Posts

Showing posts with the label மழை

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Image
நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் ...

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

Image
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறி...

வெள்ளத்தில் மூழ்கும் கல்முனை மாமாங்க வித்தியாலயத்துக்கு விடிவு

Image
வெள்ளத்தில் மூழ்கும் கல்முனை மாமாங்க வித்தியாலயத்துக்கு விடிவு கிடைத்துள்ளது . கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் கடந்த வாரம் வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது . இந்த செய்தி கல்முனை நியூஸ் இணையத்தளத்தில்  வெளிக்கொண்டுவரப்பட்டது . இந்த செய்திக்கு பலன் கிடைத்துள்ளது . கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்லூரி அதிபர் ஆகியோர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக  அம்பாரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பாடசாலையில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்க வடிகால் அமைப்பதற்கு 2.0மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளார் . பாராளுமன்ற உறுப்பினருக்கும் ,வலயக்கல்விப்பணிப்பாளருக்கும் கல்லூரி அதிபருக்கும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கும் இந்த செய்தியை ஊடகங்களுக்கு வெளிக்கொண்டுவந்த  கல்முனை நியூஸ் இணையத்தளத்துக்கும் பெற்றோர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர் 

கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் வெள்ளம் மாணவர்கள் சிரமம்

Image
கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கும்  கல்வி பயில்வதற்கு சிரமப்படுகின்றனர் . சுனாமி அனர்த்தத்தின் போது  முற்றாக அழிந்த இப்பாடசாலை புதிய கட்டிடங்களுடன்  தற்போது இயங்குகின்றது. மழை  ஓய்ந்திருந்த போதிலும் வெள்ளநீர் வடிந்தோட  வடிகால் வசதி இல்லாமையினால் பாடசாலை வளாகம் முழுவதும் நீர் தேங்கி காணப்படுகின்றது . இதன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. தொடர்ந்து நீர் தேங்கிக் காணப்படுவதால் பாடசாலை சூழலில் டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் சந்தர்ப்பமும் அதிகம் காணப்படுகிறது. வெள்ள நீர் தேங்கியுள்ள இப்பாடசாலையின்பால் கல்முனை மாநகர சபை ,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,கல்முனை வலயக்கல்வி அலுவலகம்  கவனம் செலுத்த வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளது . கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,சுகாதார வைத்திய அ...

இன்றைய காலநிலை

Image
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.  மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  ஏனை...

அக்குரண நகரம் மீண்டும் வெள்ளத்தில் சாரதிகள் மாற்றுவளியை பயன்படுத்தவும்

Image
கண்டி அக்குரண  நகரம் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி வழியான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழைக் காரணமாக குறித்த வீதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எனவே அக்குரண  நகரம் ஊடாக மாத்தளை செல்லும் வாகன ஓட்டுனர்கள் வத்தேகம ஊடான மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் வெள்ள அபாயம் உடன் விரைந்தார் கல்முனை மேயர் றகீப்

Image
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேச்சைக்குழு உறுப ்பினர்கள் விடுத்த அவசர வேண்டுகோளின் பேரில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் ஆணையாளர் எம்.சி.அன்சார் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை அங்கு விஜயம் செய்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

Image
நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் சாத்தியமும் உள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று மாலை கிழக்கில் வீசிய சூறாவளியில் நட்பிட்டிமுனை கிராமத்தில் பலத்த சேதம்

Image

வடக்கு,கிழக்கில் 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று கனத்த மழை

Image
வங்களா விரிகுடாவில் தாழமுக்கம் நகர்வு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நகர்ந்ததையடுத்து நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசும் எனவும் கடற் பிரதேசங்களில் கொந்தளிப்பும் 90 முதல் 100 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. இவற்றினூடான அனர்த்தங்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார். இதுவரை இலங்கையில் சுனாமி ஏற்படுமென்ற சாத்தியக்கூறுகள் பெருமளவில் கிடையாது என்றும் அவ்வாறு ஏற்படுமாயின் மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று(05) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் விளக்கமளித்த அவர்: வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கைக்கு கிழக்கே 900 கிலோ மீற்றர் தூரத்திலேயே தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இது படிப்படியாக பலம் ப...

காலநிலை பற்றி அனைவரும் கரிசனையாக இருப்பது அவசியம் - வளிமண்டலவியல் திணைக்களம்

Image
இன்றிரவு முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலநிலை பற்றி கரிசனையாக இருப்பது அவசியமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறித்துள்ளது, தாழமுக்கம் இலங்கையிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவை நெருங்கும் போது இந்த நிலைமை ஏற்படும். காங்கேசந்துறை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதி கொந்தளிப்பாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.எஸ்.எச்.பிரேமலால் தெரிவித்தார்.  மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் காற்றமுக்கம் இலங்கையிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்தை நெருங்கும் போது சில இடங்களுக்கு தாக்கம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    இன்றிரவு முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலநிலை பற்றி கரிசனையாக இருப்பது அவசியமாகும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாண மக்களுக்கு இதன் மூலம் கூடுதலான தாக்கம் ஏற்படலாம். இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணியின...

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

Image
நாட்டில் தற்சமயம் நிலவும் வலுவான காற்றுடன்கூடிய அடைமழையினால் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். காலி கம்பஹா பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் இடமபெற்றுள்ளன.   13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நான்காயிரத்து 886 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகும்.     இதுவரை ஐந்து பேர் காணாமற்போய்யுள்ளனர். 202 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.   பகுதியளவில் 3 ஆயிரத்து 236 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. ஒன்பது பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு;ள்ளன. இவற்றில் 179 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 36 பேர் இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.     இதேவேளை நுவரெலியா பிரதேசத்தில் 14 கிராமங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு;ளளன. இங்கு 51 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மண்சரிவினால்,42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என;று நுவரெலியா பிரதேச செயலாளர்  தெரிவித்தார்.  

இரண்டு மணித்தியால மழை கல்முனை நகரில் வெள்ளம் கரைபுரண்டது

Image
இன்று காலை(27) அம்பாறை மாவட்டத்தில் பெய்த பெரு மழையினால் கல்முனை நகரத்தின் பிரதான வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கின.  இதன் காரணமாக கல்முனை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பொது மக்களுக்கு அசௌகரியமும் ஏற்பட்டன.  இன்று காலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையான இரண்டு மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பெரு மழை பெய்ததது. இதனால் பல தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கின. கல்முனை பொலிஸ் நிலைய வீதி மற்றும் கல்முனை ஹிஜ்ரா வீதி என்பன முற்றாக வெள்ள நீர் பாய்ந்ததால் போக்குவரத்து சேவைகள் நெரிசல் காணப்பட்டதுடன் அரச  அலுவலகங்களுக்கு செல்லும் உத்தியோகத்தர்களும் பரீட்சைக்கு சென்ற மாணவர்களும் சிரமத்துடன் சென்றதை அவதானிக்க முடிந்தது.  இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசியதால் மின் தடையும் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேங்களிலும் ஏற்பட்டிருந்தன.

அனர்த்த பிரதேசங்களை பார்வையிட செல்லவேண்டாம்

Image
வெள்ளம் மற்றும் மண்சரிவு இடம்பெற்ற பிரதேசங்களை பார்வையிட செல்லவேண்டாம் என்று அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இது மற்றுமொரு அனர்த்த நிலைமையாகும் என்பதினாலும் நிவாரண சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமையக்கூடும் என்பதன் காரணமாக அரசாங்கம் அனர்த்த பகுதிகளை பார்வையிட செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கல்முனையில் 1700 ஏக்கர் நெற்செய்கை அழிவு; நஷ்டஈடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Image
கல்முனையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தமக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி நேற்று திங்கட்கிழமை கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள வயல் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கல்முனைப் பகுதியில் சுமார் 1700 ஏக்கர் விவசாயக் காணிகளில் நெற்செய்கை பண்ணப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பெய்த மழையினால் அவை நீரில் மூழ்கி முற்றாக அழிவடைந்துள்ளன என்றும் அதனால் தாம் பெரும் நஷ்டமடைந்திருப்பதாகவும் இதற்காக தாம் பெற்ற கடன்களைக்கூட செலுத்த முடியாமல் திண்டாடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அது மாத்திரமல்லாமல் இந்த விவசாயத்தை நம்பி வாழ்கின்ற நூற்றுக்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நிர்க்கதியடைந்திருப்பதாகவும் இதன்போது விவசாயிகள் சுட்டிக்காட்டினர். சுமார் 15 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தமக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட மகஜர் ஒன்றை கல்முனை பிரதேச செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கல்முனை மாநகர பிரதி மேயர் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா ?

Image
கல்முனை இஸ்லாமாபாத் வீட்டு திட்டத்துக்கும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கும் செல்லும் வீதி  மழை  காரணமாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வீதியை புனரமைத்து தருமாறு வலயக் கல்விப் பணிப்பார்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் கல்முனை மாநகர பிரதி மேயர் அப்துல் மஜீதிடம்  கோரிக்கை விடுத்தார் . வலயக் கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைய குறித்த வீதியை புனரமைப்பதாக பிரதிமேயர்  உறுதியளித்தார் . அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படுமா என்ற அங்கலாய்ப்பில் இஸ்லாமாபாத் மக்களும் ,வலயக் கல்வி அலுவலக  அதிகாரிகளும் காத்திருக்கின்றனர் 

அனைத்து பாகங்களிலும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி தொடரும்!

Image
வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் (15) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.  மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகங்களில் இன்னும் அதிகமான மழைவீழ்ச்சி பதியப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மன்னார் அம்பாந்தோட்டை கொழும்பு காலி முதலான கடலோரங்களிலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் காற்றின் வேகம் 70 - 80 கிலோ மீற்றரளவில் வீசக்கூடுமென்பதால் பொதுமக்கள் மீனவர்கள், கடற்துறை சார்ந்தவர்கள் என அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரதான நகரங்களின் காலநிலை நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பா...

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான மழைக்கு சாத்தியம்?

Image
நாட்டின் கிழக்கு பாகங்களில் இன்று (28) அதிகளவிலான மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது எனவும் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரதான நகரங்களின் காலநிலை நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 29 செல்சியஸ் பாகையாகவு...

கிழக்கு கடலோரங்களில் இடியுடன் மழை பெய்யலாம்?

Image
கிழக்கு கடலோரங்களில் இன்று (20) இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்கு கடலோரங்களில் மழைக்கான காலநிலையே தொடர்வதுடன், கடலோரங்கள் அனைத்தும் கடினமாகவே காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மன்னார் அம்பாந்தோட்டை ஊடாக கொழும்பு காலி மாத்தறை வரையான கடலோரங்களிலும் மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது. மேலும் தென்மேல் கடலோரங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் குறிப்பாக மாலை 04 மணியிலிருந்து 08 மணி வரைக்கும் இடையிலான காலப்பகுதியில் இடியுடன் கூடிய சிறிதளவிலான மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு கரையோரமாக காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படலாம் எனவும் இக்காற்றின் வேகம் மணிக்கு  20 - 25  கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஊவா மாகாணங்களில் மாலையில் மழை பெய்யலாம்!

Image
வானிலையில் ஏற்பட்ட கலப்பு வெப்பநிலை கால மாற்றத்தினால் இன்று (16) நாட்டின் அனைத்து பாகங்களிலும் இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஊவா மாகாணங்களில் மாலையில், இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் நிலவுகிறது. அத்துடன் அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவிலும் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் மேல் வடமேல் மாகாணங்களில் மற்றும் தென் மாகாணங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படும் எனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. பிரதான நகரங்களின் காலநிலை நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 31 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25...