கிழக்கில் அமீர் அலியை முதலமைச்சராக நியமிக்குமாறு நாம் கோருவோம்
கிழக்கு மாகாண தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர் அமீர் அலியை முதலமைச்சராக நியமிக்குமாறு நாம் கோருவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் .
அவரிடம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்ற விடயம் தொடர்பாக கேட்டகப் பட்டபோது பதிலளித்த அமைச்சர் இன்று முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது , நான் இனவாத கருத்தை முன்வைக்க தயாராக இல்லை , ஆனால் மாகாணங்கள் என்றுவரும்போது கிழக்கில் 42 வீதம் முஸ்லிம்கள் வாழ்வாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டுமே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக முடியும்.
வடக்கை பொறுத்தவரை அங்கு எதிர்காலத்தில் ஒரு தமிழர் ஒருவர் எப்படியும் முதலமைச்சராக வரப்போகிறார் . நாட்டின் ஏனைய ௬ மாகாணங்களில் சிங்கள முதலமைச்சர்கள் இருகின்றார்கள் , கிழக்கில் ஏற்கனவே ஒரு தமிழர் முதலமைச்சராக இருந்துள்ளார். அங்கு சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக வருவது பொருத்தமற்றது அந்த வகையில் இந்த முறை முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பது தவறானது அல்ல.
தேர்தலின் பின்னர் எமது வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அமீர் அலியை முதலமைச்சராக நியமிக்குமாறு ஜனாதிபதியை கோருவோம் என்று தெரிவித்தார் . இன்று இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவிதமாக தெரிவித்தார் .
Comments
Post a Comment