
கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையர் நாளை சந்திப்பு... கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நாளை வெள்ளிக்கிழமை, தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியற் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களை நேரில் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நாளை மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகும். இச்சந்திப்பு குறித்து தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும் சுயேச்சைக் குழுத் தலைவர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருப்பதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார். இச்சந்திப்பின் போது ஆணை யாளர் நாயகம் தேர்தல் முன்னேற்பாடுகள், பிரசாரங்கள், சட்டவிரோதச் செயற்பாடுகள், முறைப்பாடு, பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவர். மேலும் இக்கூட்டத்தில் வெளிநாட்டுக் கண்கா ணிப்பாளர்களை வரவழைப்பதா? என்பது குறித்த ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார். இதேவேளை, செப்